’மோடி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்’ தாராபுரத்தில் கனிமொழி சொன்ன அந்த பாயிண்ட்!

Kanimozhi: தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி, ஏழைகளை சுரண்டி அதானி, அம்பானிகளை பிரதமர் நரேந்திர மோடி வளர்த்துக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

டிஆர்எஸ் எடுக்கச் சொல்லி ரிஷப் பன்டை மிரட்டிய குல்தீப்! வீடியோ வைரல்

ஐபிஎல் 2024 தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை தழுவியது. 2வது தோல்வியை அந்த அணி சந்தித்திருக்கும் நிலையில், போட்டியின்போது டிஆர்எஸ் எடுக்கச் சொல்லி கேப்டன் ரிஷப் பன்டை குல்தீப் யாதவ் மிரட்டிய வீடியோ வைரலாகியுள்ளது. குல்தீப் வற்புறுத்தி ரிஷப் பன்ட் டிஆர்எஸ் எடுத்த நிலையில், அது விக்கெட்டாகவும் அமைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி … Read more

‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’! பிரதமர் மோடி டிவிட்..

டெல்லி: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது நிலையில்,  ‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’ என்று பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளார். மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உட்பட 600 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர், அதில் அரசியல் வழக்குகளில், நீதித்துறை மீது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது மற்றும் “அற்பத்தனமான தர்க்கம் மற்றும் பழமையான அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் … Read more

ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அயலான் படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்து 75 கோடி வரை வசூல் செய்தது. அதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். சாய்பல்லவி நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வேடத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன். இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் … Read more

ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?

சென்னை: ‘இனிமேல்’ பாடலில் லோகேஷ் கனகராஜ் பர்ஃபார்மன்ஸை பார்த்து அந்த பேச்சுக்களே இன்னும் அடங்காத நிலையில், அடுத்த அதிரடியாக தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையே வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார் லோகி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து அனிருத் இசையமைத்து வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், தமிழ் சினிமாவின்

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது – சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். பாடசாலைக் காலத்திலேயே தொழில்முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது அவர்களை எதிர்காலத்தில் தொழில்முனைவோராக உருவாக்க வழிவகுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர … Read more

Doctor Vikatan: திடீர் வாய்வுப்பிடிப்பு, அஜீரணம்…. உடனடி நிவாரணம் தருமா வீட்டு வைத்தியங்கள்?

Doctor Vikatan: திடீரென ஏற்படும் வாய்வுப்பிடிப்பு, அஜீரணத்துக்கு  ஆண்டாசிட்ஸ்  (antacids) எடுத்துக்கொள்வது தான் தீர்வா? உடனடி நிவாரணத்துக்கு உதவக்கூடிய எளிமையான வீட்டு வைத்தியங்கள் சொல்ல முடியுமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் Doctor Vikatan: மனநல பிரச்னைகளுக்கான மருந்துகள்… ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா? செரிமானத்துக்கான ஆண்டாசிட்ஸ் (antacids ) மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். முந்தைய காலத்தில் எல்லாம், செரிமானப் பிரச்னை ஏற்பட்டால் சிறிதளவு சீரகத்தையோ, சோம்பு, ஓமம் போன்றவற்றையோ  நீரில் … Read more

சென்னை ஆழ்வார்பேட்டையில் பரிதாபம்: கேளிக்கை விடுதி கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் மதுபான கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. நேற்று இரவு இந்த விடுதியில் ஏராளமானோர் மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் … Read more

அமலாக்க துறை சம்மனை புறக்கணித்த மஹுவா மொய்த்ரா

கொல்கத்தா: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா நேற்று புறக்கணித்தார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மக்களவை நெறிமுறை குழுவின் விசாரணைக்கு பிறகு அவர்எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். லஞ்ச வழக்கில் அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல் தொடர்பாக மார்ச் 28-ம் தேதிவிசாரணைக்கு ஆஜராகும்படி தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி மற்றும் மஹுவாவுக்கு அமலாக்கத் துறை … Read more

அண்ணாமலை வேட்புமனுவில் குளறுபடி உண்மையா? அவரே கொடுத்த விளக்கம்

Annamalai: அண்ணாமலை தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி என அதிமுக, திமுக புகார் தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.