காதலனுக்காக தியேட்டர் வரை சென்ற நயன்தாரா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இப்படத்திற்காக எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீடு உள்ளிட்ட எந்த பிரமோஷனையும் நடத்தவில்லை. ஒரு சில யூடியூப் சேனல்களுக்கு மட்டும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி பேட்டிகளைக் கொடுத்து மற்றவர்களைப் புறக்கணித்தனர். இப்படத்திற்காக பத்திரிகையாளர் காட்சி வைக்கவும் விக்னேஷ் சிவன் விரும்பவில்லை என்று தகவல். ஆனால், படம் … Read more

கடன் வாங்கியோருக்கு ஷாக் நியூஸ்.. இனி EMI-ம் அதிகரிக்குமே..!

நாட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், வங்கிகள் பலவும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் விதமாக MCLR விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இது வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு கூடுதல் சுமையை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கல்லா கட்டிய அரசு.. ஏப்ரலில் இதுவரை இல்லாதளவுக்கு உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்! பணவீக்கம் அதிகரிப்பு நாட்டில் பணவீக்க விகிதம் என்பது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இது … Read more

மலையக மே தின நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்

மலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளர் தின நிகழ்வுகளில் தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வு,கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் இன்று (01) நடைபெற்றது.இதன்போது திரு. அண்ணாமலை  பொன்னாடை  போர்த்தி கௌரவிக்கப்பட்டார்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

மதுரை மெடிக்கல் காலேஜில் சமஸ்கிருத உறுதிமொழி: நேரடியாக கண்டித்த அமைச்சர் பி.டி.ஆர்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கச் செய்ததால் அதிருப்தி அடைந்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அந்த நிகழ்ச்சியில் நேரடியாக கண்டித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர். … Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி., அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு.!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை தடுப்பதற்காக, 4 அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள இயங்கிவரும் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அண்மையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபை கூட்டத்தில் கூட, முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் நேரடியாக பொதுமக்கள், ‘ரேஷன் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்குவதாகவும், அதனை நாங்கள் … Read more

`முஸ்லிம்கள் கருவுறாமல் இருக்கும் மருந்தை உணவில் கலக்கிறார்கள்' -சர்ச்சை பேச்சால் கைதான பி.சி.ஜார்ஜ்

இந்து மகா பரிஷத் அமைப்பின் சார்பில் திருவனந்தபுரத்தில் ‘அனந்தபுரி இந்து மகா சம்மேளனம்’ கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிற மதங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் பேச அழைத்திருந்தனர். அதில் கிறிஸ்தவ மதம் சார்பில் கேரள ஜனபக்‌ஷம் கட்சியை நடத்திவரும் முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் கலந்துகொண்டு பேசினார். அவர் முஸ்லிம்கள் பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் இந்து மாநாட்டில் பேசுகையில், “கேரளத்தில் 1958-ல் கிறிஸ்தவர்கள் … Read more

வடசென்னை அனல்மின் நிலைய முதல் அலகில் 210 மெ.வா. மின்னுற்பத்தி நிறுத்தம்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதல் நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுதைச் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். Source link

உயர்நீதிமன்றத்தில் தமிழ்; சட்டப்பேரவையில் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அதற்கான நேரம் வந்து விட்டதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரமணாவும் தெரிவித்திருக்கிறார். இருவரது கருத்துகளும் வரவேற்கத்தக்கவை. டெல்லியில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்களின் கூட்டு … Read more

யாழ். சென்ற போது கண் கலங்கிய அமெரிக்க தூதுவர் (video)

இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது.   இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.  இலங்கையில் உள்ள வசதிப் படைத்தவர்களே தற்போதைய சூழல் திக்குமுக்காடிப் போயிருக்கும் நிலையில் சாதாரண மக்கள் நிலை மிக அவல நிலைக்குரியது.  இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த பல வருடங்களாக தமது உறவுகளைத் தொலைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வடக்கு – கிழக்கு தாய்மார்களின் நிலையும் மிகவும் வேதனைக்குரியதாகவே மாறியிருக்கின்றது.   தற்போதைய  இக்கட்டான நிலையில் தமது வாழ்வாதாரத்தையும் கொண்டு செல்ல … Read more

மிண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

அண்மைகாலமாக உள்ளூர் அளவிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இதனைக் கொரோனா 4ஆம் அலையின் தொடக்கமாக கருத முடியாது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்த கவுன்சிலின் கூடுதல் இயக்குநரான சமிரன், சில பகுதிகளில் தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பரிசோதனை குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். மேலும், சில மாவட்டங்களில் மட்டும் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு, நாடு முழுவதும் சீராக பரவவில்லை என்பதால் அதனை … Read more