வெயிலுக்கு நடுவே நல்ல செய்தி.. தமிழ்நாட்டின் இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னையில் எப்படி?
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஈரப்பதம் காரணமாக அசெளகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.