நித்யானந்தா பெயரில் மோசடி செய்தவருக்கு அடி உதை!

இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக அறிவித்தார். அதற்கு கைலாசா என பெயரிட்ட அவர், அவ்வப்போது வீடியோ மூலம் காட்சியளித்து வந்த அவர், அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார். மேலும், தனது சீடர்களுக்கு சத்சங்கங்களையும் வழங்கி வந்தார். இதனிடையே, அண்மைக்காலமாக அவர் பற்றிய தகவல் வெளி வராமல் இருந்தது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், தான் உயிரிழக்கவில்லை என்று தனது … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓ கார்னர் உறுதி படுத்தியுள்ளார். “ஜோ பைடனுக்கு (79) சனிக்கிழமை ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பு தொடர்ந்து நான்கு நாட்கள் எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்று தெரிய வந்த நிலையில், சனிக்கிழமை எடுக்கப்பட்ட சோதனயில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. கண்டிப்பான தனிமைப்படுத்தும் நடைமுறைகளை அதிபர் … Read more

மகாராஷ்டிராவில் பரபரப்பு : சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மும்பை அமலாக்கத்துறையினர் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை ரூ. 1,034 கோடி ரூபாய் நிலமோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை முன் சஞ்சய் ராவத் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.  மேலும் ஜூலை 20 ஆம் தேதி … Read more

திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றம்

திருவேற்காடு: திருவள்ளூர் மாவட்டம்  திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. நர்சிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவேற்காடு காவல்துறையினர் விசாரித்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி போலீஸ் உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவி தற்கொலையை தொடர்ந்து நர்சிங் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வழிபாட்டு தலங்கள் சட்டம் ஒரே மதத்தினர் சண்டை போட்டால் பொருந்தாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘வழிபாட்டு தலங்கள் சட்டமானது, ஒரே மதத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையேயான பிரச்னையில் பொருந்தாது’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகான, அனைத்து வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை பராமரிக்க வகை செய்யும் வகையில், ‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991’ கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் எந்த வழிபாட்டுத் தலத்திலும் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ மதமாற்றம் செய்வதைத் தடை செய்கிறது. இந்நிலையில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மதப் பிரச்னை தொடர்பான … Read more

`இலவசங்கள் வழங்கும் கலாசாரம் இந்திய அரசியலின் மோசமான கோளாறு’- பிரதமர் மோடி விமர்சனம்

மானியம் மற்றும் இலவச கலாசாரம் இந்திய அரசியலின் மோசமான கோளாறாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். உஜ்வல் பாரத் இயக்கத்தின் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மின்சார தொகுப்புக்கு பல்வேறு மாநிலங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்திருக்கும் செய்தியை அறிந்தால் மக்கள் ஆச்சரியமடைவர். மின்உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனங்களுக்கு மாநிலங்கள் வைத்துள்ள பாக்கியால், மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. சாமானிய மக்கள் மின்சார கட்டணம் செலுத்தும்போதும்கூட, மாநிலங்கள் செலுத்த மறுப்பது … Read more

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் விளையாடிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்!| Dinamalar

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்வதில் பிரதமர் படம் விடுபட்டதற்கும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பரம் கொடுத்ததற்கும் முக்கியமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான் காரணமென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி, சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக, தமிழக அரசை பிரதமரும் பாராட்டி உள்ளார். செலவு விபரங்கள் இந்நிகழ்ச்சி, மத்திய அரசுடன், தமிழக அரசுக்கு இருந்த மோதல் போக்கை மாற்றி, சுமுகமான … Read more

மட்டக்களப்பில், துவிச்சக்கர வண்டிகளுக்கான,பிரத்தியேக ஒழுங்கை முறைமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டி பாவனை அதிகரித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான,பிரத்தியேக ஒழுங்கை அமுலாக்கும் முன்னோடி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். குறித்த முன்னோடி வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபையுடன் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.

திடீர் மழையால் ஸ்தம்பித்த மதுரை; 4 பேர் பலி

மதுரையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், நேற்று பகலில் வெயில் இருந்த நிலையில், மாலையில் திடீரென மழை பெய்தது. 6.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரம் என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். மதுரையில் நேற்று பெய்த பலத்த மழையால் … Read more