நடுவானில் புயலில் சிக்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம் – பயணிகள் காயம்

மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் நோக்கி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், புயலில் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் பயங்கரமாக குலுங்கியதில், குறைந்தது 40 பயணிகள் காயமடைந்தனர். அதில், 12 பேர் படுகாயமடைந்ததாகவும், தற்போது அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண் குமார் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் கேபின் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து, 14 பயணிகள் காயமடைந்துள்ளனர். சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் இன்று ன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உன் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மே … Read more

மேட்ரிமோனியல் மூலம் வந்த மாப்பிளை ப்ரொபைல்; மகள் செய்த காரியம்; கோபமான தந்தை; வைரல் பதிவு!

மேட்ரிமோனியல் தங்களில் வரன் தேடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அதன் வழியே சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு வெற்றிகரமாக பொருத்தமான திருமண வரன்களையும் கண்டடைந்து விடுகின்றனர். சில நேரங்களில் வேடிக்கையாகவும் அமைந்து விடுவதுண்டு. பெங்களூருவைச் சேர்ந்த Salt என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் உதிட்டா பால் (Udita Pal). இவரின் அப்பா மாப்பிள்ளை ப்ரொபைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உனக்குப் பொருத்தமாக இருப்பார். பேசி பார் என உதிட்டாவுக்கு அனுப்புகிறார். உதிட்டாவும் பேசியுள்ளார். அதன் பிறகு தந்தை கோபமாக … Read more

காட்டுமன்னார்கோவில் | கிராமசபைக் கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கியதாக துணைத்தலைவர் கைது

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கிராமசபைக் கூட்டத்தில் தாக்கிய புகாரில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார். காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கண்காணிப்பு அலுவலராக பங்கேற்றார். கூட்டம் தொடங்கிய உடன் ஊராட்சி செயலர் வரவு செலவு கணக்கை வாசித்துள்ளார். அப்போது திடீரென எழுந்த ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் சரண்யா, வட்டார வளர்ச்சி … Read more

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி: 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழந்தார். பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கான்ஹாகட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டம் கரிவலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தேவநந்தாவும் அவருடைய பள்ளியில் படிக்கும் 18 பேரும் ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே ஒன்றின்பின் ஒருவராக … Read more

மே 31ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள்: பொது மக்கள் அதிர்ச்சி!

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என்று அண்மையில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதேசமயம், தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 3,324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நான்காவது நாளாக தொடர்ந்து 3000க்கும் மேல் … Read more

உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள சீன டயர்கள்

உக்ரைனில் ரஷ்யப் படைகள் விரைவாக முன்னேறுவதற்கு தடையாக சீனாவின் டயர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் கவச வாகனங்கள் உள்ளிட்ட போர் வாகனங்களில் தரம் வாய்ந்த டயர்களை பொருத்துவதற்கு பதிலாக சீனாவின் மலிவான டயர்களை ரஷ்ய ராணுவத்தின் ஊழல் அதிகாரிகள் வாங்கி பொருத்தியுள்ளனர். இதன் காரணமாக ரஷ்ய கவச வாகனங்கள் செல்லும் போது கடினமான நிலப்பரப்பு மற்றும் சேற்றில் சிக்கி கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்கள் வெய்யிலில் நிறுத்தும் போது டயர் கிழியவும் … Read more

ஆட்டோவின் மேற்கூரையில் நடமாடும் தோட்டம் அமைத்த ஓட்டுநர்.!

டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் நடமாடும் தோட்டத்தை உருவாக்கி உள்ளார். மேற்கு டெல்லியின் திமார்பூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் அலங்கார மூங்கில், ரோஜா உள்ளிட்ட அலங்கார செடிகளும், 25 வகையான காய்கறி செடிகளையும் நட்டு வளர்த்து வருகிறார். தனது தேவைக்கு காய்கறிகளை எடுத்துக் கொள்வதாகவும், அதே நேரம் ஆட்டோவில் வரும் பயணிகளை குளிர்ச்சியான சூழலில் வைத்திருக்க முடிவதாகவும் ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தற்போது குமாரின் இந்த யுக்தி … Read more

லண்டனில் இருந்து வாட்ஸ் அப்பில் வந்த ஒரு புகைப்படம்! லட்சக்கணக்கில் பணத்தை இழந்த தமிழர்… எச்சரிக்கை செய்தி

லண்டனில் இருந்து விலையுயர்ந்த பரிசு வரும் என் நம்பி தமிழர் ஒருவர் லட்சங்களில் பணத்தை இழந்துள்ளார். தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஓங்கநாதன். முதுகலை பட்டம் முடித்து விவசாயம் செய்கிறார். இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 14ஆம் திகதி ஒரு எண்ணிலிருந்து ‘வாட்ஸ் ஆப்’பில் ஒரு புகைப்படம் வந்தது. அதிலிருந்தவர் தான் தாமஸ் ஆண்டர்சன் எனவும், லண்டன் ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தார். அதை நம்பி ஓங்கநாதன் அவருடன் பழகியுள்ளார். வேலையில்லாததால் உதவும்படியும் கூறியுள்ளார். அதற்கு மருத்துவர், … Read more

பார்த்திபன் – ரஹ்மான் கூட்டணியில் ‘இரவின் நிழல்’! டீசர் வெளியீடு!

இயக்குநர், நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் டீசர் வெளியானது. அதில் ரஹ்மானின் இசை ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு, பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘ஒத்த செருப்பு’ படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல ‘இரவின் நிழல்’ படம் ‘சிங்கிள் ஷாட்’டில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. ரஹ்மானின் இசையுடன் தொடங்கும் … Read more