இசை நிகழ்ச்சியில் பாடகர் மீது பணமழை!!

நாட்டுப்புற பாடகரின் இசை நிகழ்ச்சியில் அவர் மீது பணமழை பொழிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நேற்று குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமானோர் குவிந்தனர். அப்போது கிர்திதன் காத்வியின் பாடலை கேட்ட மக்கள், பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். ஒருகட்டத்தில் குதூகலமாகி தங்களிடம் இருந்த 10, 20,100 ரூபாய் கரன்சி நோட்டுகளை எடுத்து, மேடையை நோக்கி வீசினர். குஜராத்தில் இசை நிகழ்ச்சிகளில் … Read more

“மன சமநிலையை இழந்துவிட்டார் என நினைக்கிறேன்!" – சுவாதி மாலிவாலைச் சாடிய DCW முன்னாள் தலைவர்

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட குஷ்பு, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், சிறுவயதில் தன்னுடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தார். சுவாதி மாலிவால் அவரைத் தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் சர்வதேசப் பெண்கள் தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதன் தலைவர் சுவாதி மாலிவால், தானும் சிறுவயதில் தன்னுடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் … Read more

காட்டுத் தீயை அணைக்க, மலை மீது ஏறும்போது தவறி விழுந்த வேட்டைத்தடுப்பு காவலர் படுகாயம்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், காட்டுத்தீயை கட்டுப்படுத்த சென்ற வேட்டை தடுப்பு காவலர், மலை மேல் ஏறும் போது தவறி பாறை மீது விழுந்ததில் படுகாயமடைந்தார். ஆசனூர் மலைப்பகுதியைச் சேர்ந்த ஆனந்த், அதே பகுதியில் வேட்டைத்தடுப்பு காவலராக பணியாற்றி வந்தார். அரேப்பாளையம் அருகே, நேற்று  வனப்பகுதியில் காட்டுத் தீ பரவிய நிலையில், அதனை கட்டுப்படுத்த,  ஆனந்த உட்பட வேட்டைத்தடுப்பு காவலர்கள் குழுவாக சென்றனர். அடர் வனப்பகுதியில், மலை மீது ஏறும் போது, ஆனந்த் எதிர்பாராத விதமாக கீழே … Read more

விருதுநகர்: வீட்டை இடிக்காமல் ஜாக்கியால் 12 அடி நகர்த்திய விவசாயி

விருதுநகர்: திருச்சுழி அருகே தனது வீட்டை இடிக்காமல் ஜாக்கிகளை பயன்படுத்தி 12 அடி நகர்த்தியுள்ளார் விவசாயி ஒருவர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பனையூரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (52). விவசாயி. இவரது மனைவி பஞ்சவர்ணம். கடந்த 2001 முதல் 2005-ம் ஆண்டு வரை பிள்ளையார்நத்தம் ஊராட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவர். பனையூரில் பிள்ளையார்நத்தம் – கமுதி சாலையில் கடந்த 2003-ல் 2 மாடியுடன் வீடு கட்டினார். அன்றுமுதல் வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, இரு மின் … Read more

gay மற்றும் lesbian திருமணங்களை ஏற்க முடியாது; ஒன்றிய அரசு பிடிவாதம்.!

ஒரே பாலினத்தவ்ர் திருமணத்தை சட்டப்பூர்வமாக ஏற்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது சமீபத்திய மாதங்களில் குறைந்தது நான்கு ஓரினச்சேர்க்கை தம்பதிகள் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்துடன் சட்டப்பூர்வ மோதலுக்கான களத்தை அமைத்தது. இந்தநிலையில் ஒன்றிய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒரே பாலின திருமணம் என்பது “இந்திய குடும்ப அலகு” என்ற கருத்துடன் ஒத்துப்போகாது, இது “கணவன், … Read more

15 வயது சிறுவனை துஷ்பிரோயகம் செய்த போதைப் பொருள் விற்பனையாளர் கைது!

அமெரிக்காவில் வாகனம் நிறுத்துமிடத்தில் போதையிலிருந்த சிறுவனை துஷ்பிரோயகம் செய்ததற்காகப் போதைப் பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் விற்பனை அமெரிக்காவிலுள்ள டன்கின் டோனட்ஸ் வாகன நிறுத்துமிடத்தில் 15 வயது சிறுவனை துஷ்பிரோயகம் செய்ய முயன்றதாக கூறி போதைப் பொருள் வியாபாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. @flickr டன்கின் டோனட்ஸ் வாகனம் நிறுத்துமிடத்தில் 15 வயது சிறுவனுக்குப் போதைப் பொருள் வழங்க ரோகர் கோக் (40) என்பவர் வந்துள்ளார். அப்போது இருவரும் வாகனத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். துஷ்பிரயோக … Read more

ஆன்லைன் ரம்மி தடை, நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக் கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டான ரம்மிக்கு தடை விதிக்க கோரி, நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அமர்வில் விவாதிக்க திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி உள்ளனர். பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள், காலப்போக்கில் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த விளையாட்டால், தங்களது உழைப்பையும், பணத்தையும் இழப்பதோடு, இறுதியில் தங்களது உயிரையே மாய்த்து … Read more

நெய்வேலியில் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்தது

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து நேற்று பாமக சார்பில் மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் குறைந்த அளவு பேருந்துகள் காவல்துறை உதவியுடன் இயங்கின. கடைகள் ஒருசில இடங்களில் திறந்து இருந்தன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பக்கத்து மாவட்டங்களில் இருந்து காவல் துறையினர் 7 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிவிரைவு படையினர் வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். … Read more

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு!

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயால் 3 குழந்தைகள், தம்பதி தீயில் கருகி பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் நேற்றிரவு குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயால், 3 குழந்தைகள் மற்றும் தம்பதி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த ஹமாவ் கிராமத்தில் சதீஷ் (30), அவரது மனைவி காஜல் (26), அவர்களது மூன்று குழந்தைகள் சன்னி (6), சந்தீப் (5), குடியா (3) ஆகியோர் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றியதால், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 5 பேரும் தீயில் கருகி … Read more