மதுரை எய்ம்ஸ் என்னாச்சு… பட்ஜெட்டில் ’ஜீரோ’ தான்- கொதிக்கும் தமிழ்நாடு எம்.பி.,க்கள்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை தென் தமிழ்நாடு மட்டுமின்றி கேரள மாநிலமும் பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. இதற்கான இடம் மதுரை தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை. ஏனெனில் நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவ்வப்போது நினைவூட்டி வந்துள்ளார். மதுரையின் சாட்சி அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் மதுரையின் கலைஞர் நினைவு நூலகம். … Read more

குடியரசு தலைவரின் முதல் உரை; எதிர்கட்சிகள் சாடல்.!

ஒன்றிய அரசின் 2023 – 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இந்த நிதிநிலை அறிவிப்பில், பாதுகாப்புத்துறைக்கு கடந்த ஆண்டைவிட 13% அதிகமாக 5.93 லட்சம் கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் குடியரசு தலைவரின் உரையானது பாஜகவின் அறிக்கையாக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரின் … Read more

மியான்மரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்; ராணுவ அரசு அறிவிப்பு.!

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2021 பிப்ரவரி 1ம் தேதி நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து மியான்மர் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், சர்வதேச தனிமைப்படுத்தல் மற்றும் மேற்கத்திய தலைமையிலான தடைகளை எதிர்கொண்டது. மியான்மரில் ராணுவம் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து மியான்மர் குழப்பத்தில் உள்ளது. ஆங் சாங் சூகி மற்றும் மற்ற அதிகாரிகளையும் காவலில் ராணுவம் … Read more

Thalapathy 67: தளபதி 67 பூஜை வீடியோ..செம ஸ்டைலாக இருக்கும் தளபதி..வீடியோவில் இதை கவனித்தீர்களா?

உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் லோகேஷின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு பிறகு தென்னிந்தியாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் தெரிவித்தனர். இந்நிலையில் லோகேஷ் அடுத்ததாக தளபதி விஜய்யுடன் மீண்டும் இணையப்போவதாக அறிவித்தார். பொதுவாக விஜய்யின் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பது இயல்பான ஒன்றுதான, ஆனால் இம்முறை விஜய் லோகேஷுடன் இணைவதால் அந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. கடந்தமுறை இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில … Read more

இந்தியாவில் முக்கிய சந்திப்புக்களில் மிலிந்த மொரகொட (Photos)

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சிலே நேற்று (31.01.2023) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர், ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை பயணத்தின் பின்தொடர்தல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்த சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை … Read more

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் கவுதம் அதானி..!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்திற்கு இறங்கிய கவுதம் அதானி ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் அந்தஸ்தையும்  இழந்துள்ளார். சில நாட்கள் முன்பு வரை உலக பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, படிப்படியாக குறைந்து உலக பணக்காரர்கள் வரிசையில் 11-வது இடத்தில் இருந்தநிலையில், அதானியின் சொத்து மதிப்பு இன்று மேலும் குறைந்து 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். உலக பணக்காரர்கள் வரிசையில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ள முகேஷ் … Read more

மத்திய பட்ஜெட் குறித்து என்ன சொல்கிறார்கள்.? நிபுணர்கள் கருத்து இது தான்..

2023ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் குறித்து பல்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை விரிவாக பார்க்கலாம் மத்திய அரசின் பட்ஜெட் வேளாண்துறைக்கு சிறப்புமிக்க பட்ஜெட்டாக உள்ளது என்றும், கிராமப்புறங்களில் ஸ்டார்ட்அப் மூலமாக மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த முடியும் என்றும் வேளாண்துறை சார் நிதி நிபுணர் எஸ்எம் ஷங்கர் கூறியுள்ளார். பொது போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் தொழிற்துறை சார்ந்த போக்குவரத்தையும் மேம்படுத்தமுடியும் என்று இந்திய தொழிற் கூட்டமைப்பை சேர்ந்த தீபக் கூறியுள்ளார். வருமான வரி உச்சவரம்பை … Read more

குடும்பமே தீயில் கருகி பலியான அதே நேரத்தில் தாலி கட்டி திருமணம் செய்த மணப்பெண்!

அம்மா, தாத்தா, பாட்டி, சகோதரன் உட்பட குடும்பமே தீயில் கருகி பலியான அதே நேரத்தில், நடந்தது எதுவும் தெரியாமல் மணப்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஆஷிர்வாத் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சோக … Read more

ஈரோட்டில் அண்ணன், தம்பி கொலையில் தாய்மாமன் உள்பட 2 பேர் கைது

ஈரோடு: ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி மற்றும் அவரது சகோதரர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்களது தாய்மாமன் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடுமுனிசிபல் காலனியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளர் கார்த்திக் மற்றும் அவருடைய சகோதரர் கெளதம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலையில் வழக்கு பதிவு … Read more

புதிய வருமான வரி நடைமுறையை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

டெல்லி: புதிய வருமான வரி நடைமுறையை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனிநபர் வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.