ஒமைக்ரான் வகைகளால் புதிய அலை? ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோகனஸ்பர்க் : ‘ஒமைக்ரான் வைரசின் மரபணு மாறிய இரண்டு வகை வைரஸ்கள், புதிய அலைக்கு வழிவகுக்ககூடும்’ என, தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவில் கடந்தாண்டு உருவான ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.அதனால் உலகம் முழுதும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன்பின், ஒமைக்ரானின் மரபணு மாறிய புதிய வகை வைரஸ்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. கடந்த மாதம் ஒமைக்ரானில் இருந்து பி.ஏ., … Read more

புதிய பஜாஜ் பல்சர் 125 ஸ்பை படங்கள் வெளியானது

சமீபத்தில் விற்பனைக்கு வந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் N250 மற்றும் F250 மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய வரிசையிலான பஜாஜ் 125 முதல் 200 வரையிலான மாடல்களுக்கு இணையான தோற்றத்தை பெறும் முதல் மாடலாக பல்சர் 125 அல்லது பல்சர் 150 மாடல் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள சாலை சோதனை ஓட்ட படங்களில் இந்த பைக்கின் தோற்ற அமைப்பில் குறிப்பாக பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் ஏர் கூல்டு எஞ்சின் ஆக அமைந்து … Read more

தமிழக தலைமைச் செயலாளரை இலங்கைக்கு அனுப்பலாம்: ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலைமையைக் கருத்தில் கொண்டு, அங்கே உள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான … Read more

“பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு கவுரவம் அளிக்கும்; அதை அமல்படுத்துங்க” – அஸ்ஸாம் முதல்வர்

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். மோடி..! இந்த நிலையில், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, டெல்லியில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “நான் சந்தித்த அனைத்து இஸ்லாமியர்களும் பொது சிவில் சட்டத்தை … Read more

சாலை விதிமுறை மீறல் குறித்து ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்.. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் புது முயற்சி

சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பார்த்தால், புகைப்படம் எடுத்து சென்னை போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைதளமான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். போகுவரத்து போலீசார் மற்றும் சிசிடிவி கேமிராக்கள் மட்டுமல்லாது, உடன்வரும் … Read more

ஜாதி மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவம்: 2 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜாதி மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் 2 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25-ம் தேதி ஜாதியை அடையாளப்படுத்தும் வகையில் கையில் கயிறு கட்டுவது தொடர்பாக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த பாப்பாக்குடியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு … Read more

சமையல் எண்ணெய் கையிருப்பு போதிய அளவுக்கு உள்ளது: மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட சில காரணங்களால் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய வசதியாக பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிடம் போதுமான அளவுக்கு சமையல் எண்ணெய் கையிருப்பில் உள்ளது என மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இப்போது இந்தியாவிடம் 21 லட்சம் டன் … Read more

ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். வருகிற 4ஆம் தேதி வரை ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, முதல்நாடாக ஜெர்மனி செல்லவுள்ளார். இந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். உக்ரைன் மீதான ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய … Read more

கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டுள்ளதாக கடும் வருத்தத்தில் ரணில்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் செயற்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.  இவ்வாறான இக்கட்டான நிலையிலும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏப்ரல் மாதத்தை வீணடித்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.  அனைத்துக் கட்சிகளின் பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே மேசையில் ஒன்று கூடி இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது முக்கியமாகும். ஏப்ரல் மாதத்தின் முதல் … Read more

பாகிஸ்தான் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து.!

பாகிஸ்தானின் நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25க்கும் மேற்பட்ட ஆயில்டேங்கர் லாரிகள் சேதமடைந்தன. தருஜாபா கிடங்கில் இருந்து பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் டேங்கர் லாரிகளுக்கும் தீ பரவியது. இதைத் தொடர்ந்து, பெரும் தீப்பிடித்ததில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகையுடன் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில், அந்த 25 டேங்கர் லாரிகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து … Read more