சென்னையில் பரபரப்பு சம்பவம் | மூன்று நாள் கழித்து ஏரியில் செத்து பிணமாக மிதந்த நாடக காதலன்! 

சென்னை : திருமண ஆசைக்காட்டி, காதல் வலையில் சிக்கவைத்து, ரூ.68 லட்சத்தை ஏமாற்றிய “நாடக காதலன்” ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், மூன்று நாள் கைலத்து அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை : மதுரவாயல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது பள்ளி பருவம் முதலே நிஷாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய நிஷாந்த், இளம்பெண்ணுடன் அத்துமீறியதாக சொல்லப்படுகிறது. மேலும், திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த இளம் பெண்ணிடம் ரூ.68 … Read more

`உரிமை இருந்தும் முட்டை விலையை நிர்ணயிப்பதில் வியாபாரிகள் கையே மேலோங்கியுள்ளது' பண்ணையாளர்கள் வேதனை!

மேலும், இந்த கூட்டத்துக்குப் பின் பேசிய முட்டைக்கோழி பண்ணையாளர்கள், “என் முட்டை, என் விலை என்ற நோக்கத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலம், பண்ணையாளர்கள் கூட்டத்தில், முட்டைக்கான விலையை நிர்ணயிக்க வழி வகை செய்யப்பட்டது. ஆனால், தற்போது என்.இ.சி.சி அறிவிக்கும் விலையில் இருந்து எவ்வளவு குறைத்து வாங்க வேண்டும் என்று முட்டை வியாபாரிகள் முடிவு செய்கின்றனர். எனவே, முட்டை விலையை நிர்ணயிப்பது வியபாரிகள்தான். இதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் … Read more

ஓராண்டை நிறைவு செய்த சென்னை கவுன்சிலர்கள்: ரூ.70 கோடி வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.34 கோடி மட்டுமே செலவு

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.70 கோடியில் இதுவரை ரூ.34.76 கோடியை மட்டுமே வார்டு மேம்பாட்டுக்கு செலவு செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால், 2016 முதல் 2022 பிப்., வரை கவுன்சிலர்கள் இல்லாத நிலை இருந்தது. அப்போது சென்னை மாநகராட்சியில் ஆணையர் முதல் உதவி பொறியாளர்கள் வரை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று மார்ச் மாதம் முதல் … Read more

வணிக வரித்துறையினருக்கு பதவி உயர்வு: அன்பு மணி ராமதாஸ் கோரிக்கை!

வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆகியவற்றில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், வணிகவரித் துறையினருக்கு மட்டும் தாமதிக்கப்படுவது சமூக அநீதி என்று தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அன்புமணி கோரிக்கை! இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வணிகவரித் துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று … Read more

வயாகராவால் வந்த வினை… தோழியுடன் உல்லாசத்தில் இருந்தவர் மரணம்- திடுக் தகவல்

சமீபத்தில், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் 41 வயதான ஆண் ஒருவர், மது அருந்திவிட்டு இரண்டு வயாகரா மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு குறித்து மருத்துவ பத்திரிகை ஆய்வு மேற்கொண்டு அதை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில் அவரது உயிரிழந்ததற்கான காரணம் குறித்து முழு தகவல் வெளியாகியுள்ளது.  வயாகரா என்ற பிராண்டின் கீழ் விற்கப்படும் சில்டெனாஃபில் என்ற இரண்டு, 50 மில்லி கிராம் மாத்திரைகளை எடுத்துக் கொண்டபோது, அந்த நபர் ஒரு பெண்ணுடன் இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. … Read more

தென்கொரியாவில், ஆயிரம் நாய்களை பட்டினி போட்டு கொலை செய்த கொடூரன்..!

தென்கொரியாவில் நாய் பண்ணை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை பட்டினி போட்டு கொலை செய்த கொடூரனிடம், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஜோங்ஜி மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வளர்ப்பு நாய் மாயமானதாக போலீசாரிடம் புகாரளித்தார். நாயைத் தேடி போலீசார் அலைந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபரின் வீட்டில் குவியல் குவியலாக நாய்களின் சடலங்கள் இருப்பதை கண்டு, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரித்தபோது, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களை எடுத்துவந்து உணவளிக்காமல் … Read more

இளவரசர் ஹரி -மேகன் குழந்தைக்கு திருமுழுக்கு: சார்லஸ் மன்னருக்கு அழைப்பு

இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தை லிலிபெட்டுக்கு தனிப்பட்ட முறையில் திருமுழுக்கு அளிக்கப்பட்டதாகவும், இந்த விழாவானது அமெரிக்காவில் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சார்லஸ் மன்னர் கடந்த வாரம் நடந்த இந்த விழாவில் இளவரசர் வில்லியம் குடும்பம் மற்றும் சார்லஸ் மன்னர் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. @getty மார்ச் 3ம் திகதி நடந்த இந்த திருமுழுக்கு விழாவில் சுமார் 25 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் இளவரசர் வில்லியம் குடும்பம், மன்னர் சார்லஸ் குடும்பம் என எவரும் … Read more

அதிமுக ஆட்சியின்போது விஜயகாந்த்மீது போடப்பட்ட அவதூறு வழக்கு வாபஸ்!

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கியது. 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் கட்சியினர்மீது தொடரப்பட் அனைத்து அவதூறு வழக்குகளும் கைவிடப்படுவதாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 2012 முதல் 2021 பிப்ரவரி வரை பதிவான அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 … Read more

சட்டவிரோத மின்வேலியால் வனவிலங்குகளை பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை

தருமபுரி: தருமபுரியில் உள்ள காப்புக்காடுகளில் நுழைவது, வன விலங்கை துன்புறுத்துவது சட்டப்படி குற்றம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். சட்டவிரோத மின்வேலியால் வனவிலங்குகளை பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய நிலங்களில் வனத்துறை, வருவாய்துறை, மின்சாரத்துறை இணைந்து ரோந்து செல்ல அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே குற்றவழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை அருகே துரைப்பாக்கத்தில் குற்றவழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதிகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி துரைப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.