இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார் 60 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. வெளிநாட்டு கடன்களையும் திருப்பி செலுத்துவதை நிறுத்தி உள்ளது. … Read more

ஜார்க்கண்ட்:முதல்வர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ.பதவி பறிப்பு? புதிய சி.எம். லாலு ஸ்டைலில் மனைவி கல்பனா?

News oi-Mathivanan Maran ராஞ்சி: தமது பெயரில் நிலக்கரி சுரங்க முறைகேடு உரிமம் பெற்றதால் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் முதல்வர் பதவி பறிக்கப்பட்டால் மனைவி கல்பனாவை ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். … Read more

தன்னை நிராகரித்த நடிகர்களுக்கு வாணி போஜன் திருப்பி என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: ஈரம், ஆறாவது சினம், வல்லினம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அறிவழகன் தற்சமயம் இயக்கியுள்ள வெப் சீரிஸ்தான் தமிழ் ராக்கர்ஸ். குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் அறிவழகன் அருண் விஜய் கூட்டணி பார்டர் என்கிற திரைப்படத்தில் இணைந்தது. அந்த படம் ரிலீசுக்காக காத்திருக்க அதற்கு முன்னர் அவர்கள் சேர்ந்து பணிபுரிந்த மூன்றாவது ப்ராஜெக்ட் ஆன தமிழ் ராக்கர்ஸ்சை ஓடிடியில் வெளியிட்டுள்ளார்கள். அதில் கதாநாயகியாக நடித்திருக்கும் வாணி போஜன் இந்த வெப் சீரிஸ் … Read more

சிம்லா சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. சுற்றுலாத்துறைக்கு கொண்டாட்டம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்பதும் இதனால் சுற்றுலா துறை பெருமளவில் பாதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தற்போது விமானங்கள் ஓரளவுக்கு முழுமையாக இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒரு சில சுற்றுலா பகுதிகளுக்கு விமானம் இயக்கப்படாமல் உள்ளது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றான சிம்லாவுக்கு விமானங்கள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 6 முதல் மீண்டும் விமானங்கள் சிம்லாவுக்கு இயக்கப்படும் … Read more

சோனாலி: கோவா பார்ட்டியில் மர்ம மரணம்; பாஜக பெண் நிர்வாகி உடலில் காயங்கள் – கொலை வழக்கில் இருவர் கைது

ஹரியானாவை சேர்ந்த பாஜக பெண் பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத், கடந்த திங்கள்கிழமை இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட போது மர்மமான முறையில் இறந்து போனார். சோனாலி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக போலீஸார் தெரிவித்த போதிலும், அவரின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். சோனாலி கொலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் கேமரா உதவியுடன் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் சோனாலியின் உடம்பு டெல்லி … Read more

தீபாவளிக்கு முன்கூட்டியே பட்டாசு விற்க உரிமம் வழங்க வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்டாசு விற்பனை உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்க சாத்தியம் இருந்தாலும், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கான உரிமமும், இதர மாவட்டங்களில் ஓராண்டுக்கான உரிமமும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உரிம அனுமதிக்கு மார்ச் மாதத்திலேயே விண்ணப்பித்தாலும், விற்பனைக்கான உரிமம் தீபாவளிபண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டு வருகிறது. இது பட்டாசு வணிகர்களை பெருமளவு பாதிப்பதுடன், விற்பனைக்கான முன்னேற்பாடுகளை செய்வது, பாதுகாப்பாக விற்பனை செய்வது … Read more

கர்நாடக சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 24 பேர் வேனில் பெங்களூரு சென்றனர். நேற்று அதிகாலை துமக்கூரு மாவட்டம் சிராவை அடுத்துள்ள கலம்பெல்லா அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது வேன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்த 15 பேரை மீட்டு துமக்கூரு அரசு … Read more

முன்னாள் பிரதமர் அபே சுட்டுக்கொலை – ஜப்பான் காவல் துறை தலைவர் ராஜினாமா

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டதால், பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று காவல் துறை தலைவர் இடாரு நாகமுரா பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஜூலை 8-ம் தேதி ஜப்பானின் நாரா நகரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் காவல் துறை தலைவர் இடாரு நாகமுரா நேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: … Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு? அமைச்சர்களுக்கு சிக்கல்!

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர்கள் , சக்கரபாணி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை … Read more

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

சென்னை: உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நீதிபதி என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.அவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைவதையொட்டி, இன்று அவர் ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.