சென்னை முகப்பேரில் போக்குவரத்து தலைமை பெண் காவலரின் மகள் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: புளியந்தோப்பு போக்குவரத்து தலைமை பெண் காவலர் கலைவாணியின் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா… 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 16,299 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,06,996ஆக உயர்ந்தது.* புதிதாக 54 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

திருச்சி: போட்டிபோட்டு சென்றதில் பற்றி எரிந்த 2 லாரிகள்… 2 பேர் உடல் கருகி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் நள்ளிரவில் 2 லாரிகள் உரசிக் கொண்டதில் இரண்டு லாரிகளும் தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். அரியலூரிலிருந்து வள்ளியூருக்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. அதே சாலையில் திருச்சியிலிருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்றும் போட்டி போட்டுக் கொண்டு இரண்டு லாரிகளும் வேகமாகச் சென்றுள்ளன. அப்போது அதிவேகமாகச் சென்ற நிலையில், தொண்டைமாங்கினம் என்ற இடத்தில் இரண்டு லாரிகளும் ஒன்றோடு … Read more

இந்தியாவில் நுழையும் கனடா நாட்டின் கம்பெனி… காபி பிரியர்களுக்கு கொண்டாட்டம்!

காபி என்பது இந்தியர்கள் மிகவும் விரும்பி அருந்தும் ஒரு பானம் என்பதும் காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலான இந்தியர்களுக்கு உள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியர்களின் காபி தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே பல இந்திய காபி தயாரிக்கும் நிறுவனங்களும் ஒரு சில வெளிநாட்டு காபி நிறுவனங்களும் உள்ளன. அந்த வகையில் தற்போது ஒரு கனடா நிறுவனம் இந்திய காபி சந்தையில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா காபி நிறுவனம் கனடா … Read more

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து… `சக்திமான்’ முகேஷ் கன்னாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

90’s கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களில் ஒன்று சக்திமான். அப்போது முதல் இப்போது வரை சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணாவின் நடிப்பின் தாக்கம் எல்லா 90’s கிட்ஸ்களிடமும் இன்னும் இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. இப்படி மக்களிடம் பிரபலமான சக்திமான் புகழ் நடிகர் முகேஷ் கண்ணா பீஸ்ம் ​​இன்டர்நேஷனல் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் அவ்வப்போது சில கருத்துகளைப் பேசி வீடியோவாக பதிவிடுவது வழக்கம். சக்திமான் அப்படி சமீபத்தில் பேசி வெளியிட்ட வீடியோ சர்ச்சையாகியுள்ளது. அந்த வீடியோவில், … Read more

வீட்டில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மத்திய அரசு மானியம் – பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

சென்னை: வீடுகளுக்கு சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோருக்கு, மத்திய அரசு வழங்கும் மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக, வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மத்திய அரசு 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோர் தமிழ்நாடு எரிசக்தி … Read more

அரசியல் சுயநலத்தால் தீர்வு காண முடியாது – பானிப்பட்டில் 2ஜி எத்தனால் ஆலையை அர்ப்பணித்து பிரதமர் மோடி பேச்சு

பானிப்பட்: அரசியல் சுயநலத்தாலும், குறுக்குவழி அரசியலாலும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஹரியாணா மாநிலம் பானிப்பட் நகரில் ரூ.900 கோடி மதிப்பில் 2-வது தலைமுறைக்கான எத்தனால் உற்பத்தி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லியிலிருந்து காணொலி வசதி மூலம் இந்த ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் … Read more

பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனையா? டாஸ்மாக் நிறுவனம் சொன்ன பதில்!

தமிழகத்தில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் அது மனித உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும். ஆனால், இந்த அரசாணையின்படி மதுவை … Read more

ஐபிஎல் அல்லாத புதிய கிரிக்கெட் தொடரில் தோனி?

மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கில் தங்கள் உரிமையின் பெயரை அறிவித்து, அதற்கு ‘எம்ஐ கேப் டவுன்’ என்று பெயரிட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க் உரிமையை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்களும் இந்த வாரம் புதிய அணியின் பெயரை அறிவிக்க உள்ளனர்.  மிக முக்கியமாக, சிஎஸ்கேயின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் புதிய அணியை இயக்குவதில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வரும் நாட்களில் … Read more