‛கோப்ரா' டிரைலர் வெளியீடு ; எப்படி உள்ளது

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛கோப்ரா'. விக்ரம் பல விதமான வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அடுத்தவாரம் ஆக., 31ல் படம் வெளியாக உள்ள நிலையில் இதன் டிரைலர் இன்று(ஆக.,25) மாலை 5.15 மணியளவில் வெளியிடப்பட்டது. டிரைலரின் துவக்கத்திலேயே விக்ரமை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு போலீசார் அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அதன்பின் ரஷ்யாவில் விரிவடையும் காட்சிகள், அதில் … Read more

இன்ஸ்டாவில் சாதனை படைத்த முதல் கோலிவுட் ஹீரோ: சிம்புவின் தரமான சம்பவம், கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை: சிம்புவின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. இறுதியாக அவர் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தந்தை டி.ஆர். ராஜேந்திரன் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு, ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஸ்டைல், டான்ஸ், ஆக்சன் … Read more

காங்கிரசார் சத்திய அரிச்சந்திரர்களா?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி

பெங்களூரு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- மக்களுக்கு புரிகிறது 40 சதவீத கமிஷன் புகார் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். ஆனால் புகாருக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆதாரங்கள் இன்றி வெறும் புகார்களை மட்டும் கூறினால் விசாரணை நடத்த முடியாது. சித்தராமையா பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். முறைகேடு விவகாரங்கள் குறித்து விசாரிக்க லோக்அயுக்தா அமைப்பு உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவால் ஊழல் தடுப்பு படையின் அதிகாரம் … Read more

மாநில அளவிலான இளையோர் தடகள போட்டி: பெரம்பலூர் மாணவி வெண்கல பதக்கம் பெற்றார்

பெரம்பலூர் கிருஷ்ணகிரியில் 39-வது மாநில அளவிலான இளையோர் தடகள போட்டிகள் கடந்த 16-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் கடந்த 20-ந்தேதி நடைபெற்ற 18 வயது பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதியை சேர்ந்த மாணவி அபர்ணா 1 நிமிடம் 12 வினாடிகளில் கடந்து 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார். இதையடுத்து, அவர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை நேரில் சந்தித்து … Read more

டெக்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் பதிலடி தர தாமதம்: அமெரிக்க போலீஸ் அதிகாரி அதிரடி பணிநீக்கம்

வாஷிங்டன், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டே நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளியில் கடந்த மே மாதம் 24-ந் தேதி நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டது அந்த நாட்டையே உலுக்கியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது போலீசார் வந்து பதிலடி கொடுப்பதில் ஏற்பட்ட தாமதம்தான், இந்தளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பதில் 77 நிமிடம் தாமதம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. … Read more

இலங்கை-யில் சாக்லேட் தடையாம்..? ரணில் விக்கிரமசிங்க அரசு எடுத்த திடீர் முடிவு..!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் சரிவில் இருந்து மீளாத நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்காகப் போராடி வருகிறது. இதேவேளையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற போதுமான நிதி நிலை மற்றும் வருவாய் ஈட்டும் கட்டமைப்பையும் மாற்றங்களையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு உள்ளது. இதன் ஒருபகுதியாக அன்னிய செலாவணி இருப்பைக் காப்பாற்றும் விதமாக முக்கியத் தடையை விதித்துள்ளது இலங்கை அரசு. இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்து போச்சு.. … Read more

சோனாலி போகட் மரணம்: கொலை வழக்கு பதிவு; பிரேதப் பரிசோதனையில் காயங்கள் கண்டுபிடிப்பு

பாஜக தலைவர் சோனாலி போகட்டின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோவா காவல்துறை வியாழக்கிழமை கொலை வழக்காக பதிவு செய்துள்ளது. 42 வயதான நடிகையும்அரசியல்வாதியுமான சோனாலி போகட் செவ்வாயன்று கோவாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் மாரடைப்பால் மரணமடைந்தார். போலீஸ் ஐ.ஜி ஓம்வீர் சிங் பிஷ்னோய், “இறந்தவரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அஞ்சுனா காவல் நிலையத்தில் 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். சோனாலி போகட்டின் சகோதரர் ரிங்கு டாக்கா புதன்கிழமையன்று போகட்டின் … Read more

திமுக செய்யும் பச்சைத் துரோகம்: பல்கலை. பணியாளர்கள் விவகாரத்தில் சீமான் சாடல்

சென்னை: “10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் பல்கலைக்கழகத் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து, அதன் மூலம் வாக்குகளைப் பெற்று ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த திமுக, தற்போது அதனை நிறைவேற்ற மறுப்பது பல்கலைக்கழக ஊழியர்களுக்குச் செய்யும் பச்சை துரோகமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்களைப் … Read more

பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான உறுதியான ஆதாரம் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்த 29 மொபைல் போன்களில் பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை மத்திய அரசு அமைப்புகள் உளவு பார்ப்பதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இது நாட்டில் அரசியல் புயலை கிளப்பியது. கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் … Read more

புதிய பதவி உயர்வு; கொள்கையை கைவிடக்கோரி அணுசக்தி ஊழியர்கள் உண்ணாவிரதம்

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், அணு சக்தி துறையின் டிராம்பே கவுன்சில் மற்றும் டிராம்பே சைன்டிபிக் கவுன்சிலின் புதிய பதவி உயர்வு கொள்கையை கைவிட வேண்டி, தொழிற்சங்க இணைப்பு குழு சார்பில்  கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ரவுண்டானா அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு  தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தின் நிறுவன உறுப்பினர் சக்கரபாணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தின் தலைவர்  சின்ன கோவிந்தன், அணு ஆற்றல் ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜான், … Read more