`என் தலையை கொய்தாலும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன்’ – சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆவேசம்

“எனது தலையை கொய்தாலும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன்” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார். மும்பையில் அரசுக் குடியிருப்புகளை மறுநிர்மாணம் செய்வதில் கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் கடந்த 1-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணைக்கு 20-ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து 27-ம் தேதி ஆஜராக … Read more

இந்தியாவில் புதிதாக 19,637 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,637 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,637 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,19,811 ஆனது. கடந்த 24மணி நேரத்தில் 19,336 பேர் நலமடைந்து வீடு திரும்பினர்.தற்போது 1,43,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 45 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,357ஆக உயர்ந்தது. … Read more

எப்போது ரீ-என்ட்ரி? ஆல்யாவின் பதிலால் குஷியான ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா, ராஜா ராணி 2 சீசனில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிவிட்டது. எனவே, அவரின் ரீ என்ட்ரியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சோஷியல் மீடியாக்கள் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வரும் ஆல்யா – சஞ்சீவ் தம்பதியினர் ஆல்யாவின் கம்பேக் எப்போது என்ற ரசிகர்களின் கேள்விக்கு யூ-டியூப் சேனலில் … Read more

நேபாளத்தில் மக்களை பதறடித்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு| Dinamalar

காத்மண்டு :நேபாளத்தில் இன்று (ஜூலை 31) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டரில் 5.5 ஆக பதிவானது. நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது.இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பு … Read more

தங்கம் விலையை தீர்மானிக்க போகும் 5 முக்கிய அம்சங்கள்.. கவனிக்க வேண்டியது என்ன?

தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாக தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இந்த வாரத்தில் 2.39% ஏற்றம் கண்டுள்ளது. இது தங்க ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது, இது இன்னும் எந்தளவுக்கு அதிகரிக்குமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்த்ததை போலவே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், தங்கம் விலையானது அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் அதிகரித்தாலும் டாலரின் மதிப்பானது நடப்பு வாரத்தில் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்பட்டது. இது தங்கம் விலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளது. இதற்கிடையில் … Read more

“செத்தாலும் சரணடைய மாட்டேன்..!" – அமலாக்கப் பிரிவு விசாரணை குறித்து சஞ்சய் ராவுத் ட்வீட்

சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு அதன் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவுத் பா.ஜ.க-மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் சஞ்சய் ராவுத்மீது பா.ஜ.க கடுங்கோபத்தில் இருக்கிறது. சஞ்சய் ராவுத் மனைவிக்கு மும்பை கோரேகாவ் பத்ரா சாலில் உள்ள பழைய வீடுகளை இடித்துவிட்டு அதனை புதிதாகக் கட்டுவதில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில் 1,034 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக சஞ்சய் ராவுத்தின் உறவினர் … Read more

கூட்டுறவு நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக நூதன மோசடி: கோவை ஆட்சியர் எச்சரிக்கை

கூட்டுறவு நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் பணிகள் காலியாக உள்ளதாகவும், மேற்படி காலிப் பணியிடங்களுக்கு ஒரு செயலி மூலம் ஆட்கள் தேர்வு செய்வதாகவும், அதற்கு நேர்காணல் நடப்பதாகவும், இந்தப் பணிக்காக வைப்புத் தொகை செலுத்த வேண்டும் எனவும் தகவல் பரவி வருகிறது. குறிப்பிட்ட மொபைல் எண்ணை … Read more

முடிவுக்கு வருமா நாடாளுமன்ற முடக்கம்?- எதிர்க்கட்சிகளுடன் தொடரும் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிவடையும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முடக்கம் முடிவிற்கு வருமா? என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்காக எதிர்க்கட்சிகளுடன் பாஜக தலைவர்களின் நட்பு ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. கடந்த ஜுலை முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறுகிறது. இதன் முதல் நாளிலிருந்து எதிர்க்கட்சிகள் அமளியால் தொடர்ந்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துவக்கத்தில் மக்களவையின் நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் முழுவதிலும் இடைநீக்கம் செய்யப்பட்டன. பிறகு இந்த பட்டியலில் மாநிலங்களவையிலும் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங் … Read more

அமெரிக்காவை புரட்டி போட்ட வெள்ளம் – குழந்தைகள் உட்பட 25 பேர் பலி!

அமெரிக்காவில் கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 25 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்து வருகிறது. இதனால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இது பற்றி கென்டகி கவர்னர் ஆண்டி பெஷீர் கூறுகையில், “கென்டகி, டென்னசி மற்றும் மேற்கு விர்ஜீனியா உள்ளிட்ட பகுதிகளில் தேசிய … Read more

உலகின் மிகப்பெரிய கட்டடம் கட்ட சவூதி அரேபியா திட்டம்.!

சவூதி அரேபிய அரசு 75 மைல் நீளத்துக்கு இருபுறங்களிலும் 1600 அடி உயரமுள்ள வானளாவிய கட்டடங்களைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவுறுத்தலின்படி வானளாவிய கட்டடங்களை உருவாக்க வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மிரர் லைன் எனப் பெயரிட்டுள்ள இந்தத் திட்டம் கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக இருக்கும். இந்தத் திட்டத்துக்கு ஒரு இலட்சம் கோடி டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது. கட்டடங்களின் அடியில் அதிவிரைவு ரயில் இயக்குவதும், … Read more