“தேவையில்லாமல் அந்த மாதிரிக் காட்சிகளில் நடிக்க மாட்டேன்”: அருள்நிதியின் ஸ்மார்ட் பதில்

சென்னை: அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படம் நாளை ( ஆக 26) திரையரங்குகளில் வெளியாகிறது. இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ள டைரி, ஹாரர் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ளது. இந்நிலையில், அருள்நிதி உள்ளிட்ட ‘டைரி’ படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகள் 2010ல் வெளியான ”வம்சம்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயன், மௌனகுரு, தகராறு, டிமொன்டி காலனி, பிருந்தாவனம், டி பிளாக், தேஜாவு என சுமார் பதினைந்து … Read more

TCS அதிரடி அறிவிப்பு.. WFH முடிந்தது, எல்லோரும் ஆபீஸ் வரனும்..!

கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியாவில் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்தனர். இது ஊழியர்களுக்குத் தங்கள் வாழ்வில் கிடைக்காத ஜாக்பாட் ஆக மாறியது. இந்த 3 வருட வொர்க் ப்ரம் ஹோம்-ல் சிங்கிள் ஆக இருந்தவர்களுக்குத் திருமணமாகி குழந்தையும் பெற்ற பலரை பார்க்கிறோம். இது மட்டும் அல்லாமல் சொந்த ஊரில் வீடு கட்டுதல், நிலம் வாங்குவது, பெற்றோர்-க்கு மருத்துவச் சிகிச்சை எனப் பல முக்கியமான விஷயங்களைத் தாண்டி. பல வருடங்களுக்குப் … Read more

IND vs PAK: கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார், யார்? இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா?

Asia Cup 2022: India vs Pakistan Tamil News: 15 – வது ஆசிய கோப்பை போட்டிகள் வருகிற 27ம் முதல் தொடங்குகிறது. இதில் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில், இந்தியா கிரிக்கெட்டில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் கடைசியாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நேருக்கு நேர் சந்தித்தன. அந்த ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் 10 … Read more

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செப்.15-ல் தொடங்க முடிவு – வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் … Read more

காஷ்மீர் எல்லையில் கைதான பாக்., தீவிரவாதி: ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள்

காஷ்மீர்: ஜம்மு எல்லை அருகில் பிடிபட்ட தீவிரவாதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் ரத்தம் கொடுத்து காப்பாற்றியுள்ளனர். காஷ்மீரில் நேற்றுமுன்தினம் 72 மணி நேரத்தில் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. மேலும் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். ரஜோரி மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற அவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இந்த நபர் ஏற்கெனவே ஒருமுறை எல்லையில் ஊடுருவிய போது மனிதாபிமான அடிப்படையில் அவரை பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தனர். ஆனால் அதே நபர் தற்போது மீண்டும் ஊடுருவல் … Read more

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக சமீர் வி காமத் தேர்வு.!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக சமீர் வி காமத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது இப்பதவியை வகித்து வரும் சதீஷ் ரெட்டி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டதை அடுத்து டிஆர்டிஓ-வின் தலைவராகவும், செயலாளராகவும் சமீர் வி காமத் நியமிக்கப்பட்டுள்ளார். 1985ம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியில் படிப்பில் பி.டெக் முடித்த இவர், அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று 1989ஆம் ஆண்டில் டிஆர்டிஓ-வில் விஞ்ஞானியாக இணைந்தார். Source link

லண்டன் பாதசாரிகள் மீது பாய்ந்த கார்…பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

ஹாரோவின் செயின்ட் ஆன்ஸ் சாலையில் பயங்கர விபத்து. கார் மோதியதில் ஐந்து பாதசாரிகள் படுகாயம் பிரித்தானியாவின் ஹாரோ பகுதியில் பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதியதில் 5 பேர் வரை படுகாயமடைந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு லண்டனின் ஹாரோவில் (Harrow) உள்ள செயின்ட் ஆன்ஸ் சாலையில் வியாழன்கிழமை 18.10மணியளவில் நடந்து சென்று கொண்டு இருந்த பாதசாரிகள் மீது கார் ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்படுத்தியது. Image: Gosha Miel இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு … Read more

குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல்; 5 பேர் கைது

பள்ளிப்பட்டு:  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போதை பொருட்கள் தடுப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு  காவல் ஆய்வாளர் ராஜ்  தலைமையில்  போலீசார் அய்யனேரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ் வழியாக சோளிங்கரிலிருந்து திருத்தணி நோக்கி சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது மூட்டையில் அடைத்து கடத்திய  ரூ.25 ஆயிரம் மதிப்பிலான  குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ைபக்கில் வந்த … Read more

விலை உயர்வை கட்டுப்படுத்த கோதுமை மாவு ஏற்றுமதிக்கு தடை

புதுடெல்லி: கோதுமை மாவு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. உலகளவில் ரஷ்யா, உக்ரைன் கோதுமை ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளன. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையேயான போரினால் சர்வதேச சந்தையில் கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய கோதுமையின் தேவை அதிகரித்தது. இது நாட்டில் கோதுமை மாவு விலையில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில், கோதுமை … Read more