Lokesh Kanagaraj: இதுவரை ஒரு ஃப்ளாப் கூட கொடுக்காத லோகேஷ் கனகராஜ்: லியோ ஏற்கனவே ரூ. 400 கோடி வசூல்

Leo, Lokesh Kanagaraj: இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. ​லோகேஷ் கனகராஜ்​வங்கி ஊழியரான லோகேஷ் கனகராஜுக்கு சினிமா மீது தீராக்காதல். இதையடுத்தே வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் லோகி. படம் பார்த்த அனைவரும் யார் இந்த இயக்குநர் என வியந்து பேசினார்கள். இதையடுத்தே கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ​கைதி​கைதி … Read more

'எடப்பாடியே வெளியேறு' ஓபிஎஸ் தரப்பினர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு!

கமுதி மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போஸ்டர்கள் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மாவட்டங்களில் அதிக அளவு ஓபிஎஸ்சுக்கு ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில்,  கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிவகங்கை வந்து சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வால்போஸ்டர்களும் அவரை ஆதரித்து வரவேற்று வைத்திருந்த விளம்பர பதாகைகளும் இரு  தரப்பினரால் கிழித்தெறியப்பட்டது. இந்த சம்பவத்திற்காக ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டு முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினர்கள் … Read more

ஆஸ்திரேலியாவிற்கு அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய 3 நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்த அமெரிக்கா

இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில், சீனா ஆதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக, ஆஸ்திரேலியாவிற்கு  அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய மூன்று நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.  கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில், அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோர் முன்னிலையில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை, பிரிட்டனும், ஆஸ்திரேலியாவும் இணைந்து தயாரிக்க உள்ளன. Source … Read more

டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஒய்.எஸ்.சர்மிளா கைது..!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான சர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகர ராவிற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் சர்மிளா, தெலுங்கானா அரசு செயல்படுத்தியுள்ள காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய ஊழலாக இது இருக்கும் என்பதால் அதனை வெளிப்படுத்தவே டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் சர்மிளா தெரிவித்துள்ளார். Source link

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

 சமீபத்திய ஆய்வு ஒன்றில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆய்வில் தெரியவந்த உண்மை  பெரும்பாலான கனேடியர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்பது தெரியாத விடயமாகவே உள்ளது. இந்நிலையில், ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் மக்களிடம் கனடா பிரதமரின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் தெரியுமா என கேள்வி எழுப்பியது.  மக்கள் கணிப்பு 1,000 கனேடியர்களிடம் கனடா பிரதமரின் ஆண்டு வருமானம் … Read more

முதுமலை முகாமில் குறும்பு செய்யும் யானைகள் – வீடியோ

நீலகிரி: முதுமலை யானை முகாமில், தாய் யானைகளால் தவிக்க விடப்படும் யானை குட்டிகள் மற்றும் வயதான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பும், 3 ஆண்டுகளுக்கு முன்பும், முதுமலை முகாமுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் தற்போது துள்ளி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தமிழ்நாடு  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளரான சுப்ரியா சாஹூ பதிவிட்டுள்ளார். 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் … Read more

குன்னூரில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படுமா?

*இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு குன்னூர் : குன்னூரில் ஆறு, ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ள தனியார் மீது தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்ரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரண்டு மாடிக்கு மேல் கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசியல் தலையீடு மற்றும் … Read more

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் விடுதியில் தற்கொலை

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் புஷ்பக் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முழக்கம் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முழக்கம் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முழக்கம் காரணமாக 2-வது நாளாக முடங்கியது. அதானி விவகாரம், ஆன்லைன் சூதாட்ட விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் உதயநிதியை வரவேற்க ப்ளக்ஸ், கொடிக்கம்பங்கள்… – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி விதிகளை மீறி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கொடி கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தஞ்சை மாவட்டத்திற்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிகிறார். இதன் காரணமாக தஞ்சை மாநகர மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்கு விரிவான ஏற்பாடுகள் … Read more