லொட்டரி வென்றதை நடித்து காட்டிய நபருக்கு மீண்டும் அடித்த அதிர்ஷ்டம்! நேரலையில் உலகமே பார்த்த காட்சி இப்போது வைரல்

கோமாவில் இருந்து மீண்டு வந்த நபருக்கு விலைஉயர்ந்த கார் ஒன்று பரிசாக விழுந்தது. பரிசு விழுந்ததற்காக தொலைக்காட்சி ஒன்றிருக்கு லொட்டரி சீட்டை வாங்கி சுரண்டுவது போல் நடித்த அவருக்கு மீண்டும் ஒரு பெரிய தொகை பரிசாக விழுந்தது. (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது) கோமாவில் இருந்து மீண்ட அவுஸ்திரேலிய நபர் ஒருவர் லொட்டரியில் பரிசு வென்றதை நடித்துக்காட்டும்போது, மீண்டும் அவரும் பெரும் தொகை பரிசாக விழுந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் … Read more

இலங்கை கடலோர காவல்படை அட்டூழியம்: காரைக்கால் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடலோர காவல்படையினர் சிறை பிடித்தனர். காரைக்கால் அடுத்த கீழ காசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் உலகநாதன் (28). இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கீழ காசாகுடி மேடு பகுதியை சேர்ந்த கார்த்தி, செல்வமணி, அசோகன், மதன், அபிஸ், மணிவண்ணன் உட்பட 12 மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை முல்லைத்தீவு அருகே இந்திய கடற்பரப்பில் மீன் … Read more

பெங்களூருவில் மக்கள் கடும் தவிப்பு 3வது நாளாக வடியாத மழைநீர்: மேலும் 10 நாட்கள் மழை நீடிக்கும் என எச்சரிக்கை

பெங்களூரு: பெங்களூருவில் 3வது நாளாக நேற்றும் மழைநீர் வடியாததால் பல குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. விமான சேவையும் பாதிக்கப்பட்டது. பெங்களூரு மாநகரில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநகரின் மொத்த பரப்பளவில் 50 சதவீதம் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. ஐடி காரிடார், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் ஹப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.  ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய பெரும்பாலான நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. 3 நாளாகி நேற்றும் … Read more

மூக்கு வழி செலுத்தும் தடுப்பு மருந்துஅவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி| Dinamalar

புதுடில்லி, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்துள்ள, மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருத்தின் அவசரகால பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ., அனுமதி அளித்துள்ளது.நம் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, ‘கோவிஷீல்டு, கோவாக்சின்’ உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதில், ‘கோவாக்சின்’ தடுப்பூசியை, தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த நிறுவனம், மூக்கு வழியாக செலுத்தக்கூடிய, ‘பிபிவி 154’ என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது. இந்த மருந்தை 18 … Read more

ஜெயலலிதா அன்று சொன்னது : ரஜினி மகிழ்ச்சி

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் பங்கேற்று டிரைலரை் வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த். பின்னர் பேசிய அவர், ‛‛நம்ம விக்ரம் என்று கூறி விக்ரம் படத்தின் வெற்றிக்காக அருகில் இருந்த கமலை கட்டி அணைத்து பாராட்டினார். தொடர்ந்து பேசிய ரஜினி, ‛‛மணிரத்னம் அசுர திறமைசாலியான மனிதர். ஆரம்பத்தில் சின்ன சின்ன நடிகர்களை வைத்து படம் பண்ணி தனது சினிமா கேரியரை துவங்கியவர் இன்று பெரிய இடத்திற்கு வந்துள்ளார். … Read more

ஹின்னம்னார் சூறாவளிதென் கொரியாவில் கரையை கடந்தது| Dinamalar

சியோல்: சக்தி வாய்ந்த சூறாவளியான, ‘ஹின்னம்னார்’ தென் கொரியாவில் நேற்று கரையை கடந்தது. அப்போது, 3 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது, சாலைகள் பெரும் சேதம் அடைந்தன, 66 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின, ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.கிழக்காசிய நாடான தென் கொரிய கடற்பகுதியில், ‘ஹின்னம்னார்’ என்ற சூறாவளி மையம் கொண்டது. அந்நாடு இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த சூறாவளியாக உருவானது. இந் நிலையில் அது நேற்று சொகுசு … Read more

கைத்தட்டி பாராட்டிய ரஜினி..மன்னிப்பு கேட்கச் சொன்ன ரசிகர்கள் ..வடிவுக்கரசியின் திகில் அனுபவம்

ரஜினிகாந்தை திட்டி வசனம் பேசுவதற்காக ரயிலை மறித்து மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்களுடனான திகில் அனுபவம் பற்றி வடிவுக்கரசி பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்தில் வயதான மூதாட்டி வேடத்தில் ரஜினியை பிடிக்காதவராக வடிவுக்கரசி நடித்திருப்பார். ரஜினியை அந்த படத்தில் மிகவும் தரக்குறைவாக திட்டுவார் வடிவுக்கரசி. இந்தக்காட்சியை ரஜினிகாந்த கைத்தட்டி செட்டில் பாராட்டியதாக வடிவுக்கரசி தெரிவித்துள்ளார். முதல்மரியாதையில் சிவாஜிக்கு டஃப் கொடுத்த வடிவுக்கரசி 80-களில் அறிமுகமான வடிவுக்கரசி மிகத் திறமை வாய்ந்தவர். கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் … Read more

பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு மீண்டும் WFH.. மழை வெள்ளத்தில் மூழ்கிய அலுவலகங்கள்..!

பெங்களூர்: இந்தியாவில் ஐடி துறைக்குத் தலைநகராக விளங்கும் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வீடுகள் மட்டும் அல்லாமல் பெரிய பெரிய டெக் பார்க், பயோ டெக் பார்க் நிறுவனங்களிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் திங்கட்கிழமை பெரும்பாலான ஊழியர்களை மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட நிலையில், இன்று அனைத்து பெங்களூர் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்துள்ளது. சென்னை தான் மழை வெள்ளத்தில் … Read more

தோழர் விஜயன், சகோதரன் ராகுல், விருந்தாளி கெஜ்ரிவால்: மு.க. ஸ்டாலினின் அன்பு சாம்ராஜ்யம்!

தி.மு கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது சகாக்கள் மற்றும் பிற தலைவர்களுடன் பகிரங்க நட்பு பாராட்டுகிறார்.அண்மையில் இவர் கேரளா சென்றிருந்தபோது, கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை என் அன்பான தோழர் என அழைத்தார். ராகுல் காந்தியை என் சகோதரன் என கூப்பிடுகிறார். தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவிகள் தொடங்கிவைக்க வைத்த அரவிந்த் கெஜ்ரிவாலை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார். அந்த வகையில் மு.க. ஸ்டாலின் மற்ற தலைவர்களுடன் தனித்து காணப்படுகிறார்.2021 பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் … Read more

முடிவெட்ட சென்ற இடத்தில், வேலையை காட்டிய  வட மாநில நபர்.. சற்று நேரத்தில் நிகழ்ந்த விபரீதம்.! 

காட்பாடி வணிக வளாகத்திற்கு அருகில் கடந்த ஆகஸ்ட் 22 -ல் ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த 34 வயதான அபணிசரண்யா என்பது தெரியவந்துள்ளது.  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து போலீசாரின் விசாரணையில் அவரை கொன்றது கீழ் பெண்பாக்கம் பகுதியில் சலூன் கடைக்காரரான … Read more