திருச்செந்தூரில் இஸ்ரோவின் சிறியரக செயற்கைகோள் ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்த அவகாசம் நீட்டிப்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இஸ்ரோவின் சிறியரக செயற்கைகோள் ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலத்தின் வழிகாட்டி மதிப்பு வெவ்வேறாக இருப்பதால் இழப்பீட்டு தொகை வழங்குவதில் சிக்கல் உள்ளது.