முன்ஜாமின் கோரி விருபாக் ஷப்பா மனு அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு| Court refuses to hear Virupak Shabbas plea seeking anticipatory bail

பெங்களூரு: லஞ்ச வழக்கில் தலைமறைவாக உள்ள, பா.ஜ., – எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா, முன்ஜாமின் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க, நீதிபதி நடராஜன் மறுத்து விட்டார். மாடாலை கைது செய்ய லோக் ஆயுக்தா போலீசார், ‘மாஸ்டர் பிளான்’ வகுத்துள்ளனர். ”அவர் விரைவில் கைது செய்யப்படுவார்,” என, முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறி இருக்கிறார். தாவணகெரே மாவட்டம், சென்னகிரி பா.ஜ., – எம்.எல்.ஏ., மாடால் விருபாக் … Read more

77 ஓட்டங்களுடன் 3 விக்கெட்டுகள்! பெங்களூரு அணியை பந்தாடிய சிங்கப்பெண்

மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. ஹேலே மேத்யூஸ் மிரட்டல் பந்துவீச்சு பிரபோர்னே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் ஆடிய பெங்களூரு அணி 155 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ஓட்டங்களும், மந்தனா 23 ஓட்டங்களும் எடுத்தனர். மும்பை அணியில் தரப்பில் ஹேலே மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணியில், பவுண்டரிகளை விளாசிய ஹேலே … Read more

என் நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த வேகப்புயல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் சோகைல் தன்விர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் கடந்த 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் சோகைல் தன்விர். 62 ஒருநாள் போட்டிகள், 57 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தன்விர், 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. எனினும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். கடைசியாக குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக 2018/19 மற்றும் … Read more

குஜராத் கடல் பகுதிக்குள் அத்துமீறிய ஈரானிய கப்பல்: போதை பொருளுடன் 5 பேர் கைது| Iranian ship trespassing in Gujarat waters: 5 arrested

காந்திநகர்: போதை பொருளுடன் குஜராத் கடல்வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற ஈரான் நாட்டு மீன்படி கப்பலை கடலோர காவல்படையினர் நள்ளிரவில் தடுத்தி நிறுத்தினர். நேற்று குஜராத்தின் அரேபிய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறிய மீன்பிடி படகு இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறிநுழைவதை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். படகில் 5 பேர் இருந்தனர். படகில் 62 கிலோ போதை பொருள் இருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. … Read more

அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம்! தற்கொலைக்கு முன் காதலிக்கு பிரித்தானிய இளைஞர் அனுப்பிய குறுந்தகவல்

பிரித்தானியாவில் 19 வயது இளைஞர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கார் விபத்தை ஏற்படுத்திய இளைஞர் கடந்த 4ஆம் திகதி லங்காஷைரின் சாம்லெஸ்பரிக்கு அருகில் Ford Fiesta என்ற கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரை ஓட்டிய அலெக்ஸ் டைசன் (19) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார், குறித்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது 88 … Read more

முதல் முறையாக சியாச்சின் சிகரத்தில் பெண் ராணுவ வீராங்கனை நியமனம்| For the first time, a woman soldier has been appointed to Siachen Peak

புதுடில்லி: முதன் முறையாக பெண் ராணுவ வீராங்கனை ஷிவா சவுகான் என்பவர் சியாச்சின் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். உலகின் மிக உயரமான போர்க்களமாக சியாச்சின் பனி சிகரம் கருதப்படுகிறது. இங்கு, ஆண்டு முழுவதும், ‘மைனஸ் டிகிரி’யில், கடும் குளிர் வாட்டி வதைக்கும். இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்நிலையில் இங்கு ஷிவா சவுகான் என்ற பெண் வீராங்கனை ராணுவ கேப்டனாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். முதன்முதலாக இப்பகுதியில் பெண் வீராங்கனை பணியமர்த்தப்பட்டுள்ளது … Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய ரொனால்டோ

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ நிவாரணப் பொருட்களை அனுப்பினார். உலகப் புகழ்ப்பெற்ற போர்ச்சுகல் கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட விமானத்தை அனுப்பியுள்ளதாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 7.8 மற்றும் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இரு நாடுகளையும் உலுக்கியத்தில், 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சோக சம்பவம் நடந்த உடனேயே சர்வதேச சமூகத்தின் உதவிகள் குவியத் … Read more