என்னது ரூ.2 லட்சத்திற்கு ஃபிரிட்ஜா? இணையத்தை அதிர வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

சென்னை : விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் கூட்டுக்குடும்பத்தின் நன்மை, சகோதர ஒற்றுமை உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் ஹேமா ராஜ்குமார்.சின்னத்திரையில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராமிலும் இவர் … Read more

அவாடா குழுமத்தின் ரூ.40,000 கோடி முதலீட்டு திட்டம்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?

நாட்டில் வளர்ந்து வரும் -பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனிய தொழில் வளர்ச்சிக்கு மத்தியில், அவாடா குழுமம் ராஜஸ்தானில் மிகப்பெரிய அளவிலான முதலீடு செய்யவுள்ளது. இந்த முதலீடானது ராஜஸ்தானில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்கவுள்ளதாகவும், இதற்காக 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ராஜஸ்தானின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினையும் செய்துள்ளது. Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 … Read more

ஒரு மீன் ரூ.20,000; ஆந்திராவின் `புலாசா மீன்': மக்கள் போட்டிப் போட்டு வாங்க காரணம் என்ன?

ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் கிடைக்கக் கூடிய அரிய வகை மீன் தான் `புலாசா மீன்’. ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் மட்டுமே இந்த மீன் அப்பகுதியில் கிடைக்கும் என்பதால், இந்த மீனைப் போட்டிப் போட்டுக் கொண்டு அதிக விலையிலும் மக்கள் வாங்குவதுண்டு. காரணம் இந்த மீனை சமைத்து சாப்பிடுவதை கௌரவமாக நினைக்கிறார்கள் ஆந்திர மக்கள். இதை வாங்கி மற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் வழக்கமும் இங்குண்டு. அந்தளவுக்கு ஆந்திர மக்களின் வாழ்வோடு இரண்டற … Read more

கல்லூரி மாணவர்கள் இடையே ஆயுத கலாசாரத்தை அனுமதிக்க முடியாது: ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி வனிதா

மதுரை: கல்லூரி மாணவர்கள் இடையே ஆயுதக் கலாசாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என டிஜிபி வனிதா எச்சரித்துள்ளார். மதுரை ரயில்வே காவல் உட்கோட்டத்தில் வேலை பளு காரணமாக காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குதல், பொதுமக்களை எவ்வாறு அணுகுவது உள்ளிட்ட உளவியல் சார்ந்த ஆலோசனை வழங்கும் கலந்துரையாடல் மதுரை ரயில்வே கோட்ட அலுவலக பகுதியில் வியாழக்கிழமை நடந்தது. ரயில்வே இருப்புப் பாதை காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா தலைமை வகித்தார். ரயில்வே காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் … Read more

எனக்கு பெயில்..உனக்கு ஜெயில்; கெத்தா காலரை தூக்கிய ஓபிஎஸ்!

அதிமுகவில் தலைமை பதவி பஞ்சாயத்து உச்சத்தில் உள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் நீதிமன்ற கதவுகளை தட்டிய நிலையில், அவருக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பு அவரது ஆதரவாளர்களுக்கு முதற்கட்டமான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் ஓபிஎஸ்சை நீக்கிவிட்டு தனி ஆவர்த்தனம் செய்யலாம் என திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிமன்றம் ஆரம்ப நிலையிலேயே சம்மட்டி அடியை கொடுத்துள்ளது. இதனால் அதிமுக விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை … Read more

என்னது 800 கோடிக்கு பேரமா? – ரொம்ப காஸ்ட்லியான லோட்டஸ் ஆபரேஷனா இருக்கும் போல!

எதிர்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் ஆளுங்கட்சியில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி, அவர்களை தங்கள் பக்கம் இழுத்து, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசமாக்கும் ஆபரேஷன் லோட்டஸ் எனும் தந்திரம் பாஜகவுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. இந்த தந்திர வழியை பயன்படுத்தி, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை கவிழ்த்து, தங்களின் சொல் பேச்சை கேட்கும் அதே கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவை அண்மையில் முதல்வர் நாற்காலியில் அமர வைத்து … Read more

ஜோ பைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா..!- மீண்டும் தொடங்கிய சிகிச்சை..!!

ஏற்கனவே கொரோனா தொடரிலிருந்து ஜில் பைடன் மீண்டு வந்துள்ள நிலையில், தற்பொழுது அவருக்கு மீண்டும் கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிஉயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதன் 4வது அலையும் பரவி வருகிறது. இந்த நிலையில்,, உலகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 21 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று … Read more

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் சரிவு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (25) 183.16 அலகுகளாக பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 2.03 வீத சரிவாகும் என்பதுடன், நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீட்டு மதிப்பு 8,828.08 அலகுகளாக பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், S&P SL20 சுட்டெண் நாளின் போது 78.27 புள்ளிகள் சரிந்து 2,866.23 புள்ளிகளாக பதிவாகியது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 2.66 வீத சரிவாகும். … Read more

எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை: முதலமைச்சர் முக ஸ்டாலின்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் திமுக பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட கவுன்சிலருமான அபிநயா, தேதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன், முன்னாள் பாஜக மாநில மகளிரணிச் செயலாளர் மைதிலி உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய … Read more

கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் திடீரென்று உருவான சூறாவளி.!

போர்ச்சுக்கல்லில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் திடீரென்று சூறாவளி உருவானது. அதீத வெப்ப அலை காரணமாக அல்வாவ் இயற்கை பூங்காவில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதில், 11 ஆயிரத்து 200 ஏக்கருக்கு மேல் பசுமை பகுதிகளில் எரிந்த நிலையில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயில் திடீரென உருவான சூறாவளி காட்சியை வீரர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். Source link