60 ஆண்டுகளுக்கு பின் முதல்முறை… இனி ஸ்ப்ரைட் என்ன கலர் தெரியுமா?

மக்களின் விருப்பத்திற்குரிய குளிர்பானங்களில் ஒன்று ஸ்ப்ரைட் என்பதும் இந்த குளிர்பானம் சிறுவர் முதல் முதியோர்கள் வரை மிகவும் விரும்பி குடிக்கக்கூடிய குளிர்பானமாக இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. கடந்த 60 ஆண்டுகளாக பச்சை நிற பாட்டிலில் இருந்த ஸ்ப்ரைட் குளிர்பானத்தின் பாட்டில் நிறம் மாற்றப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ப்ரைட் என்றாலே அனைவர் மனதிலும் அதன் பச்சை நிற பாட்டில் பதிந்து இருக்கும் நிலையில் இந்த நிறமாற்றம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் … Read more

இரத்தினபுரி மாவட்டத்திலும் கன மழை:வெள்ள நிலை பிரகடனம்

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்டத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. களு கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் இரத்தினபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. உற்பத்திகளும் பாதிக்கப்பட்டுள்ளன. . கலவான குகுலே ஆற்றின் நீர்மட்டமும் அதிகரிது;துள்ளது. கங்கை எலதோலைக்கு அருகாமையிலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலும் அவதானமாக இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட செயலாளர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். களு கங்கை … Read more

Tamil News Live Update: குமரிக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates இந்த அரசுக்கு மனசாட்சி இல்லையா? ஜோதிமணி பால் மீது 5% ஜிஎஸ்டி விதித்தால் எப்படி குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியும்? பென்சிலுக்கு கூட வரி போடும் இந்த அரசுக்கு … Read more

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை.!

குற்றால அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.  தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கின்போது குளிப்பது ஆபத்து என்பதால் மெயின் அருவி, ஐந்தருவி, … Read more

“ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவர் சாவர்க்கர்” – தமிழிசைக்கு நாராயணசாமி காட்டமான பதில்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 75 இடங்களில் தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. அந்த தியாகச் சுவரில் சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் பெயர் பலகைகளை பதிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுவரும் தியாக சுவரில், சாவர்க்கர் பெயர் இடம்பெற்ற பலகையை பதித்தார் பொறுப்பு ஆளுநர் தமிழிசை. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை … Read more

நகராட்சிகளுக்கு வாகனங்கள் ஒப்படைப்பு; தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.29.75 கோடியில் கட்டிடங்கள்: மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் தற்போது முதல்கட்டமாக 100 நகராட்சிகளில் தலைவர்களின் அலுவலக பயன்பாட்டுக்காக 91 ஸ்கார்பியோ வாகனங்கள், ஆணையர்கள், நகராட்சிப் பொறியாளர்கள் பயன்பாட்டுக்காக 96 பொலிரோ வாகனங்கள் என மொத்தம் ரூ.23.66 கோடியில் 187 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாகனங்களுக்கான சாவிகளை நகராட்சித் தலைவர்களிடம் வழங்கினார். தொழிலாளர் நலன் உடுமலைப்பேட்டை, நாகர்கோவில், விருதுநகர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை … Read more

நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி – கூச்சல்களுக்கு மத்தியிலும் மசோதாக்கள் நிறைவேற்றம்

புதுடெல்லி: மக்களவையில் மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி உட்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்கம் நேற்று ரத்து செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. மக்களவை நேற்று கூடியதும் காங்கிரஸ் எம்.பி.க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் பரிந்துரையை ஏற்று மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்கத்தை சபாநாயகர் ஓம் … Read more

காமன்வெலத் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள்..!

பிரிட்டனின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெலத் போட்டியின் 4ஆம் நாளில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை சுசிலா தேவி வெள்ளி வென்றார். 71 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப்பதக்கம் வென்றார். 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய ஜூடோ வீரர் விஜய்குமார் வெண்கலப் பதக்கம் பெற்றார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என … Read more

மியான்மர் : மேலும் 6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்பு

நேப்பியிடா மேலும் 6 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மியான்மரில் நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகி தலைமையிலான ஜனநாயக தேசிய கட்சி வெற்றி பெற்றது.  ஆனால் தேர்தலில் முறைகேடுகள்  நடத்தி ஆங் சான் சூகி வெற்றி பெற்றதாக கூறி அந்நாட்டு ராணுவம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த ஆட்சியக் கலைத்தது. பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராடிய மக்களை ராணுவம் இரும்புக் … Read more

சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சென்னை ; சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகர் முதல் தெருவில் உள்ள அன்புச் செழியனின் வீட்டில் சோதனை நடக்கிறது.மதுரையை சேர்ந்த அன்புச் செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை வெளியிட்டு வருகிறார்.