பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு..!

மத்திய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதிக்கான ஜல் ஜீவன் திட்டத்திற்கு கடந்த முறை 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு கடந்த நிதியான்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 2023 – 24ஆம் ஆண்டிற்கு 79 ஆயிரத்து … Read more

டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்தா?

டார்க் சாக்லேட்ஸை ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதுகிறோம். அதனால் தான் இவற்றை தயக்கமின்றி பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். உண்மையில் டார்க் சாக்லேட்டுகள் ஆரோக்கியமானதா? இல்லையா என்ற சந்தேகம் பலரிடையே காணப்படும். டார்க் சாக்லேட் உண்மையில் அதிகமாக எடுத்து கொள்வது தீங்கு விளைவிக்க கூடியவை . தற்போது அவை குறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம். ஏன் சாப்பிட கூடாது?  சில டார்க் சாக்லேட்ஸ்களில் ஈயம் மற்றும் காட்மியம் ஆகிய இரண்டு ஹெவி மெட்டல்ஸ் இருக்கின்றன. இவை இரண்டுமே பல … Read more

பிப்ரவரி 3ந்தேதி அண்ணா நினைவுநாள்: அமைதி பேரணியில் கலந்துகொள்ள திமுகவினருக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னை: பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணியில்  திமுகவினர் திரளாக பங்கேற்க  வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தாய்நிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய தனயன்! தமிழ்வானின் நிரந்தர சூரியன் பேரறிஞர் அண்ணா நினைவுநாளான பிப்ரவரி-3 அன்று நடைபெறும் அமைதிப்பேரணி எத்திசையும் பேரறிஞரின் பேரொளி பரவி இந்தியாவின் இருள் அகலுவதற்கான தொடக்கமாக அமையட்டும்! எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவும் வகையில், பிப்ரவரி 3-ம் … Read more

திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!

திருப்பூர்: திருப்பூர் – பெருமாநல்லூர் அடுத்துள்ள பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளைத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சம்பத் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக  அதனது இரு சக்கர வாகனத்தில் பரமசிவம்பாளையம் வழியாக வந்த போது எதிர்பாராவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த வட இந்தியர் மீது மோதியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அங்கிருந்த வட இந்தியர்கள் ஒன்று திரண்டு சம்பத்தை சிறை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவித்துள்ளதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பழனிசாமி தரப்பில் காலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், பன்னீர் தரப்பும் வேட்பாளரை அறிவித்துள்ளது. பழனிசாமி, பன்னீர் வேட்பாளர்களில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

66 ஆண்டாக ஓய்வூதியம் பெற்ற 100 வயது முன்னாள் ராணுவ வீரர் மரணம்: ராஜஸ்தானில் சோகம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 66 ஆண்டாக ஓய்வூதியம் பெற்ற 100 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர் உடல்நலக் குறைவால் காலமானார். ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு என்ற போட்கி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்  பாய்ட்ராம் துடி (100). இவருக்கு சந்தா தேவி சாய்னா (92) என்ற மனைவியும், தரம்வீர் மற்றும்  முகந்தரம் என்ற இரண்டு மகன்களும், தரம்வீர், சத்யபிரகாஷ், முகேஷ், சுர்ஜித்  ஆகிய நான்கு பேரன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று உடல்நலக் குறைவால் பாய்ட்ராம் துடி காலமானார். … Read more

”மீண்டும் க்ளாஷ் விட இந்த கதை செட் ஆகாது”-விக்னேஷ் சிவனின் கதையை கிடப்பில் போட்டாரா அஜித்?

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் தளபதி 67 மற்றும் ஏகே 62 குறித்த பதிவுகளாகவே இருக்கின்றன. விஜய்யின் தளபதி 67 குறித்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் அஜித்தின் 62வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  லோகேஷ் கனகராஜின் தளபதி 67-ல் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜூன் உட்பட திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த படத்தின் மீதான ரசிகர்களின் … Read more

தஞ்சாவூரில் புதுவீடு கட்டும் நீலிமா இசை!

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான நீலிமா இசை திருமணத்திற்கு பின் பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக மாறிவிட்டார். தவிரவும் சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். தற்போது தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு கிராமத்தில் சொந்தவீட்டை கட்ட ஆரம்பித்துள்ள நீலிமா, பூமி பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து நீலிமாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மனைவியின் பாய்பெஸ்ட்டியை.. கூலிப்படை வைத்து கொன்ற கணவன்.. சென்னையில் நடுரோட்டில் பயங்கரம்.! 

சென்னை அருகே புழல் பகுதியில் குமரன் தெருவில் சுதா சந்தர் என்ற 22 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மரித்து சரமாரியாக வெட்டி அதே இடத்தில் கொலை செய்தனர். இது குறித்து, கொளத்தூர் காவல்துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை … Read more

தொடர்ந்து இந்தி பாடல்கள் பாடிய பிரபல பாடகர் மீது பாட்டில் வீச்சு!!

இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஒருவர் தொடர்ந்து இந்தி பாடல்களை பாடியதால் அவர் மீது ரசிகர்கள் பாட்டில் வீசிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரப் பேரரசின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கர்நாடக மாநிலம் ஹம்பியில், அம்மாநில அரசு சார்பில் 3 நாட்கள் ‘ஹம்பி உத்சவம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை பிரபல பாடகர் கைலாஷ் கெர் பங்கேற்றார். அவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர். நிகழ்ச்சியில் கைலாஷ் கெர் இந்திப் பாடல்களை மட்டுமே … Read more