சென்னை நெடுஞ்சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்கள்; பரபரப்பாக அள்ளிய மக்கள் – கடைசியில் செம ட்வீஸ்ட்

வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளது. காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றை போட்டி போட்டு எடுத்துள்ளனர்.  இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து, பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் … Read more

2023 டிசம்பருக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை! முகேஷ் அம்பானி உறுதி

டெல்லி: 2023 டிசம்பருக்குள் நாடு முழுவதும 5ஜி சேவை கிடைக்கும் என ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று நடைபெற்ற 6-ஆவது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மொபைல் சேவை மற்றும் இணையதள சேவை வழங்கும் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட ஜியோ நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான … Read more

ஊரப்பாக்கம் அருகே குப்பைமேடு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மான்; வீடியோ வைரலால் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி காப்புக்காட்டில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த மான்கள், சில நேரங்களில் இரை தேடியும் மற்றும் தண்ணீர் குடிப்பதற்காகவும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. ஊரப்பாக்கம் அருகே யமுனை நகர் மற்றும் பெரியார் நகரை இணைக்கும் பிரதான சாலையோரத்தில் உள்ள குப்பைமேட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு மான் உண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், பெருமாட்டுநல்லூர், கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், ஊனமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் … Read more

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டை விட ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டை விட ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம்; இன்று இரவு புறப்படுகின்றார்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் 10 நாள் ஐரோப்பிய நாட்டு சுற்றுப் பயணத்திற்காக இன்று புறப்படுகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் சிவன் குட்டி, ராஜீவ், அப்து ரகுமான் மற்றும் வீணா ஜார்ஜ் ஆகியோர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். இன்று இரவு பினராயி விஜயன், அமைச்சர் சிவன்குட்டி மற்றும் தலைமைச் செயலாளர் ஜோய் ஆகியோர் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு டெல்லி வழியாக பின்லாந்து செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து இருவரும் நார்வே … Read more

ஓசூர்: அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – இருவர் பலி

ஓசூரில் அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓமலூர் அருகேயுள்ள கிழக்கத்திகாடு கிராமத்தைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவரது மகன் பிரவீன் குமார் (24) கடலூர் மாவட்டம் வேம்பூர் தாலுகா மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகன் சுதாகரன் (24) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள நாமத்தோடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ராஜபாண்டி (23) ஆகிய மூவரும் ஓசூர் பகுதியில் அறை … Read more

20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்| Dinamalar

வேலுார்: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை சோதனை செய்யும் போது, நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடினார். லாரியில் இருந்த 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், குடியாத்தத்திலிருந்து, கர்நாடகா மாநிலம், மைசூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. வேலுார்: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை சோதனை செய்யும் போது, … Read more

புதுமுகங்கள் நடிக்கும் டைனோசர்

புதுமுக இயக்குநர் எம்.ஆர் மாதவன் இயக்கும் படம் ‛டைனோசர்'. இந்தப் படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் சீனிவாஸ் சம்பந்தம் தயாரிக்கிறார். படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.மாதவன் கூறியதாவது : இது ஒரு கேங்ஸ்டர் கதை. இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள் தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 'டைனோசர்ஸ்' என்று ஏன் வைத்திருக்கிறோம் என்பது படம் பார்க்கும் போது புரியும். படத்தின் கதைக்களமும் … Read more