சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவன்.. 'எதிர்நீச்சல்' மாரிமுத்து திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்.!

எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பிரபலமான மாரிமுத்துவின் திடீர் மறைவை ரசிகர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு சின்ன கேப்பில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த மாரிமுத்துவின் மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக மாரிமுத்துவை சொல்லலாம். இந்த தொடரில் ஆதி குணசேகரனாகவே … Read more

போட்டிகளில் தமிழகம் பதக்கங்கள் வெல்ல வேண்டும் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை அனைத்து இந்தியா மற்றும் சர்வதேச போட்டிகளில் தமிழகம் பதக்கங்களை வெல்ல வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடந்த விளையாட்டுத்துறை உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அந்த கூட்டத்தில் அவர் தமிழகம் சர்வதேச.மற்றும் இந்தியப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ”இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் விளையாட்டுத் துறையில் தவிர்க்க முடியாத மாநிலமாகத் … Read more

இளையராஜா இசையில் ஆர் யூ ஓகே பேபி படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆர் யூ ஓகே பேபி. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இளையராஜா இசையில் உருவான இந்த பாடலை ஸ்வேதா மேனன் உருக்கமாக பாடியுள்ளார். அன்னை தந்தை ஆக்குவது யார், பிள்ளை என்றும் இல்லை என்றால், பெற்றோர் பிறப்பு மண்ணில் அன்று, வெண்ணிலவுக்கு வானில் … Read more

Thalapathy 68: தளபதி 68ல் இணையும் பாலிவுட் ஸ்டார்ஸ்.. லிஸ்டில் அமீர்கான்.. ஷாருக்கான்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான நிலையில், அடுத்ததாக கேங்ஸ்டர் கதைக்களத்தில் லியோ படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது தளபதி 68 படத்தில் இணையவுள்ளார்.

இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஜி-20 உச்சி மாநாடு: உலக தலைவர்கள் வருகை

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லி வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். Live Updates 2023-09-08 19:04:01 8 Sep 2023 11:14 PM GMT அமெரிக்க நிதி மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் யெல்லனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் … Read more

'பி' டிவிசன் கைப்பந்து போட்டி: சென்னையில் 17-ந் தேதி தொடங்குகிறது

சென்னை, சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட ஆண்களுக்கான ‘பி’ டிவிசன் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 15-ந் தேதிக்குள் செயலாளர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியிலோ அல்லது chennaidistrictvolley [email protected] என்ற மின்னஞ்சலிலோ தங்களது … Read more

ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா; ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

மேட்ரிட், ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இந்த நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், இந்தியாவிற்கு வருகை தர இருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் … Read more

பள்ளியில் பாதி.. கூடத்தில் பாதி: நிகழ்ச்சிகளும் நடத்த முடியல.. பாடமும் நடத்த முடியல..

மாடம்பாக்கம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் சமுதாயக் கூடத்தில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் மட்டுமின்றி, சுபகாரியங்கள் நடத்த இடம்இல்லாமல் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். புதிய கட்டிடம் கட்ட ரூ. 60 லட்சம் ஒதுக்கப்பட்டநிலையில், பணியை மாநகராட்சி உடனே தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கத்தில் சுமார் 60 ஆண்டுகளாக மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 250-க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். … Read more

புதுடெல்லி | ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவர்கள் வருகை

புதுடெல்லி: ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் புதுடெல்லி வந்துள்ளனர். ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதை அடுத்து, அந்த அமைப்பு சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவாக ஜி20 உச்சிமாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை … Read more

மக்களே, மழை கொட்டித் தீர்க்க போகுது: எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் (செப்டம்பர் 8, 9) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் என நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் செப்டம்பர் … Read more