பிக்பாஸ் தாமரையின் அம்மாவிற்கு புது வீடு கட்டித் தரும் ஜேம்ஸ் வசந்தன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தாமரைச்செல்வி. இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற மாட்டேன் என்று கூறி கடைசிவரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் தாமரைச் செல்வியின் தாய் குடிசை வீட்டில் வசித்து வருவது சமீபத்திய பேட்டி மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வீடு கட்டி கொடுக்க முடிவு … Read more

தேடி தேடி ஆடம்பர வீட்டை வாங்கும் இந்திய தொழிலதிபர்கள்.. ஒரு வீடு ரூ.1000 கோடியாம்..!

இந்தியர்களுக்கு மண்ணுக்கும் பொன்னுக்கும் மீதான ஆசை எப்போதும் குறைவது இல்லை, பிட்காயின், NFT என எவ்வளவு புதிய முதலீடுகள் வந்தாலும் புதிய வீட்டை வாங்கப்படும் எண்ணிக்கையும் சரி, தங்கம் வாங்கும் அளவீடும் சரி இந்தியாவில் குறைவது இல்லை. இது சாமானியர்களுக்கு மட்டும் அல்லா பல முன்னணி நிறுவனத் தலைவர்கள், டெக் நிறுவன ஸ்டார்ட்அப் முதலாளிகள் என அனைவருக்கும் பொருந்தும் என்பதைச் சமீபத்தில் ஆடம்பர ரியல் எஸ்டேட் விற்பனை குறித்த தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. முகேஷ் அம்பானியும் … Read more

கலைஞர் வீதிக்கு எதிராக போராடிய பா.ஜ.க; சிலையை திறக்கும் வெங்கையா: ட்விட்டர் டிபேட்

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை வரும் 28-ந் தேதி துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அரசியல் ரீதியாவும் நிர்வாக ரீதியாவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 26-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் சென்னை ஓமாந்தூரார் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று … Read more

அக்கா மகனின் நண்பர்களுடன் வாக்குவாதம்.. இளைஞர் படுகொலை..!

அக்காள் மகன் சரியாக படிக்காத இதை தட்டிக்கேட்ட தாய்மாமன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது அக்காள் மகன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுடன் நட்பாக பழகி வந்தார். மேலும், அவர்களோடு சேர்ந்து கொண்டு பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.  இதனை அறிந்த பிரபாகரன் அக்காள் மகனான அகிலனின் நண்பர் சுரேந்தர் இடம் இது பற்றி … Read more

“மத்திய அரசு தெலங்கானாவை `மாற்றாந்தாய்' மனப்பான்மையோடு நடத்துகிறது!" – கே.டி.ராமா ராவ்

தென் மாநிலமான தெலங்கானாவுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக 27 கேள்விகளை அவர் அமித் ஷாவிடம் எழுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “மத்திய பா.ஜ.க அரசு தென் மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. மக்கள் இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். தெலங்கானா மக்கள் மத்தியில் பா.ஜ.க வெறுப்பைப் பரப்புகிறது. மக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், … Read more

இலங்கை அகதிகள் முகாமில் குளியலறையில் கேமரா பொருத்திய இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, யூடியூப் பார்த்து தானியங்கி கேமராவை தயாரித்த இளைஞர் அதனை குளியலறையில் பொருத்தி பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்ற போது போலீசில் சிக்கினார். இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் தனது வீட்டின் வெளியே இருந்த குளியலறைக்கு சென்ற போது, அறையின் உள்ளே மேற்பகுதியில் கருப்பு நிறத்தில் சிறிய அளவிலான கேமரா இருப்பதை கவனித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்ததில் அதே குடியிருப்பில் வசிக்கும் விஜயகுமார் என்பவன் … Read more

புதுச்சேரி ஒயிட் டவுன் வீதிகளில் காவி நிறத்தில் பெயர் பலகை: கருப்புநிற வண்ணம் பூசி அழித்து மர்ம நபர்கள் எதிர்ப்பு

புதுச்சேரி: ஒயிட் டவுன் வீதிகளில் காவி நிறத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளில் இரவில் கருப்புநிற வண்ணம் பூசி அழித்து மர்ம நபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சாலைகள் மேம்படுத்துதல், பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைப்பு, பெரிய வாய்க்கால்களுக்கு சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஒயிட் டவுன் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. … Read more

அடுத்தது கோதுமை; சமையல் எண்ணெயை தொடர்ந்து கடும் விலை உயர்வு: உற்பத்தி பாதிப்பு; ஏற்றுமதி நிறுத்தம்

புதுடெல்லி: உலகளாவிய சூழலால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை விண்ணை தொட்டும் வரும் நிலையில் முக்கிய உணவுப்பொருளான கோதுமை விலையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த சூழலில் விலையேற்றத்துக்கான காரணம் மற்றும் அது எப்போது குறையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் … Read more

கொழும்பின் பல பகுதிகளில் வீதிகளை மறிக்கும் மக்கள்: பொலிஸார் களத்தில் (Videos)

கொழும்பு ஆமர் வீதியில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எரிவாயு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  கடந்த 9ஆம் திகதி நாட்டில் அசாதாரண நிலை ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலை வேளையில் தளர்த்தப்பட்டு பிற்பகல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  இவ்வாறான சூழ்நிலையில் இன்று … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயத் தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் அதிபராக இருந்த ஷேக் கலிபா பின் சையத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதனை அடுத்து, 61 வயதான ஷேக் முகமது பின் சயத், ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது அதிபராக தேர்வு செய்யப்பட்டதாக உயர்மட்ட கவுன்சில் அறிவித்தது. இவர் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் அமீரகத்தின் ராணுவத்தில் துணை தளபதியாக பணியாற்றியுள்ளார்.  மேலும், அந்நாட்டு ராணுவத்தில் திட்டமிடல், பயிற்சி, பாதுகாப்பு … Read more