வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா: இன்று முதல் செப்.11 வரை 750 சிறப்பு பேருந்துகள்

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (ஆக.25) முதல் செப்.11-ம் தேதி வரை 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் ஆக.25-ம் தேதி முதல் செப்.11-ம் தேதி … Read more

2024 டார்கெட் – உத்தரப் பிரதேச பாஜகவுக்கு புதிய தலைவர். யார் இவர்?

லக்னோ: மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே உத்தரப் பிரதேச பாஜக தலைவராக பூபேந்திர சிங் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும், சட்டப்பேரவை கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார் பூபேந்திர சிங் சவுத்ரி. இவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினரின் வாக்குகளை தக்கவைப்பது பாஜகவுக்கு பெரும் பலமாக அமையும். இதைக் கருத்தில் கொண்டே பூபேந்திர சிங் சவுத்ரி மாநில பாஜக … Read more

சாதி குறித்து பேசிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா சஸ்பென்ட்…!- நீதிபதி அதிரடி உத்தரவு ..!

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறை தலைவர் அனுராதா தனது துறை மாணவர்களிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோவில் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாக பேசியது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பேஸ்புக், வாட்சாப் என அனைத்து சமூக ஊடகங்களிலும் அவர் பேசிய ஆடியோ பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஒரு மாணவருடன் பேசிய ஆடியோவில் “முகத்தைப் பார்த்தாலே தனக்கு மேல் சாதியா ..? கீழ் சாதியா ..? என தெரிந்துவிடும் எனவும், நீ என்ன … Read more

சவப்பெட்டியுடன் சிரித்தபடி போட்டோ எடுத்த குடும்பம்: வைரல் போட்டோவால் பரபரப்பு

சவப்பெட்டியுடன் சிரித்துக் கொண்டே ஒரு குடும்பம் குரூப் போட்டோ எடுத்து போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணாடி ப்ரீசரில்  வைக்கப்பட்ட சடலத்தின் முன் பக்கமும், பின் பக்கமும் குடும்ப உறவினர்கள் சூழ்ந்து கொண்டு சிரித்துக் கொண்டே குடும்ப போட்டோவுக்காக போஸ் கொடுத்துள்ளனர். இது இந்த போட்டோவை காணும் பலர் மனதிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது. துக்க … Read more

பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிடாதீர்கள் எடப்பாடி – ஆர்.எஸ்.பாரதி காட்டம்

திமுக அமைப்பு செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர் எஸ் பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக கொங்கு மண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், அவர் செல்லக்கூடிய இடங்களில் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு கொடுப்பதை பார்த்த எடப்பாடி பழனிசாமி வயிற்றெரிசச்சலுடன், பொய் மூட்டையாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளதாக குற்றம் சாட்டினார் . திமுக ஆட்சியில் நிர்வாகம் உட்பட அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும்  அவர் … Read more

ஜி.வி.பிரகாஷின் `பென்சில்' பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணம்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-இல் வெளியான `பென்சில்’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மணி நாகராஜ். இப்படத்திற்குக் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து `வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் நாசர், `நீயா நானா’ கோபிநாத், சீதா, வனிதா விஜயகுமார், அனிகா சுரேந்திரன், கிருஷ்சிகா, லெனா குமார் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் மணிராஜ், திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். இளம் இயக்குநரான … Read more

உக்ரைன் அழகிக்காக மனைவியைக் கைவிட்ட பிரித்தானியர்… காதலியுடன் உக்ரைனுக்கே செல்ல முடிவு

உக்ரைன் அழகிக்காக தன் மனைவியைக் கைவிட்டார் பிரித்தானியர் ஒருவர். இப்போது புதுக்காதலியுடன் உக்ரைனுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பத்து ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியை, சந்தித்து பத்தே நாட்கள் ஆன காதலிக்காக கைவிட்டார் பிரித்தானியர் ஒருவர். ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு ஓடி வந்தார் சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண். அவருக்கு Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29), அவரது மனைவியான லோர்னா (Lorna) … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தல்: செப்டம்பர் 5ந்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்…

அகமதாபாத்:  குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி  செப்டம்பர் 5ந்தேதி தனது  முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் செப்டம்பர் 15ந்தேதிக்குள் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பாஜகவுக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சி களமிறங்கி உள்ளது. பொதுமக்களுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம், பல … Read more

பள்ளியில் 3 மாணவிகள் விஷம் குடிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரே பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூவர் நெருங்கிய தோழிகள். நேற்று இவர்கள், பள்ளியில் இருந்தபோது எறும்பு பொடியை தண்ணீரில் கலக்கி குடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக 2 மாணவிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், ஒரு மாணவி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். மற்ற … Read more