இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை விடுதலை செய்த ஹமாஸ்

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய … Read more

மத்திய அரசு எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. மத்திய அரசு உங்களால் ஆன தடைகளை ஏற்படுத்துங்கள். அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம் என்று ஆவடியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பட்டிருப்பதைக் கண்டித்து சென்னை அருகே ஆவடியில் நேற்று திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். பெரியார் மண்ணில் பெரும் … Read more

கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை: இஸ்ரோ சாதனை

மகேந்திரிகிரி: ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது. விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோ தயாராகி கொண்டிருக்கிறது. இத்திட்டத்துக்கு பயன்படுத்தும் எல்விஎம்3 ராக்கெட்டின் இறுதி கட்டத்தில் சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்படும். இது விண்ணில் காற்று இல்லாத இடத்தில் இயங்கக்கூடிய இன்ஜின். இந்த பரிசோதனை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் மகேந்திரிகிரியில் உள்ள இஸ்ரோ பரிசோதனை மையத்தில் நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. … Read more

மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டு தொன்மையான பாண்டியர் கல்வெட்டு

மதுரை: மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலூர் வட்டம் கருங்காலக்குடி அருகேயுள்ள கம்பூர் கிராமத்தில் உள்ள மலைச்சரிவில் இரண்டு கல்வெட்டுகள் அடுத்தடுத்து செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அறிவுச்செல்வம், கதிரேசன் ஆகியோர் கூறியதாவது: முதல் கல்வெட்டு நாலரை அடி நீளம், 3 அடி உயரம், 15 வரிகள் கொண்டுள்ளது. இதில், “மாறவர்மன் சுந்தர பாண்டியனின் ஏழாம் ஆட்சி ஆண்டில், துவராபதி நாடு (இன்றைய நத்தம் பகுதி) எறிபடைநல்லூர் … Read more

பிரதமர் மீதான நம்பிக்கையை எதிரொலித்தது டெல்லி தேர்தல்: சந்திரபாபு நாயுடு கருத்து

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: டெல்லி மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளனர். தங்களின் சரியான ஆலோசனை திறனால் டெல்லி மக்கள் எடுத்துள்ள இந்த முடிவு நம் நாட்டின் தலைநகரின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும். சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் அரசியல் மாசுபாட்டை டெல்லி மக்கள் நிராகரித்துள்ளனர். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மதுபான மாஃபியா உருவானது. இதே நிலைதான் டெல்லியிலும் ஏற்பட்டது. ஆந்திரா மற்றும் டெல்லியில் வசிக்கும் மக்கள் … Read more

அமெரிக்க விமான விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

ஜுனோவ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உனலக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற ரக விமானம் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டது. பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானி உள்பட 10 பேர் பயணித்தனர். நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் சென்றபோது அங்கு கடும் பனிப்பொழிவு நிலவியது. எனவே விமானத்தை இயக்குவதில் விமானிக்கு சிக்கல் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து விமானி, உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தாவிட்டால் 2026 தேர்தலில் அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்: சிபிஎம்

புதுக்கோட்டை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிதாவது: சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழிர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், … Read more

டெல்லியை பாஜக அரசு மாற்றும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

புதுடெல்லி: டெல்லி தேர்தல் முடிவு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதிலில், “உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் பிரதமர் மோடியின் தலைமையில் மக்களுக்கு சேவையாற்றும் ஓர் அரசை டெல்லி பெற வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம். 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய இது காலத்தின் தேவையாகும். இந்தியாவின் தேசிய தலைநகரில் அதன் மக்களின் நலனுக்காக செயல்படும் ஓர் அரசு இருக்க … Read more

சிம்பிளான காந்தங்களை வைத்து தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்! எப்படி தெரியுமா?

Man Earns 4000 Rupees Daily In Maha Kumbh : மகா கும்பமேளாவில் பணம் சம்பாதிக்க ஒரு நபர் வித்தியாசமான வழியை கண்டுபிடித்திருக்கிறார். இதைப்பார்த்த அனைவரும் திகைத்து போயுள்ளனர்.  

மேலும் 487 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட உள்ளனர்! இந்திய வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்படும் நிலையில், மேலும் 487 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட இருக்கிறார் என இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக டிரப் பதவி ஏற்றது முதல், அந்நாட்டில்  சட்டவிரோத குடியேற்றத்தைக் கண்டறிந்து நாடு கடத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அந்நாட்டில்  சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் முதலில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அவர்கள்  அங்குள்ள தடுப்பு மையங்களில்  தங்க வைக்கப்பட்டு, … Read more