பின் லேடனின் வலது கையாக இருந்த அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்: ஜோ பைடன்

கடந்த 2011ம் ஆண்டு அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர்  ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு, மிகப்பெரிய பின்னடைவாக,  ஒசாமா பின் லேடனின் வலது கையாக இருந்த அதன் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் உத்தரவின் படி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்த உலகளாவிய பயங்கரவாதி மற்றும் அல்-கொய்தா தலைவன் அய்மன் அல்-ஜவாஹிரியை ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தியது. இதை அமெரிக்க … Read more

வெள்ளைப்படுதல் நிறம்.. பின்னணியில் இருக்கும் மருத்துவ காரணங்கள் என்ன?

பெண்ணின் யோனியில் இருந்து வெளியேறும் திரவம், முற்றிலும் இயற்கையானது. பிறப்புறுப்பு, கருப்பையின் வாய் போன்ற இடங்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய கசிவே இந்த வெள்ளைப்படுதல். உண்மையில், இது உறுப்பை சுத்தமாகவும், தொற்று இல்லாததாகவும் வைத்திருப்பதாக அறியப்படுகிறது. “உங்கள் பிறப்புறுப்பு திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உயவு அளிக்கவும், உங்கள் யோனியை சுத்தமாக வைத்திருக்கவும் வெள்ளைப்படுதல் உதவுகிறது” என்று ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி கூறினார். சாதாரண வெள்ளைப்படுதல் என்பது மெல்லிதாக ஒட்டக்கூடிய தன்மையுடனும் இருக்கும். எவ்விதத் துர்நாற்றமும் … Read more

நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்.. ஊழியர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை.!

நாளை நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கோரி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு தொழிலாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி எந்த விடுப்புகள் தரப்பட மாட்டாது எனவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் … Read more

மீண்டும் ஐ.டி ரெய்டு வளையத்தில் அன்புச்செழியன்: அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை!

தமிழ் திரைத்துறையின் பிரபல சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்பட விவகாரத்தில், அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தது. அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.20 கோடி கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. … Read more

டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு நடக்குமா? – ரவீந்திரநாத் எம்பி கருத்து

ராஜபாளையத்தில் ரவீந்திரநாத் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு இருக்கும் ஒரே எம்பி நான் தான். எனவே கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தாண்டி அதிமுக எம்பியாக பணியாற்றுகிறேன். தற்போது அனைத்து மாவட்டத்திலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கட்சி யில் எனது பணி குறித்து ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுப்பார். நீதிமன்ற உத்தரவுப்படி தலைமைக் கழக அலுவலகத்தில் சாவி கொடுக்கப்பட்டது. மேல்முறையீட்டில் இரண்டு வாரங்களில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் … Read more

தஞ்சையில் பொது விமான சேவை அமைக்க நடவடிக்கை: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தஞ்சாவூரில் பொதுமக்களுக்கான விமான சேவை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மாநிலங்களவையில் திமுகவின் புதிய உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். இது குறித்து நேற்று மாநிலங்களவையில் திமுகவின் புதிய உறுப்பினரான எஸ்.கல்யாணசுந்தரம் எழுப்பிய கேள்வியில், ‘தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பொதுமக்களுக்கான விமான சேவை கொண்டுவரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இல்லை எனில் அதன் காரணம் தருக. இதுவரையும் அதற்காக எதுவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?’ … Read more

Ayman Al-Zawahiri: அல் கொய்தா இயக்க தலைவர் அல் ஜவாஹிரியை கொன்ற அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராகவும், மாஸ்டர் மைன்டாகவும் செயல்பட்டு வந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் அதிரடியாக பாகிஸ்தான் நாட்டில் வைத்து சுட்டுக் கொன்றனர். இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்ட நிலையில் மீண்டும் தலைதூக்க தொடங்கினர். தற்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் … Read more

உடனடியாக இரத்துச் செய்யப்படும் சுற்றறிக்கை! அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது அலுவலக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே அரச ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்திற்கு முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. … Read more

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு  அலுவலகம் மற்றும் வீடுகளில்  வருமானவரித்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்,   தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னை தி.நகரில் உள்ள கலைப்புலி எஸ் தாணு … Read more

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கம் இயக்கம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. புத்தொழில் தொடங்கும் தகுதியான 31 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஆதார நிதியை முதல்வர் வழங்குகிறார்.