குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை

காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியம் அந்தரந்த விலக்கில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில்  ஒன்றியத்திற்குட்பட்ட அரசகுளம், வேளாங்குளம், அணியவயல், அந்தரந்தல்,  சிவந்தரேந்தல், வழியாக சிலுக்கபட்டி செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமான  நிலையில் உள்ளது. மேலும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத  அளவிற்கு சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் இப்பகுதியில் இயக்கப்படும் தனியார் மினி பேருந்து அடிக்கடி … Read more

சாலையின் அமைப்பை பொறுத்தவரை தாழ்தள பேருந்துகளை இயக்கினால் சேதம் அதிகமாகும்: மாநகர போக்குவரத்துக்கழகம்

சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் விதிகளை பின்பற்றி புதிய பேருந்து கொள்முதல் தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. புதிய பேருந்து கொள்முதல் தொடர்பான உத்தரவை தெளிவுப்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனு வாபஸ் அளிக்கப்பட்டது. சாலையின் அமைப்பை பொறுத்தவரை தாழ்தள பேருந்துகளை இயக்கினால் சேதம் அதிகமாகும் என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிரிவித்துள்ளது.

பாக். – இந்தியா எல்லை வழியே போதைப்பொருள் கடத்த முயற்சி!: 8 கிலோ ஹெராயின் பறிமுதல்.. எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் அதிரடி..!!

சம்பா: பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக கடத்த முயன்ற போதைப்பொருள் மீட்கப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக போதைப்பொருள் கடத்த முயன்ற சதிச்செயலை எல்லை காவல்படையினர் முறியடித்திருக்கின்றனர். இன்று அதிகாலை காஷ்மீரின் சம்பா பகுதி எல்லை வழியாக கடத்த முயன்ற போதைப்பொருள் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சுமார் 8 கிலோ போதைப்பொருள் ஹெராயினாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் கடத்தல்காரர் மீது பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டனர். குண்டடி … Read more

மதிமுகவினர் தொடுத்த வழக்கு… சீமான் விடுதலை

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கிலிருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் ஒரே நேரத்தில் வந்தபோது அவர்களை வரவேற்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் வந்திருந்தனர். அப்போது இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க வை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை … Read more

தேர்தல் ஆணையம் அதிரடி! பதவி விலகுகிறாரா ஜார்க்கண்ட் முதல்வர்? முழு விபரம் இதோ

தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்யும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அகில இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்த கூட்டணியின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். இந்நிலையில் சுரங்கம் ஒன்றை முதல்வர் ஹேமந்த் சோரன் தனது குடும்ப நிறுவனத்திற்கு முறைகேடாக … Read more

சீரியல் நடிகர் நவீன் மீது புகார் : சக நடிகையையும் தாக்கினாரா?

கலர்ஸ் தமிழ் சேனலின் 'இதயத்தை திருடாதே' சீரியலின் மூலம் சின்னத்திரையில் நுழைந்த நவீன் தற்போது அதே சேனலில் 'இது கண்ட நாள் முதல்' என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகியும் ஸ்பாட்டுக்கு வராமல் இருந்த நவீனை உதவி இயக்குநர் குலசேகரன் என்பவர் அவரது அறைக்கு சென்று அழைத்துள்ளார். அப்போது கோவமடைந்த நவீன் குலசேகரனின் கண்ணத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது. இதில் குலசேகரனுக்கு அடிப்பட்டு முகத்தில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நவீன் மீது … Read more

உருமாறி போகவும் தெரியும்.. பதுங்கி அடிக்கவும் தெரியும்.. ஹி ஈஸ் கோப்ரா.. மிரட்டலான ட்ரெயிலர் இதோ!

சென்னை : நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகினற்னர். இந்நிலையில் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. வெளியா சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றுள்ளது. நடிகர் விக்ரம் நடிகர் விக்ரம் எப்போதுமே தன்னுடைய படங்களின்மூலம் மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கடத்தி … Read more

ரூ.9ல் விமான டிக்கெட்டா.. நம்மூரில் ஒரு குச்சி ஐஸ் கூட வாங்க முடியாதே..!

விமான பயணம் என்பது பலருகும் கனவு பயணமாக இருக்கும். அப்படிபட்ட உங்கள் கனவை வெறும் 9 ரூபாயில் நிறைவேற்ற ஒரு சலுகை உள்ளது. அதுவும் இந்தியாவில் அல்ல சர்வதேச நாடான வியட்நாமுக்கு பயணிக்க இத்தகைய ஆஃபர் கிடைத்துள்ளது. சர்வதேச விமான நிறுவனமான வியட்ஜெட் தான் இத்தகைய ஆஃபரை வாரி வழங்கியுள்ளது. அதெல்லாம் சரி இந்த ஆஃபரின் முழு விவரம் என்ன? எப்போது புக் செய்யலாம்? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். இந்த ஒரு … Read more

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையை 6.8 சதவீதமாக குறைக்க தீர்மானம்

2022 இல் திட்டமிடப்பட்ட நிதிப்பற்றாக்குறையை 9.9 சதவீதத்திலிருந்து 2023 இல் 6.8 சதவீதமாக குறைப்பதை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை இதுவரை காலமும் முகம் கொடுக்காத அளவு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நாடெங்கிலும் இடம்பெற்றுள்ளது. இதனால் 2022ல் 9.9 சதவீதமாக காணப்படும் நிதிப்பற்றாக்குறையை 2023ல் 6.8 சதவீதமாக குறைக்க இலங்கை திட்டமிட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார். 2023-2025 … Read more

புதிய விமானநிலையம் வருவதை வரவேற்கிறோம்! அதே நேரத்தில்…..! என்ன சொல்ல வருகிறார் அன்புமணி!

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைகிறது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த விமான நிலையம் அமைவதால் பாதிக்கப்படும் பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 12 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களை சந்தித்து கருத்து கேட்பு கூட்டத்தினை நடத்தினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.   பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ‘சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்துர் மற்றும் அதன் சுற்றியுள்ள … Read more