இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தைஇறுதிச் சடங்கில் எழுந்ததால் அதிர்ச்சி| Dinamalar

வில்லா டி ராமோஸ் -மெக்ஸிகோவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, இறுதிச் சடங்கில் திடீரென எழுந்து, சில மணி நேரங்களுக்குப் பின் மீண்டும் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவின், வில்லா டி ராமோசைச் சேர்ந்தவர் கமீலா ரொக்ஸானா. இவரது, 3 வயது குழந்தைக்கு, சமீபத்தில் வயிற்று வலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, டாக்டர்கள் குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். ஆனாலும், … Read more

நானே வருவேன் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த ஸ்பெஷல் நாளிலா?…உற்சாகமான ரசிகர்கள்

சென்னை : தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது.இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சில … Read more

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: பஞ்சாப் போலீஸ் அதிகாரி கடமை தவறி உள்ளார் – சுப்ரீம் கோர்ட்டு குழு அறிக்கை

புதுடெல்லி, பிரதமர் மோடி கடந்த ஜனவரி 5-ந் தேதி பஞ்சாப் சென்றார். அப்போது அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரணை குழு அளித்த அறிக்கையை நீதிபதிகள் வெளியிட்டனர். அவர்கள் கூறுகையில், ‘பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பயணத்தின்போது பெரோஸ்பூர் மாவட்ட சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு சட்டம் … Read more

கொரோனா தடுப்பூசி விவகாரம்: அமெரிக்க ஓபனில் இருந்து நோவக் ஜோகோவிச் விலகல்

நியூயார்க், செர்பியா நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (வயது 35). உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், வருகிற திங்கட் கிழமை தொடங்க இருக்கிற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை என கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஜோகோவிச் வெளியிட்ட … Read more

ரஷிய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, 6 மாதங்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய இந்த போரால், உக்ரைனில் உள்ள பொதுமக்கள், வீரர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கல்வி நிலையங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் உருக்குலைந்து போயுள்ளன. போரானது நீண்டு கொண்டே செல்கிறது. தொடக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. உக்ரைன் போரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுமிகள், பெண்களுக்கு ரஷிய … Read more

இது தான் உண்மையான விஷம்.. ஆனந்த் மஹிந்திராவின் அற்புதமான பதிவு!

இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின் தலைவரான, ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைதளங்களில் எப்போதும் படு பிசியாக இருப்பவர். அவ்வப்போது தனக்கு பிடித்தமான, சுவாரஸ்யமான, எதிர்த்தமான பதிவுகளை பதிவிடுவது இவரின் வழக்கம். இதற்காகவே இவரை ட்விட்டரில் தொடரும் ஒரு ரசிகர் பட்டாளமும் உண்டு. அப்படி இவர் பதிவிட்ட ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இதற்கு பல நெட்டிசன்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றார். அப்படி என்ன தான் பதிவிட்டார்? அதன் மூலம் என்ன சொல்ல … Read more

மதுரை | மாணவி வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் மாயம் – ரூ.26 ஆயிரமாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மாணவி வங்கி கணக்கில் பணம் எடுக்காமலேயே ரூ.6 ஆயிரம் மாயமான நிலையில் மாணவிக்கு ரூ.26 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஹார்விப்பட்டியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் 2012-ல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இவர் வைத்திருந்து ஏடிஎம் கார்டு சரியாக செயல்படாததால், பணம் எடுக்க 22.5.2012-ல் வங்கிக்கு சென்றார். பணம் எடுத்து விட்டு வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு செய்தார். அப்போது 2.2.2012-ல் ஏடிஎம் மூலமாக ரூ.6000 பணம் எடுத்ததாக பதிவு செய்யப்பட்டது. … Read more

சுரங்க ஒதுக்கீடு ஊழல் | தேர்தல் ஆணைய பரிந்துரையால் பதவி இழக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்?

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அம்மாநில புதிய முதல்வராக ஹேமந்த்தின் மனைவி கல்பனா சோரன் தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதல்வர் பெற்றிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச … Read more

கஞ்சாவை ஒழிப்பது எப்படி? அன்புமணி ராமதாஸ் சொன்ன யோசனை!

காவல்துறையினரால் பிடிபடும் கஞ்சாவை விட 100 மடங்கு கஞ்சா புழக்கத்தில் விடப்படுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன் என்று பாமக தலைவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில், ஆந்திராவிலிருந்து சரக்குந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், கஞ்சா ஒழிப்புக்கு இது போதுமானது அல்ல. காவல்துறையினரால் பிடிபடும் கஞ்சாவை விட 100 மடங்கு கஞ்சா … Read more