மே 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சென்னை: மே 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் வருகையின் போது அவரை சந்தித்து இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் முன் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓராண்டில் ரூ.2,666 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

திமுகவின் ஓராண்டு ஆட்சியில் 2,666 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேலூர் திருவுடையம்மன், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் உள்ளிட்ட ஆலயங்களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மூவாயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகள் மட்டுமே மீட்கப்பட்டதாகவும் ஆனால் ஓராண்டு திமுக ஆட்சியில் இரண்டாயிரத்து 666 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் … Read more

நீதி மறுக்கப்படுவது அராஜகத்திற்கு வழிவகுக்கும்: தலைமை நீதிபதி ரமணா

நீதி மறுக்கப்படுவது அராஜகத்திற்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்திற்கான புதிய வளாக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய நீதிபதி ரமணா, சுதந்திரத்திற்குப் பிறகு நவீன இந்தியாவின் தேவைக்கு ஏற்ப நீதித்துறையினர் உட்கட்டமைப்பு மாற்றியமைக்கப்படவில்லை என்று கூறினார். மாவட்ட நீதித்துறையே, நீதியின் அடித்தளம் என்று குறிப்பிட்ட அவர், அடித்தளம் வலுவாக இருந்தால்தான் ஒட்டுமொத்த அமைப்பும் செழிக்க முடியும் என்றார். இந்தியாவின் நீதி வழங்கும் முறை மிகவும் சிக்கலானதாகவும், … Read more

டெர்ம் பாலிசி குறித்து திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு” டெர்ம் பாலிசி பத்தி திருவள்ளுவர் எழுதுன குறள் இது. ஓய்வு பெற எண்ணியிருக்கும் வயதுக்கு மேல் ஆயுள் காப்பீடு தேவையில்லை (60 முதல் 65 வயது வரை போதும்), விபத்தில் இறந்தால் இரட்டிப்புக்காப்பு எனும் Rider தேவையில்லை. Express Pay (மொத்த ப்ரீமியத்தையும் 8-10 வருடங்களில் கட்டி முடிப்பது) Return of Premium (கட்டின பணம் திரும்பக் கிடைக்கும்) போன்ற Riderகள் அனாவசியமானவை. வெறும் டெர்ம் பாலிசி போதும் … Read more

கார் விபத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி… அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம் 

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரும், 2 முறை உலக கோப்பை வின்னருமான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், நேற்றிரவு கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது சொந்த மாகாணமான குயின்ஸ்லாந்தில் டவுன்ஸ்வில்லுக்கு வெளியே சைமண்ட்ஸ் ஓட்டிய கார் விபத்துக்குள்ளாகியது. சம்பவ இடத்திலே 46 வயது மதிப்புத்தக்க ஆண் இறந்ததை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர். காவல் துறை கூற்றுப்படி, இரவு 11 மணிக்கு ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்றுகொண்டிருந்த கார், சாலையை விட்டு வெளியேறி உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. … Read more

வாரணாசி ஞானவாபி மசூதியில் திறக்கப்பட்ட 3 அறைகள்.! உள்ளே என்ன இருந்தது? வெளியான பரபரப்பு தகவல்கள்.!

வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் பாகங்கள் இந்து கோவில் முறைப்படி, குறிப்பாக ஞானவாபி மசூதி சுற்றுச்சுவரில் அமைந்துள்ள சிங்கார கௌரி அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி 5 பெண்களால் நீதிமன்றத்தில் மனு அளிப்பட்டது. இது சம்மந்தமான அந்த வழக்கில், ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மசூதியில் வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு செய்ய அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் குழு … Read more

வார ராசி பலன் 15-05-2022 முதல் 21-05-2022 | Vaara Rasi Palan | Weekly RasiPalan | இந்த வாரம் எப்படி?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். #vaara_rasi_palan | #Weeklyhoroscope | #Astrology #வாரராசிபலன்கள் #வார ராசிபலன் vaara rasi palan, vaara rasi palan in tamil, indha vaara rasi palangal, indha vaara rasi palan, vaara palan,vakra palngal, magara rasi,indha vaaram, vaara raasi palan, vaara raasipalan, vara rasi palan,vara rasipalan,rasi palangal,indhavaara rasi palan,vara … Read more

போலி ஆவணம் கொடுத்து ரூ. 2.76 கோடி கடன் மோசடி.. பணமோசடியில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி கைது..!

சென்னை தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து 2 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் இரு முக்கிய குற்றவாளிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகரில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு, M.R.Garden service நிறுவன உரிமையாளர்கள் என கூறி ரவி, மஞ்சு உள்ளிட்டோர் கடன் பெற்று, அதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடத்தின் ஆவணத்தை அடமானம் வைத்துள்ளனர். அந்த … Read more

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 15, 16-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைபெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 17, 18-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார். Source link