என்ன நடந்து இருந்தாலும் கல்லூரி விடுதி மாணவிகளை ஆடைகளை களைத்து சோதனை செய்வது சரியா..?

தலைநகர் டெல்லியில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் கீழ் அகில்யாபாய் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் மாணவிகள் தங்கி படித்துவருகின்றனர். இந்நிலையில், வார்டன் தனது பேக்கில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணம் காணாமல் போயிருப்பதை அறிந்தார். விடுதியில் தங்கியிருக்கும் குறிப்பிட்ட 2 மாணவிகள்தான் தனது பேக்கில் இருந்து பணத்தை திருடியிருக்க வேண்டும் என்று அவர் சந்தேகப்பட்டார். அதையடுத்து, மற்ற மாணவிகளின் உதவியுடன் அந்த 2 மாணவிகளையும் ஆடைகளை களைந்து அவர் சோதனை … Read more

சிம்லா மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றிய காங்கிரஸ் வெற்றி..!!

சிம்லா மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 34 வார்டுகளுக்கான வாக்கு பதிவு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது என சிம்லா தேர்தல் அதிகாரியான ஆதித்யா நேகி கூறியுள்ளார். கடந்த செவ்வாய் கிழமை நடந்து முடிந்த இந்த தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இது 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை விட 1.2 சதவீதம் அதிகம் ஆகும். இதில், ஆளும் காங்கிரஸ் கட்சியானது … Read more

கேரளாவின் முதல் திருநம்பி பாடி பில்டர், `மிஸ்டர் கேரளம்' பிரவீன்நாத் தற்கொலை! – அதிர்ச்சி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் திருநம்பி பிரவீன்நாத். பாடி பில்டரான பிரவீன்நாத் 2021-ல் நடைபெற்ற திருநம்பிகளுக்கான பாடி பில்டிங் போட்டியில் மிஸ்டர் கேரளம் என்ற பட்டத்தை வென்றார். 2022-ல் மும்பையில் நடைபெற்ற தேசிய பாடி பில்டர் போட்டியில் ஃபைனல் வரை சென்றார். கேரளத்தின் முதல் திருநம்பி பாடி பில்டர் என்ற பெருமைக்குச் சொந்தகாரர் பிரவீன்நாத். திருநம்பி பிரவீன் நாத்தும், மலப்புறம் மாவட்டம் கோட்டைக்கல் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ரிஷானா ஐஷூ-வும் காதலித்து வந்தனர். … Read more

தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு

சென்னை: தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சன் ஷைன் சினிமா நிறுவனம் தயாரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இன்று (மே 5) வெளியாகஉள்ளது. இந்த படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில், சென்னை ராயபுரத்தை சேர்ந்த அரவிந்தாக் ஷன் என்பவர், இப்படத்தை தமிழகத்தில் வெளியிட … Read more

‘தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: நாடு முழுவதும் இன்று திரையிடப்படுகிறது

புதுடெல்லி: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. இந்த திரைப்படம் நாடு முழுவதும் இன்று திரையிடப்படுகிறது. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. அதில், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு … Read more

அறநிலையத்துறையில் விதி மீறல்: மீண்டும் அதே புகாரை சொல்லும் அண்ணாமலை

அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களின் வருமானத்திலிருந்து 12 சதவீதம் நிர்வாக செலவுகளுக்காக ஒதுக்கப்படும் போது அதற்கு மேல் நிதியை எடுத்து வாகனங்கள் வாங்க கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திராவிட கட்சிகளை வீழ்த்துமா பாஜக_ அண்ணாமலை ஃபார்முலா என்ன ? இது தொடர்பாக அவர் நேற்று (மே 4) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், … Read more

Dil Raju: 25 வருடத்தில் இப்படியொரு தோல்வி.. சமந்தாவால் புலம்பும் 'வாரிசு' பட தயாரிப்பாளர்.!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் சமந்தா. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் அண்மையில் ‘சாகுந்தலம்’ படம் வெளியானது. எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இந்தப்படம் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்தப்படத்தின் தோல்வி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் சினிமாவில் பிசியாக இந்த போதே … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நிலை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று இரவு கடும் மழை மற்றும் மின்னலுடன் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவது விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-605 ஆகும், இது நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இரவு 10.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 297 பயணிகளும் 15 … Read more

பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது – கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது எனவும், திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களில் உடனபடாத எதையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் தமிழக காங் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  

இருமல் சிகிச்சைக்கு வந்த நபருக்கு ஸ்கேன் செய்தபோது திகிலடைந்த மருத்துவர்கள்!

பிரேசிலில் நபர் ஒருவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்தபோது, டஜன் கணக்கான நாடாப்புழு லார்வாக்களின் எச்சங்களால் சிக்கியுள்ளார் என்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஸ்கேன் பரிசோதனை பிரேசில் நாட்டில் நபர் ஒருவர் தொடர்ச்சியான இருமல் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் உடலில் டஜன் கணக்கான நாடாப்புழு லார்வாக்களின் எச்சங்களால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிஸ்டிசெர்கோசிஸ் என்று அழைக்கப்படும் இந்த நிலை, பொதுவாக குடலில் வாழும் நாடாப்புழுவின் லார்வாக்கள் தசை … Read more