விக்ரமின் வீர தீர சூரன் படத்துக்கு வந்த சிக்கல்.. புதுசு புதுசா கிளம்புதே

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்ததாக அவர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில்

நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை: தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கடிதம்

புதுடெல்லி, டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நாட்டின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் மற்றும் முதல் தலைமை நீதிபதி எச்.ஜே.கனியா ஆகியோரது சிலைகளை நிறுவ வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு பார்கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு பார்கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்து, குறிப்பிட்ட இடங்களில் அந்த சிலைகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சம்பந்தப்பட்ட துறைக்கு தேவையான அறிவுறுத்தல்களை தலைமை நீதிபதி வழங்கிட வேண்டும் என அந்த … Read more

பெண்கள் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

சில்ஹெட், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஆட்டம் சில்ஹெட்டில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யாஸ்திகா பாட்டியா 36 ரன்னும், ஷபாலி வர்மா 31 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 146 ரன் எடுத்தால் வெற்றி என இலக்குடன் … Read more

பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் டார் நியமனம்

இஸ்லமாபாத், பாகிஸ்தானில் பல்வேறு குழப்பத்துக்கு மத்தியில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தானின் 77 ஆண்டு கால வரலாற்றில் ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டின் 24-வது பிரதமர் ஆவார். இந்த நிலையில், பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் டார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பிரதமர் ஷபாஷ் ஷெரிப், துணை பிரதமராக நியமித்துள்ளார். துணை பிரதமர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 73 வயதான இஷாக் டார், பாகிஸ்தான் முஸ்லிம் … Read more

Tamil News Live Today: குடும்பத்தினருடன் ஓய்வு… இன்று கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

இன்று கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்! மக்களவைத் தேர்தல் முடிந்ததும், அரசியல் கட்சி தலைவர்கள் ஹாலிடே மோடில் இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று கொடைக்கானல் செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 வரை கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பின்னர் அது கொடைக்கானல் பயணமாக மாற்றப்பட்டது. மனைவியுடன் முதல்வர் ஸ்டாலின் கடந்த … Read more

பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு – மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக புகார்

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் மீதான வழக்கில் இன்று(ஏப். 29) தீர்ப்பு வழங்கப்படுகிறது. அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித உதவி பேராசிரியர். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது. … Read more

கிழக்கு, தென் மாநிலங்களில் வரும் புதன் வரை வெப்ப அலை: வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

புதுடெல்லி: வெப்ப அலை வீசுவது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. இதனால் தமிழகம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பிஹார், உத்தர பிரதேசம் மற்றும்மகாராஷ்டிராவில் பகல் நேரங்களில் வெப்பநிலை 41 டிகிரி முதல்45 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. ஒடிசாவின் அங்குல்நகரில் 44.7 டிகிரி செல்சியஸ்,தலைநகர் புவனேஸ்வரில்44.6 டிகிரி செல்சி யஸ் வெப்பநிலைபதிவாகியுள்ளது. இந்த கடும்வெப்ப அலை … Read more

அமெரிக்காவில் காரை கவிழ்த்து மனைவி, குழந்தைகளை கொல்ல முயன்றது ஏன்? – இந்திய மருத்துவர் விநோத வாக்குமூலம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், பாசடீனா நகரை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் தர்மேஷ் படேல் (42). அவரது மனைவி நேஹா. அவர்களுக்கு 7 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தர்மேஷ் படேல், தனது மனைவி, இரு குழந்தைகளையும் காரில் சுற்றுலா அழைத்துச் சென்றார். அவரே காரை ஓட்டினார். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மலைப் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென 250 அடி … Read more

2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!

T20 World Cup 2024: இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.  இதற்கான இந்திய அணி எப்போது வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு மே 1 ஆம் தேதி … Read more

மக்கள் கூட்ட அதிகரிப்பால் திருப்பதியில் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.   தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் வாரவிடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பக்தர்கள் பல … Read more