புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைப்பு

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் இம்மாத இறுதியில் வெப்ப அலை தாக்கம்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

டெல்லி: டெல்லியில் இம்மாத இறுதியில் வெப்ப அலை தாக்கம் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் 'யோசி'

ஜே.ஏ பிரைம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'யோசி'. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என 4 இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த … Read more

புதிய "டாஸ்மாக் கடை" திறக்க தடை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!!

சென்னை பெரியமேட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைச் செயலக ஊழியர் மனோகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் “பெரியமேட்டில் உள்ள நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள எனது வீட்டில் வசித்து வருகிறேன். இந்தப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தினக்கூலிகளாக வசித்து வருகின்னறனர். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்களால் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து அந்தக் கடை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. … Read more

`போதையில் தாக்கினோம்; அவர் இறந்ததுகூட தெரியாது!' – முதியவர் கொலை வழக்கில் கைதான இளைஞர்கள் 'பகீர்'

த்ஸ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் ஒருவரை, இளைஞர்கள் இரண்டு பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). இவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்திவந்த மாரிமுத்துவுக்கு, நிரந்தர இடம் இல்லை எனத் தெரிகிறது. தினசரி கடை வாசல்களிலும், பொது இடங்களிலும் … Read more

நாய்க்கு இருக்குற அக்கறை கூடவா.. மனிதர்களிடம் இல்லை..? பட்டப்பகலில் கத்திக்குத்து

பழனியில் திரையரங்கின் பின்புறம் கொட்டகை அமைக்க முயன்றவர்களை தடுத்த நகை கடை அதிபரை, திரையரங்க ஊழியர் ஒருவர் விரட்டி விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. மனிதர்கள் மனிதம் மறந்து சிலை போல்  நிற்க, கத்தியால் குத்தும் நபரை நாய் ஒன்று விரட்டிச்சென்ற சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.. பழனி அண்ணா நகரை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் சதீஷ் ஆனந்த். இவருக்கு சொந்தமான இடம் ஒன்று, வள்ளுவர் திரையரங்கிற்கு பின்புறம் உள்ளது. ஓராண்டுக்கு முன்பாக … Read more

புதுச்சேரி: கவுரவ அட்டைக்காக ரேஷன் அட்டைகளை ஒப்படைத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் – அதிகாரிகளிடம் காட்டிய கோபம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கவுரவ அட்டைக்காக தங்களின் ரேஷன் அட்டைகளை பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஒப்படைத்தனர். அப்போது மக்கள் ரேஷன் கார்டுக்காக அணுகும்போது அலைக்கழிப்பதாக அதிகாரியிடம் கோபப்பட்டு கடுமையாக பாஜக அமைச்சரும், எம்எல்ஏவும் விமர்சித்தனர். புதுச்சேரி மாநில பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், எம்பி செல்வகணபதி, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ராமலிங்கம், அசோக்பாபு, சிவசங்கர், வெங்கடேசன் ஆகியோர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலத்துக்கு வந்தனர். தங்களின் மஞ்சள் ரேஷன்கார்டுகளை ஒப்படைத்து, … Read more

பாஜக டூ அதிமுக: மீண்டும் எடப்பாடியை தேடி வரும் பாஜக நிர்வாகிகள்!

பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜக ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், ஐடி விங் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொந்த கட்சியினரையே வார் ரூம் அமைத்து வேவு பார்க்கிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர். கட்சிக்கு வந்து மிக குறுகிய காலத்தில் தலைவர் பதவிக்கு வந்த அண்ணாமலை தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார், கட்சிக்கு உழைத்த … Read more

Vijay: வாரிசு விழாவில் விஜய் நடந்து கொண்ட விதம்..வெளிப்படையாக பேசிய ஷோபா சந்திரசேகர்..!

கடந்த சில வருடங்களில் விஜய் எது செய்தாலும் அது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. விஜய் காரில் வந்தாலோ, சைக்கிளில் வந்தாலோ அதுகூட சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் அவரின் படங்கள் வெளியாகும் போது அவர் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி நாம் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவரின் தாய் தந்தையிடம் நடந்துகொண்ட விதம் சரியில்லை என சிலர் கருத்துக்களை கூறி வந்தனர். விஜய் வாரிசு … Read more