தமிழ்நாட்டில், கொரோனா பரவலுக்கு காரணம் வட மாநில மாணவர்களே! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில், கொரோனா பரவலுக்கு காரணம் வட மாநில மாணவர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவித்தொகை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிம் பேசும்போது, நிகழ்ச்சியில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் கால்களை தினந்தோறும் … Read more

தலைமைச் செயலகம் அருகே ஒருவர் தீக்குளிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்  பொன்னுசாமி. இவர் சுப்பிரமணி என்பவரிடம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தை திருப்பித் தரவில்லை.  இதனால் மனமுடைந்த பொன்னுசாமி பணத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம்  அருகே உள்ள பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் பொன்னுசாமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

கொரோனா தொற்றுக்கு பிறகு மோடிக்கு மக்கள் ஆதரவு 2 மடங்கு அதிகரிப்பு

புதுடெல்லி: நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி பிரதமராக பதவி ஏற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ‘லோக்கல் சர்கிள்ஸ்’ என்ற அமைப்பு சுமார் 64 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் 67 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். … Read more

சென்னையில் தலைமை செயலகம் அருகே முதியவர் தீக்குளிப்பு: கொடுத்த கடனை திருப்பி தராததால் விரக்தி

சென்னை: சென்னையில் தலைமை செயலகம் அருகே பொன்னுசாமி என்ற முதியவர் தீக்குளித்தார். சுப்பிரமணி என்பவருக்கு கொடுத்த கடன் ரூ.14 லட்சம் திருப்பி வராததால் முதியவர் தீக்குளித்தார். சுப்பிரமணி மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதியவர் குற்றம்சாட்டினார்  

ஜிஎஸ்டி வருவாய் மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.: ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல்

டெல்லி: ஜிஎஸ்டி வருவாய் மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 41% உயர்ந்து ரூ.7,910 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் ஒன்றிய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

என்ன இப்படியாகி போச்சு.. 7வது இடத்திற்கு தள்ளப்பட்ட எல்ஐசி.. என்ன காரணம்?

இந்திய பங்கு சந்தைக்குள் சமீபத்தில் காலடி வைத்த எல்ஐசி நிறுவனம், அதன் சந்தை மதிப்பின் அடிப்படையில், இந்தியாவில் 6வது பெரிய நிறுவனமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது சரிவினைக் கண்டுள்ள நிலையில், 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எல்ஐசி-யை அடுத்து ஹவுஸிங் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 8வது இடத்தினை பிடித்துள்ளது. எஸ்பிஐ வங்கியானது 9வது இடத்தில் உள்ளது. புகை பிடிப்பவர்களால் இந்தியாவுக்கு 766 மில்லியன் டாலர் செலவு: WHO தகவல் எல் ஐ … Read more

உக்ரைன் படையெடுப்பு: தள்ளுபடி விலையில் ரஷ்ய ஆயிலை வாங்கும் இந்தியா!

India says it will keep buying “cheap” Russian oil, arguing a sudden stop would drive up costs for its people: உலகில் சக்தி வாய்ந்த நாடுகளுள் ஒன்றாக வலம் வரும் ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைன் பெரும் சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்துள்ளது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஐ.நாவில் நடந்த பொதுக்கூட்டத்திலும் … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை.!!

தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுக்கால ஆட்சி… வளர்ச்சியா? வீழ்ச்சியா?

பிரதமர் மோடி“என் வாழ்க்கையில் எல்லாமே 130 கோடி மக்கள் தான். என்னுடைய வாழ்வு என்பது ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு. எனது அரசு எட்டு ஆண்டுகள் நிறைவு செய்கிற இந்த தருணத்தில் ஏழைகளுடைய கௌரவத்திற்காகவும், மரியாதைக்காகவும் தொடர்ந்து இந்த வாழ்வு அர்ப்பணிக்கப்படும்” 2014-ல் இருந்து 2019 வரை ஐந்து ஆண்டுகளும், இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவு செய்கிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் என்னென்ன … Read more

சொத்துத் தகராறு காரணமாக தந்தையை அடித்துக் கொன்ற மகன் நீதிமன்றத்தில் சரண்

சென்னை வளசரவாக்கத்தில், சொத்துத் தகராறில் தந்தையை கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த முதியவர் குமரேசன் என்பவரை அவரது மகன் குணசேகரன் என்பவனே அடித்து கொன்று கண்டந்துண்டமாக வெட்டி டிரம்முக்குள் அடைத்து, காவேரிப்பாக்கத்தில் உள்ள காலி மனை ஒன்றில் புதைத்த நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், 4 தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த குணசேகரன், பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணையில் தலைமறைவான குணசேகரன், போலீசில் சிக்காமல் இருக்க … Read more