தலைப்பு செய்திகள்
துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி
புதுடெல்லி, துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் ஐ.நா. உலக பருவநிலை உச்சி மாநாடு நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 97 ஆயிரம் பங்கேற்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு ஆர்வலர்கள் என மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்திய பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநாட்டில் கலந்து கொண்டார். தொடர்ந்து துபாய் பால்ம் பகுதியில் … Read more
Honda Cars – 2023 நவம்பரில் ஹோண்டா கார்ஸ் இந்தியா விற்பனை 24 % உயர்வு
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு நவம்பர் 2023ல் 24 % வளர்ச்சி அடைந்து 8,734 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 7,051 ஆக இருந்தது. ஹோண்டா எலிவேட் எஸ்யூவி இந்தியா மட்டுமல்லாமல் ஏற்றுமதி சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. Honda cars sales report November 2023 ஹோண்டா கார் ஏற்றுமதி நான்கு மடங்கு அதிகரித்து 3,161 யூனிட்களாக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 726 … Read more
தஞ்சாவூர்: தலைக்கேறிய மதுபோதை; தன்பாலின உறவில் ஈடுபடுத்தி, இளைஞர் கொடூரக் கொலை – இருவர் கைது
தஞ்சாவூர் அருகே உள்ள பசுபதிகோவில் பகுதியை சேர்ந்தவர் விஜய் (22). இவர் தெருவில் கிடக்கும் காலி மதுப்பாட்டில்கள் பொறுக்கி விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு பட்டித்தோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் கிடந்த காலி மதுப்பாட்டில்களை பொறுக்கியுள்ளார். அப்போது சூலமங்கலம் பகுதியை சேர்ந்த சரவணன் (32), பரணி (31), விக்னேஷ் (26)ஆகிய மூன்று பேரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர்கள், விஜயிடம் … Read more
அமலாக்கத்துறை அதிகாரிக்கு 15 நாள் சிறை… ED அலுவலகங்களில் DVAC ரெய்டு தொடரும்…
பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த விவகாரத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் திண்டுகல்லில் நேற்று கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறையைச் … Read more
சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.2 ஆயிரத்து 319 கோடி வருவாய் – தெற்கு ரெயில்வே
சென்னை, உள்நாட்டு சரக்கு போக்குவரத்தில் குறைந்த செலவிலும், விரைவாகவும் செல்லும் வகையில் ரெயில் போக்குவரத்து விளங்குகிறது. இந்த சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், சரக்கு போக்குவரத்து மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் அதாவது கடந்த 8 மாதங்களில் 26.082 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதன் மூலம், தெற்கு ரெயில்வே ரூ.2 ஆயிரத்து 319 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதேபோல, … Read more
உயர்நீதிமன்றம் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமணம் குறித்து பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் நடத்துவதையொட்டி அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “குழந்தை திருமணங்களை தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளது. 1929-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் 1978-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, பெண்களுக்கான திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயது வரம்பை 21 ஆக உயர்த்தும் வகையில் கடந்த 2021-ம் … Read more
நாளை உருவாகிறது 'மிக்ஜம்' புயல் – பலத்த மழை எச்சரிக்கை
சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமாா் 780 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரம்) தென்கிழக்கே சுமாா் 940 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இதைத் தொடா்ந்து, டிச. 5-ஆம் தேதி முற்பகல் … Read more
ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை : உச்சநீதிமன்றம்
டில்லி ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் முக்கியமாக, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. … Read more