மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 40,000 கனஅடி நீர் வெளியேற்றம்; மேலும் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

உதகை நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணை

உதகை: உதகை நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணைக்கு சயான் உள்ளிட்ட 10 பேரும் ஆஜராகின்றனர்.

டெல்லி அரசை கவிழ்க்க பாஜ ரூ.800 கோடி பேரம்: முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி அரசை கவிழ்க்க ஆபரேசன் தாமரை மூலம் பாஜ முயற்சித்து வருவதை தடுப்பது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்கள் கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் வழங்க மோடி தலைமையிலான பாஜவினர் தயாராக இருக்கிறார்கள். டெல்லி அரசை கவிழ்ப்பதற்காக மட்டும் வைத்துள்ள இந்த ரூ.800 கோடி ரூபாய் எங்கிருந்து பாஜவுக்கு … Read more

அஸ்ஸாமில் பயங்கரவாதிகள் வேட்டை… அல்கொய்தாவுடன் தொடர்பில் இருந்த மேலும் 34 பேர் அதிரடி கைது

News oi-Mathivanan Maran குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக மேலும் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என்பது உளவுத்துறை அமைப்புகளின் எச்சரிக்கை. அஸ்ஸாமில் ஆளும் பாஜக அரசும் இதனை அடிப்படையாக வைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் அஸ்ஸாமில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 11 பயங்கரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் … Read more

ஜோதிகாவிடம் மன்னிப்பு கேட்பாராம் ரஜினி… சந்திரமுகி பற்றி பிரபு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட ஜெயில் செட் ஒன்று போடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் அவர்களுக்கு கடைசியாக பிளாக்பஸ்டர் ஆன படம் என்று சொன்னால் சிவாஜி மற்றும் சந்திரமுகிதான் இந்நிலையில் சந்திரமுகி திரைப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் பிரபு சமீபத்தில் அதில் நடந்த சுவாரசியமான தகவல்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். யானை டூ குதிரை படையப்பா என்கிற மிகப் பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த பின்னர் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் … Read more

கேரளாவில் அதானிக்கு எதிராக திடீர் போராட்டம்.. ரூ.7,525 கோடி திட்டம் என்ன ஆகும்?

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே அதானி குழுமத்தால் கட்டப்பட்டு வரும் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விழிஞ்சம் சர்வதேச டிரான்ஷிப்மென்ட் டீப்வாட்டர் பல்நோக்கு துறைமுகம் கௌதம் அதானியின் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தால் ரூ.7,525 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டால் மிகப்பெரிய சரக்கு கப்பல்களை கையாள முடியும் மற்றும் சர்வதேச கப்பல் பாதையில் ஒரு முக்கிய புள்ளியாக மாறும் என்று … Read more

“அவர் ஒருமையில் பேசவில்லை, உரிமையில் தான் அப்படி பேசினார்” – மேயர் பிரியாவின் விளக்கம்

Chennai Tamil News: தலைமை செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்  சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியாவை கடுமையாக பேசினார் என சர்ச்சை வெளியானது. அதற்கு மேயர் பிரியா பதிலளித்துள்ளதாவது: “மாண்புமிகு அமைச்சர் ஒருங்கிணைத்த செய்தியாளர் சந்திப்பில், கார்பரேஷன் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதை கூறினோம். எப்போதும் செய்தியாளர்கள் சந்திப்பில் எடுத்துரைக்கும் அவர், அன்று என்னை பேச சொன்னார். அதை நான் உறுதி செய்துகொள்ள மீண்டும் கேட்டேன்.  அது இயல்பான உரையாடல் மட்டுமே, அவர் என்னிடம் கடுமையாக … Read more

ஆறுக்குட்டி போல பல குட்டிகள் திமுகவுக்கு வர தயாராக உள்ளனர் – திமுக எம்.பி.ஆர்.எஸ். பாரதி.!

திமுக தொடர்ந்து வெற்றிபெற்று வருவதை தாங்க முடியாமல் பழனிசாமி பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திமுகவுக்கும் முதலமைச்சருக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் பேசி வருகிறார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆறுக்குட்டி போல பல குட்டிகள் அதிமுகவில் இருந்து … Read more

விருதுநகர் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

அருப்புக்கோட்டை அருகே பெண் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி கோவிலாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன்(42), பேரையூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (23), ராம்குமார்(20), அழகுராஜ்(19), 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவான பிரபாகரன், விஜய் ஆகிய 2 பேரை தேடி வந்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது இந்திய … Read more