பிச்சை எடுக்கும் பெண்ணிடம் ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

திருப்பூர் தேர்தல் பறக்கும் படையினர் கோவிலில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம் ரூ1.5 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் குணசேகர் தலைமையில் நல்லூர் தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்கப் பெண் மது போதையில் இருந்ததோடு இடுப்பில் 3 கட்டுகள் பணம் வைத்திருந்தார். இது குறித்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்தார்.பெண்ணிடம் இருந்த பணத்தை வாங்கி … Read more

சித்தார்த் – அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது…! – இருவரும் அறிவிப்பு

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருபவர் சித்தார்த். ஆரம்பத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பின்னர் ஷங்கர் இயக்கிய ‛பாய்ஸ்' படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடித்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். 'மஹாசமுத்திரம்' என்ற படத்தில் நடித்தபோது நடிகை அதிதி ராவ் உடன் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகின. பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே இருவரும் கலந்து கொண்டனர். நேற்றைய … Read more

போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்

சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். வனிதாவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்து முடிந்திருக்கும் சூழலில் சில நாட்களுக்கு முன்னர் நான்காவது

நாடாளுமன்ற தேர்தல்: 31-ந்தேதி கூடுகிறது காங்கிரஸ் தேர்தல் கமிட்டி

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. அந்தவகையில் 208 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி வருகிற 31-ந்தேதி கூடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும், தேர்தல் … Read more

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்த ரஷியா

நியூயார்க், வட கொரியாவுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை ஐ.நா. நிபுணர்களை கொண்டு மேற்பார்வை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கு ஆதரவாக 13 நாடுகளும் வாக்களித்தன. ஆனால் ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த தீர்மானத்தை ரத்து செய்தது. அதேநேரம் சீனா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தினத்தந்தி Related Tags : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்  வட கொரியா  ரஷியா  UN Security Council  North Korea  Russia 

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய அணுகுமுறை ஜனாதிபதி தலைமையில் அறிமுகம்

• மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கான சட்டமூலங்கள் விரைவில் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு. இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அல்லது சிறுவர்களை சிக்கிக்கொள்ளக்கூடிய இணைய பக்கங்கள், புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட காரணங்களால் சிறுவர்கள் பெருமளவில் சைபர் வலையப்பிற்குள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, … Read more

சண்முகம் பெயரில் 9 பேர்… அதில் ஒருவர் திமுக வட்டச்செயலாளர் – என்ன நடக்கிறது வேலூர் தொகுதியில்?!

வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 50 வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன. மீதமிருந்த 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான தி.மு.க-வின் கதிர் ஆனந்த், பா.ஜ.க-வின் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க-வின் பசுபதி, நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனால், நான்கு முனைப் போட்டியைச் சந்திக்கிறது வேலூர் களம். இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கியுள்ள புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்துவதற்காக ‘பெயர் அஸ்திரத்தை’ கையிலெடுத்திருக்கிறார்கள். இதன் … Read more

39 தொகுதிகளிலும் மனுக்கள் பரிசீலனை முடிந்தது: தமிழகத்தில் 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்பரிசீலிக்கப்பட்டதில், 1,085 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதிமாலை 3 மணியுடன் முடிந்தது. 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக, கரூரில் 73,வடசென்னையில் 67, தென்சென்னையில் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று காலை 11 மணி முதல் அந்தந்த தொகுதி பொது … Read more

அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையை காக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

புதுடெல்லி: அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்று 600 மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கிஆனந்த் உட்பட 600 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடந்த 26-ம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் நீதித் துறை சிறப்பாக செயல்பட்டது. அந்த காலம் நீதித் துறையின் பொற்காலம். இப்போதைய நீதிமன்றங்களின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது … Read more

திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி

காமெடி நடிகர் விவேக் கடந்த 2021ம் ஆண்டு காலமானார். இந்நிலையில் அவரது மகள் தேஜஸ்வினி – பரத் திருமணம் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. நடிகர் விவேக் உயிருடன் இருந்தபோது ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வந்தார். அதேபோல் தனது மகளின் திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக்கன்று, மூலிகை, பூச்செடிகளை பரிசாக வழங்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று தனது திருமணத்தையொட்டி தந்தையின் கனவை நனவாக்கும் வகையில், … Read more