எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று மீண்டும் விசாரணை

டெல்லி : எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.  நெடுஞ்சாலை பணிக்கான டெண்டரில் ரூபாய் 4800 கோடி  முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.  நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை  தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கேரளாவில் தொடரும் கனமழை – 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளாவில் கனமழை நீடித்து வரும் சூழலில், மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. தொடர் மழையால், குட்டிக்கானம், தொடுபுழா உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் அதிகனமழைக்கான சிவப்பு … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி| Dinamalar

பசட்டெர்ரே: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ‘டி-20’ போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று செயின்ட் கிட்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. … Read more

ஐடிஆர் தாக்கல்: ஜூலை 31ஆம் தேதியை தவறவிட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

2021 – 22 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. பெரும்பாலான வரி செலுத்தும் நபர்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களுடைய வருமான வரி தாக்கலை செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் ஒரு சில காரணங்களால் பலர் இன்னும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். சம்பளமும் வரவில்லை, ஐடிஆர் படிவம் 16ம் தரவில்லை… பரிதாபத்தில் … Read more

சர்வகட்சி ஆட்சிக்கு பலமான சக்தியொன்றைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், சர்வகட்சி ஆட்சி ஒன்றுக்காக பலமான சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக கண்டியில் தெரிவித்தார். இரண்டு கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து, அதற்காக மௌனம் காக்காமல், நாட்டின் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அணியாக ஒன்றிணைந்து புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் … Read more

தினமும் இரவில் தூங்கும் முன்பு இதைக் குடிங்க; அவ்வளவு நன்மை இருக்கு!

மஞ்சள் தூள் கலந்த பால் பொதுவாக, சளி, இருமல் காலங்களில் வீட்டில் செய்து கொடுக்கப்படும்.  இதை நீங்களும் குடிப்பீர்கள். கூடுதலாக அதில் மிளகுத் தூள் போடுவீர்கள். தினமும் இரவு தூங்கப்போகும் முன்பு மஞ்சள் தூள் கலந்த பால் குடிப்பதால், அதிக நன்மைகள் கிடைக்கிறது. மஞ்சளில் வீக்கத்திற்கு எதிரான குணம் இருக்கிறது. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிகமாக சாப்பிட்டால் அஜீரணம், வயிறு உப்புதல் போன்ற விளைவுகளும் ஏற்படும். மஞ்சள் உடல் … Read more

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயங்காது.? – போக்குவரத்து கழக ஊழியர் சங்கம்.!

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் நாளை முதல் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊ ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். … Read more

கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: 27 பேர் குற்றவாளிகள்; 3-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஊருக்குள் புகுந்த கும்பல், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை சேதப்படுத்தியும், அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டனர். கச்சநத்தம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த படுகொலை சம்பவத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. இந்த வழக்கில் சுமன், அருண்குமார், … Read more

மாற்றுத் திறனாளி கணவன் – மனைவிக்கு வாட்ஸ் அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு.!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாற்றுத்திறனாளி கணவன் -மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுப்பாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி காதல் தம்பதிகளான குமார் – தமிழ்ச்செல்வி ஆகியோர் பெற்றோர் எதிர்ப்பு காரணமாக தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி கர்ப்பிணியாக உள்ளார். ஆனால் வறுமை காரணமாக அவருக்கு வளைகாப்பு நடத்த முடியாத நிலையை அறிந்த சிலர்  அன்னை தெரசா வாட்ஸப் குழுவில் பதிவிட்டுள்ளனர் .  Source link