பெற்ற மகனை அடித்தே கொன்ற பெற்றோர்.. பொத்தி வச்ச ரகசியம் மயானத்தில் உடைந்தது!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி அருகே உள்ள உவரி கிராமத்தை சேர்ந்தவர் சப்பானி (எ) தவிடன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கு திருமணமான நிலையில் அனைவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். மேலும் மூத்த மகன் சங்கனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் சரவணன் மட்டும் பெற்றோருடன் வசித்து வருகிறார். சரவணன் … Read more

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கலாசாரம் கற்பிக்கப்படும்… ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிரடி அறிவிப்பு

ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ், `கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற பெயரில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கலாசாரம் மற்றும் பழைமைவாதத்தைக் கற்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் தேசிய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணக்கப்பட்ட நிகழ்வில் இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஆர்.எஸ்.எஸ் இந்தப் பிரசாரத்தில், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர். இவர்கள், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சியுடன், கருவில் இருக்கும் குழந்தைக்கு கீதை, ராமாயணம் … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: 2-வது முறையாக திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை, தமிழக அரசிடம் சில விளக்கங்கள் கேட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த அவசர சட்டத்தை … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்; அரசுக்கு பெருத்த அடி.!

இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை கேகே நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்சத்தை இழந்ததால், மன உளைச்சலில் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலை கடிதத்தில் ‘தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்க’ என கூறி மனைவி … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார் தமிழ்நாடு ஆளுநர் ரவி

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்காமல் இருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தற்போது அதை மாநில அரசிடமே திருப்பி அனுப்பிவிட்டார். இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என் ரவி, மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி திருப்பி அனுப்பிவிட்டார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இதுவரை 40 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை … Read more

துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் இழப்பு 100 பில்லியன் டாலர் என மதிப்பு

துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்பு 100 பில்லியன் டாலர் இருக்கும் என ஐநா சபை கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம் பேசிய ஐநா வளர்ச்சித் திட்ட அதிகாரி லூயிஸா வின்டென், துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தொடர்பாக மதிப்பீடு நடந்து கொண்டிப்பதாகத் தெரிவித்தார். வரும் 16ம் தேதி பிரஸ்ஸல்ஸ் நகரில் நடக்கும் நிதி … Read more

புலம்பெயர்வோருக்கு எதிரான பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டம் சர்வதேச விதி மீறல்: ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை

பிரித்தானிய பிரதமரின் புகலிடக்கோரிக்கை திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்று கவலை தெரிவித்துள்ளது. இந்த திட்டம் சர்வதேச விதியை மீறுவதுடன், அது ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதை தடுக்க தேவையற்றது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது. சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கெதிராக கடுமையான சட்டம் நேற்று பிரித்தானியா அரசு, பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிரான புதிய சட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டது. @getty அப்படி பிரித்தானியாவுக்குள் நுழைவோர் வெளியேற்றப்படுவதுடன், மீண்டும் அவர்கள் எந்தக் காலத்திலும் … Read more

Viduthalai: விடுதலை படத்தின் ட்ரெய்லர் இதோ…

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள `விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் இந்த மாதம் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது. ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, சூரி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ஆடுகளம் நரேன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் போஸ்டர்களும், புகைப்படங்களும், தனுஷ் பாடிய பாடலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இந்நிலையில் … Read more

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பு! ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்…

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் சுமார் 247 குழந்தைகள் இறந்துள்ளதாக ஆர்டிஐ மூலம்  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் கடந்த 2017ம் அண்டு அரசு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. அத்துடன் பய ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையும் இணைக்கப்பட்டது. இங்குள்ள ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கான அனைத்து பரிசோதனை வசதி களும் உள்ளன. அதனால் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டாரங்களிலும் இருந்து பிரசவத்துக்காக … Read more

திருப்பரங்குன்றம் அருகே பரபரப்பு; கண்மாயில் மனித மண்டை ஓடு மீட்பு: கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே, நிலையூர் கண்மாயில் கிடந்த எலும்புகளுடன் மண்டை ஓட்டை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் கிழக்கு பகுதியில் தண்ணீரை ஒட்டிய கரையில் மனித மண்டை ஓடு கிடந்துள்ளது. மேலும், அருகில் பாதி எலும்புகளும், தண்ணீரில் பாதி எலும்புகளும் கிடந்துள்ளன. இன்று காலை அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் எலும்புகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மண்டை ஓடு, விலா எலும்புகள், … Read more