கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு 600,000க்கும் மேற்பட்டவர்கள் வருகை
இலங்கை புத்தக வெளியீட்டாளர்களின் சங்கம் 23வது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 6வது நாள் இன்று ஆகும்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கை புத்தக வெளியீட்டாளர்களின் சங்கம் 23வது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 6வது நாள் இன்று ஆகும்.
18 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள வெடிபொருட்களை, அனுமதிப்பத்திரம் இன்றி கெப் வண்டியில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை தொம்பே பனன்வல பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அந்த சந்தேகநபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 25 கிலோ கிராம் எமோனியா நைட்ரேட் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து 5 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொம்பே பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர். மேலதிக விசாரணைகளுக்காக தொம்பே … Read more
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 4 ஆம் திகதியும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஜனவரி 2 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும் பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இவ்விரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டால், பாடசாலை அட்டவணைக்கமைய பாடசாலை நடத்தப்படும் திகதிகளையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை உள்ளிட்ட பரீட்சைகளையும் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும்; என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால், இந்த … Read more
நாட்டில் பல வருட காலம் எத்தனையோ குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பிரச்சினைகளுக்கு நிரந்தர கிட்டவில்லை. .இருப்பினும் தேசியப் பேரவை தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தான் அமைக்கப்பட்டுள்ளது என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற தேசியப் பேரவை தொடர்பான விவாதத்தில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த சபையை எவ்வாறு முன்னேற்றலாம் என்ற கருத்துக்களை முன்வைத்து இப்பேரவையை ஒவ்வொரு பிரச்சினையையும் அணு … Read more
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், லண்டனில் உள்ள பௌத்த விகாரைக்கு நேற்று (20) பிற்பகல் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் பிரதம சங்கநாயக்க கலாநிதி போகொட சீலவிமல தேரர் அவர்களை சந்தித்த ஜனாதிபதி , அவரின் நலம் விசாரித்ததோடு, சுமூக கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார். இதன்போது ஜனாதிபதிக்காக மத வழிபாடு நடத்தப்பட்டு ஆசி வழங்கப்பட்டது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு21.09.2022
தேசிய சபையானது பாதிக்கப்பட்ட நாட்டை படிப்படியாக மீட்டுவரும் நிலையில் நீண்ட கால மற்றும் நடுத்தர நிலை பேறாண கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய சபை பங்காற்றும் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிட்டார். சபாநாயகர் மற்றும் அரச, எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்டு 9வது நாடாளுமன்றத்தில் 35உறுப்பினர்களைக் கொண்ட இத்தேசிய பேரவை தீர்வுகளைக் காண்பதற்காகவே அமைக்கப்படவுள்ளதாக தனது பாராளுமன்ற உரையில் அமைச்சர் நேற்று (20) தெரிவித்தார். குறுகிய மற்றும் நீண்ட காலப் பொருளாதார நிலமைகளை சீர்படுத்தல், இணக்கப்பாடுகளை எட்டுதல், … Read more
யாழ் மாவட்ட செயலகத்தில் உணவுக் கையிருப்பு பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைத்துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது. அனைத்து பிரஜைகளுக்கும் நாட்டில் நிலவும் எந்தவொரு நிலமையின் கீழும் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான போதுமான உணவினை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையை உருவாக்குதல் என்னும் நோக்கத்துடன் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (21) … Read more
கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான சவூதி அரேபியாவின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் சவூதி அரேபிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 செப்டம்பர் 16ஆந் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,கொழும்பு.2022 செப்டம்பர் 20
திறிபோஷவில் அல்பட்ரொக்சின் (Aflatoxins) எனும் புற்று நோய்க்காரணி காணப்படுவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என தான் பொறுப்புடன் கூறுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இப்பொய்யான குற்றச்சாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு செயலாளருக்குத் தான் பணித்துள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஒளடதங்கள் மற்றும் திறிபோஷ பற்றி வெளியாகும் செய்தி தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கெஹெலிய … Read more
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் நேற்று (20) சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் பொதுநலவாய செயலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார மற்றும் அபிவிருத்திக்கான இராஜாங்க செயலாளர் ஜேம்ஸ் கிளவெலி (James cleverly) ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வு கடந்த 18ஆம் திகதி சார்ளி இல்லத்தில் … Read more