ராணுவ ஆட்தேர்வில் வன்முறை வெடித்தது துப்பாக்கி சூட்டால் அதிர்ச்சி
போபால்: மத்திய பிரதேசத்தின் மோரேனா மாவட்டத்தில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் அக்னிபாதை திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்ய நேற்று நடந்த சோதனையில் இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், அம்பேத்கர் திடலில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவை விரட்டி கொண்டு ஓடுவது, பின்னர் இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபடுவது, உருட்டு கட்டைகளைக் கொண்டு தாக்கி கொள்வது, இறுதியில் கைகலப்பில் ஈடுபட்டது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன. … Read more