தெலங்கானா தேர்தல் | காஜ்வெல் தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் வேட்புமனு தாக்கல்

காஜ்வெல்(தெலங்கானா): தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து அதன் முதல்வராக இருக்கும் கே. சந்திரசேகர ராவ் (கேசிஆர்), வழக்கம்போல் இம்முறையும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்ற காஜ்வெல் தொகுதியில் மூன்றாவது முறையாக கேசிஆர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு போட்டியிட்டபோது அவரை … Read more

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகப் போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்

Upcoming OTT Tamil Movies 2023: இந்த வாரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பல சூப்பர்ஹிட் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.  

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல்! தேர்தல் ஆணையர் கூட்டத்தில் முடிவு…

சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும்,  10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை பொறுத்தே தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் தொடர்பான ஆலோசனை … Read more

பாக்ஸ் என்று நினைத்து.. மனிதனையே தள்ளி விட்டு கொன்ற ஏஐ ரோபோட்.. ஃபர்ஸ்ட் மர்டர் வாத்தியாரே!

சியோல்: தென்கொரியாவில் தொழிற்சாலை ஒன்றில் காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோ ஒன்று, காய்கறி பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்திருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் நடக்கும் கோளாறுகள் Source Link

இந்தியன்-2வை தொடர்ந்து இந்தியன்-3 படத்திலும் நடித்து வரும் கமல்ஹாசன்

கமல்ஹாசன் – ஷங்கர் ஆகிய இருவரும் இந்தியன் படத்தில் முதன்முதலாக இணைந்த நிலையில் தற்போது இந்தியன்-2வில் மீண்டும் இணைந்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு இந்தியன்-2 படத்திற்காக படமாக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருப்பதால், அந்த கதையை வைத்து இன்னொரு பாகத்தையும் உருவாக்குவதற்கு இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது கமலிடத்தில் இந்தியன்- 3 படத்தில் நடிப்பதற்கும் 40 நாட்கள் கூடுதலாக கால்சீட் வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது விஜயவாடா, … Read more

Man crushed to death by robot in South Korea | காய்கறி பெட்டி என நினைத்து தொழிலாளியை இயந்திரத்திற்குள் தள்ளிக்கொன்ற ‛எந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல்: காய்கறி நிரப்பிய பெட்டிக்கும், மனிதருக்கும் வித்தியாசம் தெரியாத ரோபோ ஒன்றால் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தென் கொரியாவில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த நபருக்கு 40 வயதாகிறது. அவர், ரோபோக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அதில் ரோபோ ஒன்றுக்கு, காய்கறிகள் அடங்கிய பெட்டிகளை கன்வேயர் பெல்ட்டில் தள்ளும் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. கண்காணிப்பாளர், அந்த ரோபோவின் சென்சார்களை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கும், காய்கறி பெட்டிக்கும் வித்தியாசம் தெரியாத … Read more

Bigg Boss – பெண்கள் பாதுகாப்பு.. தெளிவுப்படுத்தலனா கேஸ் போடுவேன்.. பிக்பாஸுக்கே ஷாக் கொடுத்த வனிதா

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை யார் பயன்படுத்தியது என்பதையும், பிரதீப் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதையும் தெளிவுப்படுத்தவில்லை என்றால் வழக்கு தொடுப்பேன் என்று வனிதா தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. யாருமே பிரபலம் இல்லையே இந்த சீசன் பரபரப்பாக நகருமா என்று சந்தேகப்பட்டவர்கள் எல்லாம் தற்போது

Lotus Eletre – ₹ 2.55 கோடியில் லோட்டஸ் எலட்ரா எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது

இங்கிலாந்தின் லோட்டஸ் கார் நிறுவனம், தனது எலட்ரா சூப்பர் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் அதிகபட்சமாக 600 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற மாடல் விற்பனைக்கு ரூ.2.55 கோடியில் வெளியாகியுள்ளது. 0-100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 2.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது. EPA ஹைபிரிட் மெட்டரியல் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ள காரில் சிறப்பான ஏக்டிவ் ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக விளங்குகின்றது. Lotus Eletre Eletre (611 hp & 710Nm ), Eletre S (611 hp 710Nm ), மற்றும் … Read more

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் சகல ஊழியர்களுக்கும் அதிக நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை –  சுகாதார அமைச்சர் 

தற்போதைய பொருளாதார நிலைமையில் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் சகல ஊழியர்களுக்கு வழங்க முடியுமான அதிக நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்களின் பற்றாக்குறை தொடர்பாகப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கேட்ட வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்: சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவத்துறையைச் சேர்ந்த … Read more

Sunny leone: பணிப்பெண்ணின் 9 வயது மகள் மாயம்; `துப்பு கொடுத்தால் ரூ.50,000'- சன்னி லியோன் அறிவிப்பு

பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார். சன்னி லியோன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஒருவரின் 9 வயது மகள் பெயர் அனுஷ்கா. இந்தச் சிறுமி, மும்பை பெக்ரம்பாக் பகுதியிலிருந்து காணாமல் போய்விட்டார். அவரை நேற்று மாலையிலிருந்து காணவில்லை. சிறுமியின் குடும்பத்தினர் அவரைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது வீட்டில் வேலை செய்யும் உதவியாளரின் 9 வயது மகள் அனுஷ்கா மோரேயை, … Read more