மாற்றுத்திறனாளி பொருளாதாரத்தில் நலிவடைந்த 54 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளி பொருளாதாரத்தில் நலிவடைந்த 54 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திருமணம் நடத்தி வைத்தார்.  மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் 54 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார். மணமக்களின் கனவுகள் நிறைவேற முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யலாமா?

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட், வாக்கிங் செய்யலாமா? வொர்க் அவுட் செய்யும் முன்பும், செய்த பிறகும் சாப்பிட வேண்டிய விஷயங்கள், பற்றி சொல்லுங்கள். பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் ஷீபா தேவராஜ் வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. ஒரு காருக்கு எப்படி பெட்ரோல் போட்டால்தான் வண்டி இயங்குமோ, அதுபோல உடல் இயக்கத்துக்கும் எரிபொருள் அவசியம். எனவே வாக்கிங், ஜிம்மில் செய்கிற வொர்க் அவுட் என … Read more

டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீட்பு

வாஷிங்டன்: ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில், டிரம்பிற்கு மீண்டும் அவரது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து ஆன்லைனில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திவிட முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இடஒதுக்கீடு என்ற நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட நாள் இந்நாள் என்று முதல்வர் கூறியுள்ளார்.

மதுரை: தவறான சிசிச்சையால் இறந்தாரா குழந்தை பெற்றெடுத்த பெண்? – உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசு உடனே தலையிட்டு சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தது மட்டுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்கியுள்ளது. மரணமடைந்த கனிமொழியின் தாய், கணவர் இதேபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண், மரணமடைந்த சம்பவத்தில் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் 3 குழந்தைகளுடன் … Read more

கேட் மிடில்டனை முந்தி காட்டுகிறேன்! மேகன் மெர்க்கல் வகுத்துள்ள பலே திட்டம்

மேகன் மெர்க்கல், அமெரிக்கர்களின் மனதை வெல்வதற்கும் கேட் மிடில்டனை விட அந்நாட்டு மக்களிடையே பிரபலமாக மாறுவதற்கும் பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் நேசிக்கப்படும் கேட் மிடில்டன் பிரித்தானியாவில் அதிகம் நேசிக்கப்படும் கேட் மிடில்டன், அமெரிக்காவிலும் மேகன் மெர்க்கலை விட இரண்டு மடங்கு பிரபலமாக உள்ளார் என Express UK தெரிவித்திருக்கிறது. சமீபத்திய ஆய்வில், மேகன் மெர்க்கலை விட கேட் மிடில்டன் மிகவும் பிரபலமானவர் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேகன் மெர்க்கல் அமெரிக்கர்களை கவர்ந்து அவர்களின் மனதை … Read more

மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை கடந்து தற்போது மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது.

குடிபோதையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை, பேரவள்ளூர் பகுதியில் நேற்று இரவு குடிபோதையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்துள்ளனர். குடிபோதையில் மதுபான கூடம் அருகே பொதுமக்கள் இருவரை அரிவாளால் வெட்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கிஷோர், அருண் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உங்களை விட எங்களுக்கு வேதனை அதிகம்! உலகக்கோப்பை தோல்வி குறித்து அஸ்வின் கருத்து

உலகக்கோப்பை தோல்வி குறித்த விமர்சனங்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார். 300 மடங்கு வேதனை டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதன் விளைவாக இந்திய அணி மீது ரசிகர்கள் இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தமிழக வீரர் அஸ்வின் சமீபத்திய வீடியோ ஒன்றில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்தார். @Getty Images அவர் கூறுகையில், ‘இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் … Read more