உங்க ரொமான்ஸு தாங்க முடியல.. நயன்தாரா கையை எப்படி பிடிச்சிருக்காரு பாருங்க விக்கி.. செம ட்ரோல்!

சென்னை: ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து மாட்ரிட் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ். நடு ரோட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் கையை பிடித்துக் கொண்டு படு ரொமான்டிக்காக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வழக்கம் போல விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நயன்தாராவுடன் ரொமன்ஸ் செய்யும் போட்டோக்களை தொடர்ந்து விக்னேஷ் சிவன் போட்டு வருவதால் கடுப்பான ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கலாய்த்து வருகின்றனர். ஸ்பெயினில் ஜாலி ஜவான் படத்தில் ஷாருக்கான், விஜய் … Read more

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு திடீர் தடை.. மத்திய அரசின் அறிவிப்பு ஏன்?

கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை ஏற்றத்தை உள்நாட்டில் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதியில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி விட்டன. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு ஊழியர்கள் இந்த வங்கியில் சம்பள கணக்கு வைக்க கூடாது.. அதிரடி உத்தரவு! கோதுமை ஏற்றுமதி … Read more

நிலைபேறான பொருளாதார கட்டமைப்பிற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்- ஜப்பான் தூதுவரிம் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு

நிலைபேறான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கக் கூடிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை விருத்திக்கான பொருளாதார ஒத்துழைப்புக்களையும் தொழில்நுட்ப ரீதியான அனுபவங்களையும் ஜப்பான் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுக்கோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர் (25.08.2022) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடிய போதே, கடற்றொழில் அமைச்சரினால் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இலங்கையின் … Read more

பரந்தூர் விமான நிலையம் அமைய வேண்டுமா ? 7 பேர் கொண்ட குழு அமைக்கிறோம்: அன்புமணி ராமதாஸ்  

ஜி.கே. மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து, பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மக்களின் எதிர்ப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம்,  அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள் எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் … Read more

டீ-யில் எலி மருந்து கலந்து தாயை கொன்ற மகள் – 14 சென்ட் நிலத்துக்காக கூகுளில் ஐடியா தேடிய கொடூரம்!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மனைவி ருக்மணி(58). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் இந்துலேகா(36) இவர்களுடன் வசித்து வருகிறார். இந்துலேகாவின் கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இந்துலேகா கணவனுக்கு தெரியாமல் எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருவதாக கூறியதை அடுத்து கடனை உடனடியாக அடைக்க முடிவு செய்தார். ஆனால் கையில் பணம் … Read more

70-வது பிறந்தநாள் கொண்டாட்டம் | தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளையொட்டி கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து ம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாலை முதலே தலைமை அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். பகல் 12 மணி அளவில் விஜயகாந்த் வந்தார். … Read more

பஞ்சாப் பயணத்தில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு எஸ்.பி. காரணம் – 5 பேர் கொண்ட ஆய்வுக் குழு அறிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் பயணம் செய்தபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டுக்கு, பெரோஸ்பூர் சீனியர் எஸ்.பி தேவையான நடவடிக்கை எடுக்காததே காரணம் என உச்ச நீதிமன்றத்தில் 5 உறுப்பினர் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி சென்றார். அவர் செல்லும் பாதையில் விவசாயிகள் திடீரென மறியல் செய்ததால், மேம்பாலம் ஒன்றில் பிரதமரின் … Read more

மியான்மரில் 5 ஆண்டுக்கு முன் நடந்த இனப்படுகொலை நாள் – ரோஹிங்கியாக்கள் அனுசரிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் அகதி முகாம்களில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று இனப்படுகொலை நினைவு நாள் அனுசரித்தனர். மியான்மரின் சிறுபான்மையின மக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள், மேற்கில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் அதிகளவில் வசித்து வந்தனர். இவர்களில் சிலர் கடந்த 2012 முதல், பவுத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மர் நாட்டின் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ராக்கைன் போலீஸ் நிலையங்கள் மீது நடந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். அதனால் கடும் கோபம் கொண்ட மியான்மர் … Read more

Pratik: எலான் மஸ்க்கோட ஐடியா என்கிட்டயும் இருந்துச்சி. 13 வயதில் ரோபோ. சாதனை படைத்த சென்னை சிறுவன்.

பொதுவாக ரோபோக்கள் வெறும் சொல்கின்ற கட்டளையை நிறைவேற்றும் இயந்திரமாக மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு 13 வயது சிறுவன் மனித உணர்வுகளோடு இருக்கக்கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கி டெக் உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அப்துல் கலாம் தான் என்னோட ஹீரோன்னு ஆரம்பிச்சி எலான் மஸ்க் போல வரணும்னு சொல்லிருக்காரு பிரதிக். நல்லா இருக்கிங்களா என்று புன்சிரிப்புடன் பேச துவங்கிய பிரதிக்கின் சிறப்பு பேட்டி நமது சமயம் தமிழ் நேயர்களுக்காக. நிருபர் : உங்களை பற்றி சொல்லுங்கள் பிரதிக் பிரதிக்: … Read more

கால்சென்டர் அமைத்து பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் மணிகண்டன்(36). மரவாடியில் கூலி வேலை பார்க்கும் இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் (மகேந்திரா பைனான்ஸ்) இருந்து பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்று செல்பொனில் தொடர்பு கொண்ட நபர் ரூ.2 லட்சம் தனிநபர் கடன் தருவதாக கூறியுள்ளார். லோன் பெறுவதற்கு முதலில் லோன் பிராசஸிங்குக்கு இன்ஸியல் தொகையாக ரூ.8000-ஐ வங்கிக்கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார். மணிகண்டன் பணம் அனுப்பியதைத் தொடர்ந்து மறுநாள் ரூ.7340 … Read more