காங்கேசந்துறையிலிருந்து – பொத்துவில் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக .தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுவதாகவும் தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

Tamil News Today Live: இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி!

Go to Live Updates Tamil Nadu News Updates: இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண பொருள்களை வழங்க அனுமதியளித்தது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம். மத்திய அரசின் நிவாரண உதவயோடு சேர்த்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு – 2 பேர் கைது நாமக்கல்லில் காளிசெட்டிபட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு. சிறுமியை … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (02.05.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 02/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 15/14/12 நவீன் தக்காளி 50 நாட்டு தக்காளி 48/45 உருளை 25/18/16 சின்ன வெங்காயம் 35/30/25 ஊட்டி கேரட் 35/30/25 பெங்களூர் கேரட் 15/10 பீன்ஸ் 60/50 பீட்ரூட். ஊட்டி 30/28 கர்நாடக பீட்ரூட் 18 சவ் சவ் 20/18 முள்ளங்கி 17/15 முட்டை கோஸ்15/13 வெண்டைக்காய் 35/30 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி … Read more

“டீச்சர் போஸ்டிங் போட்டுத் தர்றேன்” – ரூ. 3 கோடி பண மோசடி புகார்; திருச்சி பிஷப் தலைமறைவு?

திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின் (டி.இ.எல்.சி) பிஷப் ஆக இருப்பவர் மார்ட்டின். இவர் மீது மதுரை கிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனைச் சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “2009-ம் ஆண்டு திருச்சி டி.இ.எல்.சி பிஷப் மார்ட்டின், `திருச்சபை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திருச்சபையின் செலவினங்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் ஏற்பாடு செய்து கொடுங்கள்’ என்றார். அதற்கு பிரதிபலனாக திருச்சபையின் கட்டுப்பாட்டில் … Read more

செம்பியம் பகுதியில் துணிக்கடையில் கத்தி முனையில் கொள்ளை.. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

சென்னை செம்பியம் அருகே துணிக்கடையில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, துணிகளை திருடிச் சென்ற 4 இளைஞர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்த ஜாவித் என்பவர், எம்.பி.எம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு வந்த 3 பேர், கத்தியைக் காட்டி மிரட்டி துணிகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஜாவித் பணம் தர மறுத்த நிலையில், கத்தியால் தாக்கிவிட்டு துணிகளை எடுத்து … Read more

தமிழக பாஜகவில் நிர்வாகிகள் மாற்றம்: மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜகவுக்கு புதிய மாவட்டத்தலைவர்களை நியமனம் செய்துமாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, பணியாற்றாத நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்தார். இதற்காக, நிர்வாகிகளின் பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வந்தார். இந்த சூழலில், சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பல இடங்களில் அதிக வாக்குகள் பெற்றது. இருப்பினும், ஒருசில மாவட்டங்களில் எதிர்பார்த்த வாக்குகளை பெற முடியவில்லை. எனவே, ஏற்கெனவே சிறப்பாக பணியாற்றி … Read more

அவதூறு வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி ராகுலுக்கு ரூ.1,500 அனுப்பிய மனுதாரர்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில், வழக்கு தொடர்ந்தவர் விசாரணையை ஒத்திவைக்கும்படி தொடர்ந்து கூறியதால், அவர் நீதிமன்ற உத்தரவுப்படி ராகுலுக்கு வழக்கு செலவு தொகையாக ரூ.1,500 அனுப்பினார். கடந்த 2014-ம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம் தானே பிவாண்டி டவுன்ஷிப் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் உள்ளது என்றார். இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, … Read more

அமைச்சரவை மாற்றம்: அமித் ஷாவுடன் விவாதிக்கும் முதல்வர்!

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் அல்லது விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றதால், அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது. தற்போது, தேர்தல் முடிந்து 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எழுப்பத் தொடங்கியுள்ளனர். அம்மாநிலத்தை பொறுத்தவரை அமைச்சரவையில் ஐந்து இடங்கள் காலியாக … Read more

அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளிக் காற்றால் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை உருக்குலைந்து சேதம்.!

அமெரிக்கா கான்சாஸ் மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளிக் காற்று நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை உருக்குலைத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. ஆண்டோவர் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய சுறாவளிக் காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்தடையால் இருளில் மூழ்கினர். மேலும் சுறாவாளிக் காற்றில் வீடுகள் உருக்குலைந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். சுழன்றடித்த காற்று குப்பைக் கூளங்களை சுழட்டி வாரி எடுத்துக் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி … Read more

கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக தவறுதலாக வெறிநாய் கடி தடுப்பூசி.. நிகழ்வு குறித்து விசாரணைக்கு உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லக்கிம்பூர் கேரி அருகே உள்ள நயபூர்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வந்திருந்தார். ஏற்கனவே கோவின் தளத்தில் அவர் பதிவு செய்திருந்ததால், அதற்கான சான்றிதழை பெறுவதற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது, ஏற்கனவே அவருக்கு முதல் டோஸ் வெறிநாய் கடிக்கான மருந்து தவறுதலாக செலுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போடப்பட்டவரின் உடல் நலத்திற்கு … Read more