அட, வேதிகாவா இது… நம்ப முடியவில்லை…

தமிழ் சினிமாவில் அழகிருந்தும், திறமையிருந்தும் சில நடிகைகளால் முன்னணிக்கு வர முடியாது. அப்படிப்பட்டவர்களில் வேதிகாவும் ஒருவர். 2006ம் ஆண்டில் வெளிவந்த 'மதராஸி' படத்தில் அறிமுகமாகி அடுத்து வெற்றிப் படமான 'முனி' படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் அவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் 'பரதேசி, காஞ்சனா 3' ஆகிய படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். தற்போது தென்னிந்திய மொழிகளில் தலா ஒரு நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் … Read more

சீனா பொருளாதாரத்தினை பதம் பார்க்க கூடிய 5 முக்கிய காரணிகள்.. என்னென்ன தெரியுமா?

சீனாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், அங்கு இன்னும் நிலைமை மோசமாகலாம் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக சீனாவினை பதம் பார்க்க கூடிய 5 முக்கிய காரணிகளை நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அது என்னென்ன? ஏன் என்ன பிரச்சனை? இதனால் சீனா பொருளாதாரம் என்னவாகும்? இதனால் மற்ற நாடுகளுக்கு ஏதும் பாதிப்பு இருக்குமா? வாருங்கள் பார்க்கலாம். வீட்டுக் கடனை கட்ட மறுக்க என்ன காரணம்.. சீன ஹோம்பையர்கள் சொல்லும் காரணம் என்ன? கடன் சீனா … Read more

திடீரென எஸ்.வி சேகர் வீட்டுக்குச் சென்ற ஓ.பி.எஸ்: என்ன காரணம்?

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று ஒ.பன்னீர்செல்வம், நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் வீட்டுக்கு விசிட் அடித்ததும், அவரது அம்மா காலில் விழுந்து ஆசீாவாதம் வாங்கியதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   அ.தி.மு.க.வில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிககள் ஆதரவுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒ.பி.எஸ் உள்ளிட்ட … Read more

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் கோலாகலம் – பக்தர்கள் பரவசம்!

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், 12 ஆழ்வார்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணியத் தலமாகவும் அறியப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். ஸ்ரீஆண்டாள் மனிதப்பிறவியெடுத்து இறைவனுக்குப் பாமாலைப் பாடி, பின் பூமாலை சூட்டிய தலம் என்றும் பெரியாழ்வார் பாடிய கோயில், பெரிய பெருமாள் எனும் சிறப்புப்பெயர் உள்பட பல்வேறு பெருமைகளைக் கொண்டது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். அமைச்சர்கள் வைகாசி விசாகம்: விராலிமலையில் தேரோட்டம்; அரோகரா கோஷம் முழங்க நடந்த தேர்திருவிழா! இத்தகைய பிரசித்திப் பெற்ற ஆண்டாள் கோயிலில் … Read more

விஜய்யின் தந்தை எஸ்ஏசி அலுவலகத்தில் ஏசி, டேபிள், சேர், பேன் உள்ளிட்ட அலுவலக பொருட்களை ஜப்தி..

விஜய்யின் தந்தை எஸ்ஏசி அலுவலக பொருட்கள் ஜப்தி விளம்பர செலவை வழங்காததால் ஜப்தி நடவடிக்கை சட்டப்படி குற்றம் படத்துக்கான விளம்பர செலவு 76 ஆயிரம் ரூபாயை வழங்காததை அடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்கள் ஜப்தி அலுவலக ஊழியர்கள் தடுத்ததால் காவல் துறை உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்ற பணியாளர்கள் கோரிக்கை தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் அல்லிகுளம் நீதிமன்றம் ஜப்தி உத்தரவு பிறப்பித்திருந்தது ஏசி, டேபிள், சேர், பேன் … Read more

தமிழகத்தில் கனமழை பாதிப்புகளை தவிர்க்க அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? – அமைச்சர் விளக்கம்

சென்னை: தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன மழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை தமிழகத்தில் 217.9 … Read more

“பிரதமர் மோடி அவர்களே… அந்த ஒன்றாம் வகுப்பு குழந்தைக்கு பதில் என்ன?” – மக்களவையில் கனிமொழி ஆவேசம்

புதுடெல்லி: “பொருளாதரச் சரிவிற்கு பிறகும் கறுப்பு பணம் கைப்பற்றப்படுவது ஏன்?” என மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். திங்கள்கிழமை தொடங்கிய விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட அவர் முதன்முறையாக தமிழில் நீண்ட உரையாற்றினார். இதுகுறித்து மக்களவையின் திமுக குழுத் துணைத் தலைவரும், எம்பியுமான கனிமொழி பேசியது: “தற்போது பேசி அமர்ந்திருக்கக் கூடிய பாஜகவின் நிஷிகாந்த் துபே கறுப்பு பணத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். கோடி கோடியாக கறுப்பு பணம் பாஜக ஆளாத மாநிலங்களில் … Read more

மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் மீதான சஸ்பெண்டை ரத்து செய்தார் சபாநாயகர் ஓம்பிர்லா….

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதையடுத்து  இன்று பிற்பகல் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன்  ஆகிய 4 பேரும் மக்களவைக்கு வருகை தந்தனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக … Read more

கனமழை எச்சரிக்கை ; குமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி: கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  அதிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.