போட்டி தேர்வு வயது வரம்பு 2 ஆண்டு தளர்வு: ராஜஸ்தான் சலுகை

ஜெய்ப்பூர்: அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் வயது வரம்பில், ராஜஸ்தான் அரசு 2 ஆண்டுகள் தளர்வு அளித்துள்ளது. இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் நேற்று கூறுகையில், ‘‘கொரோனா பெருந்தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், இனி வரும் காலங்களில் நடத்தப்படும் அரசுப் பணி போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயது உச்சவரம்பில் 2 ஆண்டு தளர்வு அளிக்கப்படும்,’’ என்றார்.  முன்னதாக, இம்மாத தொடக்கத்தில்  நிகழ்ச்சியில் பேசிய … Read more

டிசம்பரில் 5ஜி தொழில்நுட்பம்| Dinamalar

தொலைதொடர்புத் துறை இப்போது ‘4ஜி’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘மொபைல் போன்’ இணைப்புகளை வழங்கி வருகிறது. இதைவிட அதிவேகமான ‘5ஜி’ தொழில்நுட்பம் வெளிநாடுகளில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை துவக்க, தற்போது தான் 5ஜிக்கான அலைக்கற்றை ஏலம் நடந்துள்ளது.மேலும் 5ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டால் மொபைல்போனில் அதிவிரைவாக ‘டேட்டா’க்களை ‘டவுன்லோடு’ செய்யலாம். ‘டிவி’யே வேண்டாம்; சினிமா உட்பட அனைத்து விஷயங்களையும் மொபைல்போனில் தங்கு தடையின்றி பார்க்கலாம்; பல சேவைகளை பெறலாம். இந்த 5ஜி தொழில்நுட்பத்தை, வரும் டிசம்பர் … Read more

ரஜினியை சந்தித்த நம்பி நாராயணன்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை தழுவி சமீபத்தில் வெளியான படம் ‛ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட்'. அவரது வேடத்தில் மாதவன் நடித்து, இயக்கமும் செய்திருந்தார். விமர்சகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. தற்போது ஓடிடியிலும் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படம் வெளியான சமயத்தில் படத்தை பாராட்டிய ரஜினி, அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டிய ஒரு படம் என பாராட்டியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் … Read more

பஸ் மீது ரயில் மோதி 11 பேர் பலி| Dinamalar

டாக்கா:வங்க தேசத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இதை தலைநகர் டாக்காவுக்கு சென்ற மினி பஸ் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மோதியது. இதில் பயணித்த ஏழு மாணவர்கள் நான்கு ஆசிரியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘விபத்தில் சிக்கிய பஸ் தண்டவாளத்தில் பல … Read more

சேலம் அம்பலவான சுவாமி கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: 2 மாதங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டம் குகையில் உள்ள அம்பலவான சுவாமி கோயிலின் கல் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 2 மாதங்களில் தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சேலம் மாவட்டம் குகை பகுதியில் உள்ள அம்பலவான சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கல் மண்டபம், கோயில் திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களின்போதும் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், இந்த … Read more

செவாலியே விருதுக்கு தேர்வாகியுள்ள ‘காலச்சுவடு’ எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

சென்னை; பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள காலச்சுவடு பதிப்பக ஆசிரியர் எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்கள், பிரான்சு நாட்டின் செவாலியே விருதுக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனையடுத்து,  பதிப்பாசிரியர், கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்து டிவிட் செய்துள்ளார். அதில், ‘பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் … Read more

இயக்குனர் சுகுமாருக்கு உதவி செய்கிறேனா? உப்பென்னா இயக்குனர் மறுப்பு

தெலுங்கில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான படம் உப்பென்னா. விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக, தற்போது பிரபலமாகி வரும் கிரீத்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார் படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா. இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா 2 படத்தின் இயக்குனர் சுகுமாருடன் அமர்ந்து இவர் சீரியஸாக விவாதிப்பது போன்று ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது. இதைத் தொடர்ந்து புஷ்பா 2 … Read more

அதிபர் மாளிகையில் சுருட்டிய ரூ.38 லட்சம் கோர்ட்டில் ஒப்படைப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையில் கைப்பற்றப்பட்ட 38 லட்சம் ரூபாய், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது. நம் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றில் சிக்கி தவிக்கிறது.இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் கொதித்தெழுந்து, 9ம் தேதி அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.போராட்டம் தீவிரமானதை அறிந்த கோத்தபய, அங்கிருந்து தப்பி, மாலத் தீவு சென்று பின் சிங்கப்பூர் சென்றார். இந்நிலையில் கோத்தபய மாளிகையில் கண்டெடுத்த, 38 லட்சம் … Read more

31.07.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July-31 இன்றைய ராசிபலன் |ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

“வினை விதைத்தவர்கள் வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது” – மதுரையில் தினகரன் பேச்சு

மதுரை: “வினை விதைத்தவர்கள் வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது” என்று அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் பேசினார். மதுரையில் இன்று அமமுக கட்சியின் சார்பில் மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக நிறுவனத் தலைவர் டிடிவி.தினகரன் பேசியது: “கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி, ஒசூர் வரைக்கும் 234 தொகுதியிலும் அமமுகவுக்கு கட்டமைப்பு உருவாக்கியுள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப்பதவியை ஏலம்போட்டு நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். அம்மாவால் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தவர்கள் … Read more