ரூ.1.70 கோடி தங்கம் பறிமுதல்| Dinamalar

விழுப்புரம்: மேல்மலையனுார் பெட்ரோல் பங்க்கில், 53 லட்சம் ரூபாய் கையாடல் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொளத்துாரைச் சேர்ந்தவர் அருள்மொழிவர்மன், 34; இவர், 12 ஆண்டுகளாக மேல்மலையனுாரில் பெட்ரோல் பங்கு நடத்துகிறார்.இந்த பங்க்கில், செஞ்சி தாலுகா சண்டிசாட்சியைச் சேர்ந்த நாகராஜன், 42, என்பவர் 10 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக, 53 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை அவர் கையாடல் செய்தது சமீபத்தில் தெரிய வந்தது.சுருட்டிய பணத்தை கேட்ட அருள்மொழிவர்மனை, … Read more

மார்க் லிஸ்டோசெல்லாவின் கடும் முயற்சி.. டாடா மோட்டார்ஸ்-ன் பெரும் நஷ்டம் குறைப்பு.!

இந்தியாவின் மிகப்பெரிய வணிக ராஜ்ஜியமான டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த மார்ச் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. மார்ச் காலாண்டில் இந்த நிறுவனம் 1032.8 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் இதன் நஷ்டம் 1516.14 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே மார்ச் காலாண்டில் 7605.40 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மார்ச் காலாண்டில் நஷ்டத்தினை கண்டிருந்தாலும், கடந்த ஆண்டினை, கடந்த காலாண்டினை காட்டிலும் … Read more

Tamil News Today Live: டெல்லியில் வணிக வளாகத்தில் தீ விபத்து – 27 பேர் பலி

Go to Live Updates Tamil Nadu News Updates: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில்நிலையம் அருகே உள்ள 3 மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு. 12 பேர் படுகாயம். 20க்கும் மேற்பட்ட வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விவகாரத்தில் கட்டிட உரிமையாளர்கள் ஹரிஸ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 2 நாள்களுக்கு மழை தமிழ்நாட்டில் அடுத்த … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்‌.!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார். கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார். மேலும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் உயர் கல்வித்துறை … Read more

`அன்று அதிகார போதை… இன்று அகதி வாழ்க்கை' – மகிந்த ராஜபக்சேவின் அலங்கோல காலச்சக்கரம்!

2009 மே மாதத்தில், ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், `சிங்களர்களின் மாமன்னன்’ எனச் சிங்கள மக்களால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப்பட்டார் மகிந்த ராஜபக்சே. சரியாக 13 ஆண்டுகள் கழித்து, 2022 மே மாதத்தில், அதே சிங்கள மக்களால் பிரதமர் பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார் அவர். அன்று அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த மகிந்த, இன்று சிங்கள மக்களுக்குப் பயந்து தமிழ்ப் பகுதியான திரிகோணமலையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையில் கோலோச்சிய மகிந்தவின் அரசியல் … Read more

பயணி – நடத்துனர் இடையே மோதல்… பயணி தாக்கியதில் நடத்துனர் உயிரிழப்பு

பயணி தாக்குதல்- நடத்துநர் உயிரிழப்பு ஓடும் பேருந்தில் பயணி – நடத்துனர் இடையே மோதல் மதுபோதையில் இருந்த பயணி தாக்கியதில் நடத்துனர் உயிரிழப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நடத்துனர் பலி பயணி தாக்கியதில் நடத்துனர் பெருமாள் உயிரிழந்தார் Source link

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் சீருடை விநியோகம்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடைகள் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான விநியோகப் பணிகள் ஆண்டுதோறும் கல்வி மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையே வரும் … Read more

ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய சர்ச் வழங்கிய திருமண சான்றை ஆதாரமாக ஏற்க முடியாதது ஏன்?: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

மும்பை: திருமணத்துக்குப் பிறகு பெண்களின் பெயரில் மாற்றம் ஏற்படுகிறது. சில பெண்கள், கணவரின் பெயரை தங்கள் பெயரோடு இணைத்து கொள்கின்றனர். சிலர் தங்களது முதல் எழுத்தை மாற்றிக் கொள்கின்றனர். இதற்கேற்ப ஆதார், பான் எண், வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் பெண்கள் தங்களது பெயர்களில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் எழுகிறது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பெண் மரிசா அல்மைதாவுக்கு (27) கடந்த ஆண்டு டிசம்பரில் உள்ளூர் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா காலமானார்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக தலைநகராக அபுதாபி செயல்படுகிறது. உலகில் எண்ணெய் வளமிக்க நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் 6-வது இடத்தில் உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் அதிபராக ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யான் (73) பதவி வகித்து வந்தார். பல்வேறு நெருக்கடியான நேரத்தில் நாட்டை திறம்பட வழிநடத்தினார். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் நட்பு பாராட்டினார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். … Read more