காதலியை கரம்பிடித்தார் 'குக் வித் கோமாளி' புகழ்!

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஸ்டண்ட் அப் காமெடியன் புகழ், இன்று தன்னுடைய காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல ஷோக்களிலும் நடித்து இவர் பிரபலமடைந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிடைத்த வரவேற்பின் மூலமாக ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் … Read more

பி.டி.ஆர். – அண்ணாமலை ட்விட்டரில் சொற்போர்: தமிழ்நாட்டின் சாபக்கேடு VS செருப்புக்குக்கூட சமமில்லை

India bbc-BBC Tamil தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் ட்விட்டரில் தொடர்ந்து மோதி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நிதியமைச்சர் தனது செருப்புக்குக்கூட சமமானவரில்லை என அண்ணாமலை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான சொற்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று மாலை ஐந்தேகால் மணியளவில் ஆங்கிலத்தில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். பிடிஆர் தியாகராஜன் … Read more

இந்த ஆண்டின் பெஸ்ட் முதல் நாள் வசூல் படங்களின் பட்டியல்.. ரஜினி, கமல், அஜித், விஜய் யார் படம் டாப்?

சென்னை : கடந்த ஆண்டில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அதிகமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்த ஆண்டு தமிழ் படங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அதிகமான படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சிறப்பான எதிர்பார்ப்பை கொடுத்த படங்கள் சொதப்பியதும், எதிர்பார்க்காத படங்கள் சூப்பர் ஹிட்டானதும் இந்த ஆண்டில் நடைபெற்றது. சிறப்பான படங்கள் கோலிவுட்டில் சிறப்பான படங்கள் வாரந்தோறும் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளிலும் ஓடிடியிலும் மாறி மாறி படங்கள் ரிலீசாகி ரசிகர்களை சிறப்பான என்டர்டெயின் செய்து … Read more

இந்தியாவின் பிஎம்ஐ விகிதம் தொடர்ந்து வளர்ச்சி..என்ன காரணம் தெரியுமா?

டெல்லி: இந்தியாவின் உற்பத்தி விகிதம் குறித்தான பி எம் ஐ தரவானது தொடர்ந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்ந்து நாட்டில் தேவையானது மீண்டு வருவதை காட்டுகின்றது. தொடர்ந்து நாட்டின் பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், சந்தையில் உள்ளீட்டு செலவினங்கள் குறைந்து வருகின்றது. இதன் காரணமாக தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து சரிவடையத் தொடங்கியுள்ளது. இந்தியா தொடந்து இதில் கவனம் செலுத்தணும்.. எதிர்காலத்திற்கு இது தான் நல்லது! … Read more

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி: சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF)  கீழ் வழங்குவதற்கு அதிகாரிகள் மட்டத்தில் உடன்படிக்கை எட்டப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று குழு அங்கீகாரம் கிடைத்த பின்னர் 4 வருட காலத்திற்குள் இலங்கைக்கு இந்த நிதியுதவி கிடைக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பீட்டர் ப்ரூயர் மற்றும் … Read more

காலை நேரத்திலேயே கள்ளச்சந்தையில் மதுகுடித்து தள்ளாடிய போலிஸ் எஸ்.ஐ.! அள்ளிக்கொண்டு ஸ்டேஷனுக்கு சென்ற பஞ்சர் கடை ஊழியர்.!

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காலை பணிக்கு வரும்பொழுது, மது போதையில் தள்ளாடி கொண்டு வந்த நிலையில், அவரை பஞ்சர் கடை ஊழியர் ஒருவர் காவல் நிலையத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார். காசிமேடு N4 போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக சற்குணம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரண்டு நாட்களாக பணிக்கு வரவில்லை. இன்று காலை 9 மணி அளவில் பணிக்கு கிளம்பி வரும் பொழுது, வழியில் அவர் கள்ள சந்தையில் வாங்கி … Read more

“தாவுத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் சன்மானம்!" – என்.ஐ.ஏ அறிவிப்பு

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயுதம், போதைப்பொருள் கடத்தல், இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை கடத்திக் கொண்டு வருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். ஆனால் தாவுத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. தாவுத் இப்ராஹிம் மற்றும் அவன் கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு ஏஜென்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவுசெய்தது. தாவூத் இப்ராஹிம் அதனடிப்படையில் அமலாக்கப் … Read more

திமுக மூத்த நிர்வாகி செழியன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை திருவல்லிக்கேணியில், மாரடைப்பால் உயிரிழந்த திமுக மூத்த நிர்வாகி செழியனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையில் வந்து அஞ்சலி செலுத்தினார். வி.எம்.தெருவில் உள்ள இல்லத்தில், செழியனின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். Source link

“டெல்லிக்கு ஒரு நீதி, புதுச்சேரிக்கு ஒரு நீதியா?” – மதுபான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் காங்கிரஸ்

புதுச்சேரி: “புதிய மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட மதுபான ஆலைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு தருவோம்” என்று புதுச்சேரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் இன்று அவர் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு பூர்வாங்க அனுமதி அளித்துள்ளது. பெரிய மதுபான தொழிற்சாலைகள் கொண்டுவர முகாந்தரம் இல்லை. இதனால் புதுச்சேரி இளைஞர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் … Read more

மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலப்பட்டா ரத்து!

சென்னை ஈ.சி.ஆரில் அமைந்துள்ள மாயாஜாலில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 2 ஏக்கர் அளவிலான இடம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பித்து அது நிலுவையில் இருந்தது. அதன்பின்னர், இந்த தகவலை மறைத்து 2 ஏக்கர் இடத்திற்கு பட்டா கேட்டு செங்கல்பட்டு தாசில்தாரருக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி … Read more