நியூசிலாந்தில் ஒமைக்ரோனின் டீயு – 4 வகை கொரோனா பாதிப்பு

நியூசிலாந்தில் ஒமைக்ரோனின் AB-4 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலக நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ஒன்பது இலட்சத்து 33 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சு … Read more

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.! கிருஸ்துவ போதகருக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்.!

கேரள மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்துவ மத போதகர் தாமஸ் பரேக்குளமூக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு அமைப்பின் பள்ளியின் கிளை, கேரள மாநிலம் கொல்லத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் போதகர் தாமஸ் பரேக்குளம் (35 வயது). இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் தங்கியிருந்த 16 வயதான 4 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை … Read more

இலங்கைக்கு உதவி; தமிழக அரசு செய்ய வேண்டியது இதுதான்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பு சென்ற அண்ணாமலை அங்கிருந்து நுவரெலியாவிற்கு பயணம் செய்கிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடும் சுழ்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம் செய்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சமூக ஊடகங்களின் வழியாக திறந்த கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசு இலங்கைக்கு செய்ய வேண்டிய உதவி … Read more

ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது; மார்பக வித்தியாசம் இயல்பானதுதானா? காமத்துக்கு மரியாதை – S2 E18

பெண்கள் தங்கள் உடல் சார்ந்த சந்தேகங்களையும் பிரச்னைகளையும் அவ்வளவு சுலபத்தில் யாரிடமும் பேசி நிவர்த்தி செய்துகொள்ள மாட்டார்கள். அவற்றில் ஒன்றுதான், `ஒரு பக்க மார்பகம் பெரிதாக இருக்கிறது. மறுபக்கமோ அதைவிட சிறிதாக இருக்கிறது. இது பிரச்னையா அல்லது இயல்பானதா’ என்கிற சந்தேகம். இந்த வாரம் இதுபற்றி பேசவிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். பாலியல் மருத்துவர் காமராஜ் வளைந்த ஆணுறுப்பு; இயல்பானதா அல்லது பிரச்னையா? காமத்துக்கு மரியாதை – S2 E17 “ஒரு சில பெண்களுக்கு மார்பகங்கள் ஒரு … Read more

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் ஆஸ்பத்திரிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர்..

கோயம்புத்தூரில், மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் ஆஸ்பத்திரிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரஸ்வதி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது கணவர் மதிமொழியை பிரிந்து வாழ்ந்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன் சரஸ்வதி பணியை விட்டு நின்ற போதும், அவரது கணவர் அடிக்கடி மருத்துவமனைக்கு போன் செய்து ஊழியர்களை திட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு போன் செய்த மதிமொழி … Read more

கஞ்சா ஒழிப்பில் தீவிரம் காட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கஞ்சா ஒழிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய இரண்டாம் கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சாவும், 6,319 குட்கா வணிகர்கள் கைது செய்யப்பட்டு 44.90 டன் குட்காவும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை … Read more

உலகின் மிக உயரமான இயேசு சிலை இதுதான்!

பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் உள்ள கொர்கொவாடோ மலை மீது 125 அடி உயர இயேசு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக நிறுவப்பட்ட இந்த சிலை பிரேசிலின் நாட்டின் அடையாக சின்னமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ரியோவில் உள்ள இயேசு சிலையைவிட உயரமான சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற நகரத்தில் உள்ள மலை மீது 141 அடி உயர இயேசு சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. … Read more

AC Jacket: சிவாஜி பட ரஜினி மாதிரி ஏசி ஜாக்கெட் வேண்டுமா!

கோடை காலத்தில் மக்கள் தங்களையும் தங்கள் வீட்டையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பல வழிகளை நாடுகின்றனர். வீட்டில் இருப்பவர்கள் ஏர் கூலர்கள் அல்லது குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்தி தங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கிறார்கள். இருப்பினும், வேலைக்காக வீட்டை விட்டு வெளியே இருப்பவர்கள் சூரியன் உமிழும் வெப்பத்தில் இருந்து தப்ப முடிவதில்லை. இந்த வெயிலில் இருந்து எப்படி தங்களைக் காத்துக் கொள்வது என்பதுதான் அவர்களிடத்தில் ஒரே கேள்வியாக உள்ளது. வெயிலின் தாக்கத்தினால் மக்கள் உடனடியாக சோர்ந்து போகின்றனர். இதனால் … Read more

வெளியில் தலைகாட்ட முடியாமல் பதுங்கியுள்ள ராஜபக்ஷர்கள் – தலைமறைவாக செல்லும் பசில்

இலங்கையில் இம்முறையில் முக்கிய தலைவர்களின்றி ஆளும் கட்சியின் மே தின பேரணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பேரணியில் 500 பேர் வரையிலான ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்றதாக தெரிய வருகிறது.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மே தின பேரணி இன்று பிற்பகல் நுகேகொட ஆனந்த சமரகோன் வெளிப்புற திரையரங்கில் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் பங்கேற்பின்றி இந்த மே தினக் … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

அண்மைகாலமாக உள்ளூர் அளவிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இதனைக் கொரோனா 4ஆம் அலையின் தொடக்கமாக கருத முடியாது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்த கவுன்சிலின் கூடுதல் இயக்குநரான சமிரன், சில பகுதிகளில் தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பரிசோதனை குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். மேலும், சில மாவட்டங்களில் மட்டும் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு, நாடு முழுவதும் சீராக பரவவில்லை என்பதால் அதனை … Read more